தமிழீழம் முக்கிய செய்திகள்

"தமிழ் இன விடுதலை வீரர்களை நினைவுகூருங்கள்" – தமிழீழ எல்லாளன் படை

மாவீரர் நாள் 2012 தொடர்பாக தமிழீழ எல்லாளன் படை விடுத்துள்ள வேண்டுகோளில் தமிழ் இனத்தின் விடிவுக்காக தம் உயிர்களை தியாகம் செய்த புனிதமான மாவீரர்களை மனதில் நிறுத்தி அஞ்சலி செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கnhள்வதாகவும் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டுள்ளதே தவிர ஆயுத போராட்டம் முடிக்கப்படவில்லை மீண்டும் வருவோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைகாலத்தில் எல்லாளன் படையால் மக்களுக்கு தொடர்ச்சியாக வேண்டு கோள்கள் விடுக்கப்பட்டுவருவது எதிரிகளுக்கு மட்டுமல்ல புல்லுருவிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்திவருவதைக் காணக்கூடியதாக உள்ளது. தமிழ் தேசியத்தின் சொத்துக்களை முடக்குவதற்காக துரோகப்பட்டம் கொடுப்பதை நிறுத்துமாறும் இந்த வருட இறுதிக்குள் தமிழ் அமைப்புக்களை ஒற்றுமைப்படுமாறும் அண்மையில் தமிழீழ எல்லாளன் படை விடுத்த வேண்டுகொள் டென்மார்க்கிலும் பலரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.