யாழ் பல்கலைகழக மாணர்வர்கள் மீதான தாக்குலை கண்டிக்கின்றோம் – தமிழ் இளையோர் நடுவம் டென்மார்க்

Home » homepage » யாழ் பல்கலைகழக மாணர்வர்கள் மீதான தாக்குலை கண்டிக்கின்றோம் – தமிழ் இளையோர் நடுவம் டென்மார்க்

தமிழீழ தேசிய மாவீரர் நாளான நேற்று யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிகளிற்குள் கதவுகளை உடைத்து பலாத்காரமாக உள்நுழைந்த சிறிலங்கா ஆக்கிரமிப்பு படையினர் மாணவர்களின் தலைகளில் துப்பாக்கிகளை வைத்துக் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் விடுதியினையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். சிறிலங்கா படைகளின் தாக்குதல்களை கண்டித்து அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்ட மாணவர்கள் மீது பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் குவிக்கப்பட்டிருந்த சிறிலங்கா படையினரும் காவல்துறையினரும் ஈவிரக்கமற்ற தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தொடர்பான செய்திகளை சேகரிக்கச் சென்ற ஊடகவியளார்களும் சிறிலங்கா ஆக்கிரமிப்பு படையினரின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா ஆக்கிரமிப்பு படையினரும், காவல்துறையினரும் கூட்டாக மேற்கொண்ட இக் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை டென்மார்க் தமிழ் இளையோர் நடுவம் வன்மையாகக் கண்டிக்கின்றது. தமிழீழத்தின் எதிர்காலச் சிற்பிகளான எமது சக இளையோர் மீது ஆக்கரமிப்பு படையினர் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதல்களை டென்மார்க் அரசிடமும் அனைத்துலக சமூகத்திடமும் நாம் முறையிடவுள்ளோம.; அதேநேரம் டென்மார்க்கில் வாழும் தமிழ் இளையோர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழ பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பை வலியுறுத்துவதுடன் தமிழீழ மாணவர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கவும் எம்முடன் இணைந்து செயலாற்ற வருமாறு வேண்டுகின்றோம்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது சிறிலங்கா படைகளினால் நடாத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்களை அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்புக்கள் கண்டிப்பதுடன் தாம் வாழும் நாட்டு அரசுகளின் கவனதிற்கும் கொண்டு செல்லுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்

தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம்

தமிழ் இளையோர் நடுவம் – டென்மார்க்

Comments Closed

%d bloggers like this: