ஈழத்து இளைஞர்களை காக்க களத்திலும் புலத்திலும் தாமதமின்றி ஒருங்கிணையும் வரலாற்று நிமிடமிது!

Home » homepage » ஈழத்து இளைஞர்களை காக்க களத்திலும் புலத்திலும் தாமதமின்றி ஒருங்கிணையும் வரலாற்று நிமிடமிது!

வடகிழக்கு மண்ணை பல வகைகளில் ஒடுக்கிய இலங்கை அரசு நடப்பு நாட்களில் கல்விக் கூடங்களை சிதைத்து எம்மினத்தின் அமைதியை சீர்குலைக்க நினைக்கும் பகைவனிடம் இருந்து எம் எதிர்கால சமூகத் தலைவர்களை காக்கும்..

..தார்மீக கடப்பாடு களத்திலும் புலத்திலும் உள்ள சகல உடன்பிறப்புக்களையும் சாரும் என வட-கிழக்கு எல்லைகளற்ற மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஒன்றியம் விடுத்துள்ள அவசர அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாவது.

கடந்த 27.11.2012 அன்று உலகத் தமிழர்கள் மனங்களில் மிகவும் புனிதத்துடன் நினைவு கூரப்பட்ட மாவீரர் நாள் சகலரும் நன்கறிவர் இன் நாள் இன்று வரை உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தது காரணம் ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலைக்காக போராடி உயிர் தியாகம் செய்தமை ஆகும்.

இவ்வாறான காலப்பின்னணியில் அகிலத்தின் கவனத்தை ஈர்த்துள்ள இன் நாள் வட-கிழக்கு மக்களால் நினைவு கூர முடியாத அளவுக்கு அரச இயந்திரம் தனது அதி உச்ச ஒடுக்கு முறையை பல வகைகளில் பிரயோகிப்பது மட்டுமன்றி, பாசிச நடைமுறையில் மனித குலத்திற்கு எதிரான வகையில் கல்விக் கூடங்களுக்குள் நுழைந்து குண்டாந்தடியுடன் தடி அடி பிரயோகம் நடாத்தி மாணவர்கள் மீது மிலேச்சத் தனமான தாக்குதல் நடந்ததை யார் தான் அனுமதிக்க முடியும்.

இறந்த உடன் பிறப்புக்களை நினைந்து ஒரு சுடர் ஏற்ற அனுமதியா அவ் அரசின் நிலையை தோல் உரித்து காட்டும் பாரிய கடப்பாடு சகல தமிழ் உறவுகளையும் சாரும். இதை நாம் சகலரும் நன்கறிந்து இத் தர்னத்தை உணர்ந்து செயற்படும் கடமை சகலரையும் சாரும்.

எம்மினத்தின் உரிமை மீட்கும் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து எம்மீது பல வகைகளில் பலவந்த அதிகார திணிப்புக்களை நடாத்தியும் வெற்றியடையா நிலையில் இன்று மாணவர்கள் மீது தமது இராணுவ புலனாய்வு பயங்கரவாதத்தை பிரயோகிப்பது எதற்காக.

மிகவும் அநாகரிகமான முறையில் யாழ். பல்கலைக்கழகத்தின் உள்ளும் வெளியும் மாணவர்களை தாக்கி நிந்தித்தது மட்டுமன்றி நியாயமற்ற கைதுகளுக்கும் நியாயம் கோட்கும் உரிமையும் கடமையும் எம் அனைவருக்கும் உள்ளது.

வட-கிழக்கில் யாழ்ப்பாணம் தொடங்கி பொத்துவில் வரைக்கும் அமைதி முறையில் உரிமை கேட்கும் பாரிய கடமை எம் ஒவ்வெருவரிடமும் உள்ளதை உணர்ந்து செயற்படும் நிமிடங்களை சரியாக பயன் படுத்துவதும் நாட்களை இன்று நிறுவுவது சாலச்சிறந்தது என்பதுடன் ஒழுங்குபடுத்தும் உரிமை மீட்கும் சாத்வீக போராட்டத்திற்கு எம் ஆதரவுகளை எவ்வித எதிர்பார்ப்புக்களும் இன்றி வழங்குவது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும் என்பதை உணர்வது எமது உயிர் துடிப்பாகும்.

இன்றைய நிலையில் உலகின் கவனத்தை ஈர்த்துள்ள எம் இன அழிப்பிற்கு நியாயம் கேட்கும் புலம்பெயர் உறவுகள், இளையோர் அமைப்புக்கள் தாம் உள்ள இடத்தில் இருந்து செயற்படுத்தி வரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் ஓரளவு மனதிற்கு ஆறுதலைத் தந்தாலும் இவ்வாறான போராட்டங்கள் பல முனைகளில் வீரியம் அடைந்து எம்மீது இலங்கை அரசு விரல் நீட்டும் போது அச்சப்படும் அளவுக்கு ஒற்றுமையாக ஓரணியில் தாம் உள்ள நாடுகளில் ஒரு குடையின் கீழ் நின்று எம் அநீதிக்கு நியாயம் கேட்க தவறாமல் ஒருங்கமைவதனை உலகிற்கு எடுத்துரைக்கும் இறுதி நிமிடங்களை உலக ஒழுங்கில் சரியாக பயன்படுத்திடுவோம்.

மக்கள் விடுதலை முன்னணி அரசுக்கு எதிராக போராடி மடிந்த வீரர்களை கார்த்திகை வீரர்கள் தினம் என அனுஷ்டிக்க அனுமதிக்க இவ் அரசால் முடியுமாக இருந்தால் ஏன் எம் இன வீரர்களை நினைந்து பார்க்க முடியாது.

இவ்வாறான இன ரீதியான ஒடுக்கு முறையும் பாகுபாடும் அதிகரித்துள்ள நிலையில் எம் இனத்தின் தீர்வை எட்டும் தருணத்தில் எம் மண்ணின் கல்வியியலாளர்களை காத்து உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்த பலத்தை பன் மடங்கில் பிரயோகித்து எம் உரிமை மீட்க காலங்கள் தாழ்த்தாது கூடிடுவோம் ஒன்றாய்.

வட-கிழக்கு எல்லைகளற்ற மாணவர் ஒன்றியம்

Comments Closed

%d bloggers like this: