அனைத்துலகம்

நோர்வேயில் பிள்ளைக்கு அடித்த இந்திய தம்பதிகளுக்கு சிறைத்தண்டனை !

தமது பிள்ளைக்கு அடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நோர்வேயின் வதிவுரிமை கொண்ட இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த சந்திரசேகருக்கு 18மாதங்களும் அவரது மனைவி அனுபமா சந்திரசேகருக்கு 15மாதங்களும் நோர்வே நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

அத்தம்பதிகளின் 7வயது மகன் தனது பெற்றோர் தனக்கு அடிப்பதாக பாடசாலையில் ஆசிரியர்களிடம் முறைப்பாடு செய்திருந்தார். இந்த முறைப்பாட்டையடுத்து அச்சிறுவனை நோர்வே சிறுவர் காப்பகம் பொறுப்பெடுத்து கொண்டது. எனினும் அச்சிறுவனை தமது நாட்டிற்கு கொண்டு சென்று விட்டு மீண்டும் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைப்பதாக கோரியதையடுத்து அச்சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

இவர்கள் இந்தியாவுக்கு சென்ற நிலையில் நோர்வே ஒஸ்லோ நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பிள்ளைகளை இந்தியாவில் உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு ஒஸ்லோ நீதிமன்றில் ஆஜரான இவர்களுக்கு சிறுவனை துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த தம்பதியர் தமக்கு வழங்கப்பட்டதீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கும் தீர்மானித்துள்ளனர்.