ஒன்றுபட முனைந்த பரிதியும் அதை தடுத்து நிறுத்தப் போராடிய ரகுபதியும்,தனமும்?

Home » homepage » ஒன்றுபட முனைந்த பரிதியும் அதை தடுத்து நிறுத்தப் போராடிய ரகுபதியும்,தனமும்?

atpசாத்திரி அவர்கள் எழுதும் கட்டுரையை காலத்தின் தேவை கருதி இங்கு பிரசுரிக்கிறோம். தலைமைச் செயலகம், நாடு கடந்த அரசு, அனைத்துலகச் செயலகம், ஆகியன ஒன்றிணைந்து புலம் பெயர் தேசங்களில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை நகர்த்தவேண்டும் என கடந்த வருடம் தொடராக பிரான்சில் நடந்த பேச்சு வார்த்தைகளில் சிலதில் நானும் கலந்து கொண்டிருந்தேன் அந்த பேச்சு வார்த்தைகள் அனைத்துலக செயலகத்தின் அடம் பிடிப்பால் தோல்வியில் முடிந்து போக, நானும் பின்னர் அது பற்றிய அக்கறை கொள்ளவில்லை, ஆனால் இந்த வருடமும் தொடர்ந்த முயற்சியில் பேச்சு வார்த்தை நடாத்திய இரண்டு தரப்பும் பேசியவை அது பற்றிய விபரங்களை பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட இரு தரப்பினரோடும் இரு தரப்பிற்கும் மத்தியஸ்த்தம் வகித்தவரிடமும் அறிந்து கெண்டேயிருந்தேன்.

பரிதி சுடப்படுவதற்கு மூன்று வாரங்களிற்கு முன்னர் முதலாவது பேச்சுவார்த்தை பாரிஸ் 18 Marcadet Poissonnier என்னமிடத்தில் குமார் என்பவரது உணவகத்திலேயே நடந்தது,குமார் என்பவர் மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல கடந்த காலங்களில் பிரான்சில் மாவீரர் குடும்பங்களின் விபரங்களை திரட்டி அவர்களை கெளரவிக்கும் பொறுப்பிலும் இருப்பபவர் அனைத்து தரப்பும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என பாடு படுவதோடு அதற்கான பேச்சு வார்த்தை முன்னெடுப்புக்களை தொடர்ந்தும் முன்னெடுக்கும் ஒருவர், இவரது கடையிலேயே அனைத்துலகம் சார்பில் பரிதியும் தலைமை செயலகம் சார்பில் தமிழரசனும் பேசத் தெடங்கினாரகள்,,

இங்கு பேச்சு வார்த்தை தொடக்கத்தில் தமிழரசன் முன்று கோரிக்கைகளை அடிப்படை கோரிக்கைகளாக முன்வைக்கிறார் அவை

1* புலம்பெயர் தேசங்களில் இயங்குகின்ற ஏனைய அமைப்புக்கள் உதாரணத்திற்கு நாடு கடந்த தமிழீழ அரசு ,உகத்தமிழர் பேரவை போன்றனவற்றின் செயற்பாடுகளை குழப்பபாமல் அவர்களிற்கும் ஆதரவு அளித்து அவர்களோடு பயணித்தல்,அல்லது ஆதரவு அளிக்காவிட்டாலும் குறைந்த பட்சம் குழப்பாமல் விடுதல்.அதே நேரம் வெறுமனே மாவீரர் தினத்தையும் விழையாட்டு போட்டிகளையும் மட்டும் நடத்திக்கொண்டிராமல் இலங்கையரசின் போர்க்குற்றம் மீதான விசாரணைகள் மற்றும் தாயக மக்களின் சுதந்திர வாழ்விற்காவும் தொடர்ந்து போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்தல்,

2* தற்போது உள்ள சூழலில் தாயகத்தோடு தொடர்பு இல்லாமல் வெளிநாடுகளில் மட்டுமே பரப்புரைகளை மேற்கொள்வது எமது போராட்டங்களிற்கு பலம் சேர்க்காது, எனவே தாயகத்தில் பல குழப்பங்களோடு இயங்கிக் கொண்டு இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து அவர்களையும் சீரமப்பதற்கான அழுத்தங்களை கொடுத்து அவர்களோடு தொடர்புகளை பேணியபடி அரசியல் ரீதியாக புலம்பெயர் மக்களையும் இணைத்து சரியான பாதையில் பயணிப்பது

3* போரால் பாதிக்கப்பட்ட போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களிற்கு முன்னுரிமைகொடுத்து பராமரிப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதற்கான திட்டமிடல்களை மேற்கொண்டு அவற்றை நடை முறைப்படுத்துதல்

இந்த மூன்று கோரிக்கைக்கும் அனைத்துலகச் செயலகம் இணங்கும் பட்சத்தில் தலைமைச் செயலகத்துடன் இணைந்து ஒரு கூட்டறிக்கை தயாரித்து ஊடகங்களிற்கு அறிவித்துவிட்டு சேர்ந்து இயங்லாம் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது,

இந்த கோரிக்கைகளிற்கு பரிதி அவர்கள் அளித்த பதில்கள் என பார்ப்போம்!

1* முதலாவது கோரிக்கைகான பதில் நாடுகடந்த அரசை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் காரணம் அவர்கள் கே.பி யால் தொடக்கப்பட்டவர்கள். இலங்கையரசுடன் வேலை செய்கிறார்கள் துரோகிகள், துரோகிகளுடன் இணையமாட்டோம் என்றும், உலகத் தமிழர் பேரவையானது செயற்பாட்டில் இல்லை அவர்கள் செயற்படும்போது அது தொடர்பில் யோசிக்கலாம் என்பது

2* இரண்டாவது கோரிக்கைக்கான பதில், தமிழ் தேசிய கூட்டமைப்பை நம்ப முடியாது அவர்களும் துரோகிகள், அதனால் நாங்கள் புதிதாக ஒரு ஒரு அரசியல் கட்சியை உருவாக்குவதோடு வெறுமனே அரசியலோடு மட்டும் நிற்காமல் அடுத்த கட்ட ஆயுதப்போரை தொடங்குவதற்கான ஆயத்த வேலைகளிலும் இருக்கிறோம் விரைவில் ஆயுதப்போர் தெடங்கும் என்றும் தெரிவித்தார்,

3* மூன்றவதான மாவீரர் குடும்பங்கள் மக்களின் வாழ்வாதாரங்கள் பற்றிய கோரிக்கைக்கு பரிதியின் பதில் அதைப்பற்றி எங்களிற்கு தெரியும், முதலில் மக்களின் விடுதலை பிறகு மற்றவற்றை பாக்கலாம் என்றதுதான் அனைத்துலக செயலகத்தின் நிலைப்பாடாக இன்றும் இருக்கிறது!

நடைமுறைக்கு சாத்தியமற்ற வில்லங்கமான பரிதியின் பதில்களால் மத்தியஸ்த்தம் வகித்தவர்கள் ஆத்திரமடைந்து வில்லங்கமான பதில் தராமல், இன்றைய காலச் சுழல்களை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு யோசித்து பதில் தருமாறு கூறிவிடுகிறார்கள், அதைத் தொடர்ந்து பரிதி கோபமாக அங்கிருந்து வெளியேறிவிடுகிறார், ஆனலும் பேச்சு வார்த்தை முயற்சியில் ஈடுபட்டவர்கள் விடுவதாயில்லை இந்த வருடம் எப்படியாவது அனைவரையும் இணைத்து மாவீரர் தினத்தை கொண்டாடுவதோடு ஒற்றுமைபப்படுத்தி விடவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தவர்கள், பரிதியோடு தொடர்ந்து பேசினார்கள், கடந்த முறையைப்போல எவ்வித நிபந்தனைகளும் விதிக்காவிட்டால் ஒற்றுமையை பற்றி பேசலாம் என்று விட்டார், அதற்கு மத்தியஸ்த்தம் வகித்தவர்களும் தலைமை செலகத்தை சேர்ந்தவர்களும் சம்மதித்தனர்.

சரியாக ஒரு வாரம் கழித்து மீண்டும் அதே கடையில் பலர் முன்னிலையில் இருதரப்பும் பேசியது , நிபந்தனைகள் இன்றி இரு தரப்பும் ஒற்றுமையாக செயல்படவும் ஒன்றாக மாவீரர் தினத்தை கொண்டாடுவது எனவும் தொடர்ந்தும் அடுத்த நடிவடிக்கைகள் போராட்டங்களை இணைந்தே முன்னெடுப்பது என்பதற்கு பரிதி சம்மதம் தெரிவித்தார், பேச்சு வார்த்தையை ஏற்பாடு செய்தவர்களிற்கும் பெரும் மகிழ்ச்சி, பேச்சுவார்த்தை வெற்றி என்கிற செய்தி தொலைபேசி முலமாக அனைவரிற்கும் பரிமாறப்படுகின்றது, எனது கைத்தொலை பேசியும் உதறியது, இரு தரப்பும் தனித்தனியாக அறிக்கை தயாரிப்பது என்றும் அதனை பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்தவர்களோடும் இணைந்து சரிபார்த்து விட்டு கூட்டறிக்கையாக்கி ஊடகங்களிற்கு அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது, பரிதியும் கைகுலுக்கி மகிழ்ச்சியோடு விடை பெற்றார்கள்,

ஆனாலும் பேச்சு வார்த்தையை ஒழுங்கு செய்தவர்களிற்கு எல்லாமே திட்டமிட்டபடி நடக்குமா என்கிற சந்தேகம் இருக்கத்தான் செய்தது காரணம் 2009 ம் ஆண்டு புலிகள் அமைப்பின் ஆயுதப்போர் முடிவிற்கு வந்த பின்னர் நாடு கடந்த அரசு தொடங்கப் பட்டதிலிருந்து, வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பு என்று தொடங்கி 2010 ம் ஆண்டு மாவீரர் நாளன்று தமிழீழ தேசியத் தலைவரின் வீரச்சாவை அறிவித்து, அவரிற்குரிய மரியாதையை செலுத்தவேண்டும் என பலர் மேற்கொண்ட முயற்சிகள் வரை அனைத்திலுமே அனைத்துலகச் செயலகம் ஆரம்பத்தில் ஒத்துவருவது போல போக்கு காட்டிவிட்டு கடைசி நேரத்தில் காலை வாரிவிடுவது அவர்களது வழக்கமாக இருந்தது.

அதைப் போலவே இந்தத் தடைவையும் கடைசி நேரத்தில் காலை வாரிவிடுவார்களா? என்கிற சந்தேகத்தில் இரு தரப்பையும் தொர்பு கொண்டு அறிக்கையின் முன்னேற்றம் பற்றி அறிந்து கொள்கிறார்கள்: ஆனால் அவர்கள் பயந்தது போல் நடந்தே விட்டிருந்தது, இரண்டு நாள் கழித்து தமிழரசனோடு தொலைபேசியில் தொடர்பு கொண்ட பரிதி, ஊடக அறிக்கை ஒண்டும் வேண்டாம் மற்றைய நாட்டு பொறுப்பாளர்களும் இரும்பொறையும் அதற்கு ஒத்து வருகிறார்கள் இல்லை நாங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் இணைந்து செயற்படுவோம் என்கிறார், மீண்டும் தேவாங்கு தென்னை ஏறப்போவதை (எத்தனை நாளைக்குத்தான் வேதாளம் மட்டும் முருங்கையில் ஏறுவது) பேச்சு வார்த்தை ஏற்பாட்டாளர்களிற்கு அறிவிக்கிறார்,

குமார் உட்பட மேலும் பலர் பரிதியை தொடர்பு கொண்டு கூட்டறிக்கை விடவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார்கள், காரணம் கூட்டறிக்கை ஒன்று வந்தால்தான் பிரான்சை முன்னுதாரணமாக எடுத்து மற்றைய நாடுகளிலும் இணைப்புக்களை ஏற்படுத்தலாம், அல்லது மற்றைய நாடுகளில் தொடர்ந்தும் மாறி மாறி துரோகி பட்டங்கள் வழங்குவது தொடரும், அடுத்ததாக எம்மவர்களிற்குள் உள்ள சிறிய பிழவுகளை வைத்துக்கொண்டு எதிரியானவன் அதற்குள் புகுந்து பிழவுகளை வலுப்படுத்தி மோதல்களை ஊக்கிவித்து எம்மை கொண்டே, எம்மை அழிக்கும் வேலையை செய்து முடிப்பான், எனவே இந்த கூட்டறிக்கையானது நிச்சயம் எதிரிக்கு ஏமாற்றத்தை கொடுக்கும், எனவே கூட்டறிக்கை அவசியம் என்று வலியுறுத்தியதோடு மீண்டும் நவம்பர் மாதம் 11 ந்திகதி சந்திப்பு ஒன்றை நடத்துவதோடு அறிக்கையயும் வெளியிடுவதென உறுதியாக சொல்லி விட்டார்கள்,

அதற்கிடையில் பிரான்சில் தான் மற்றைய அமைப்புக்களோடு இணைந்து இயங்கப்போவதாக மற்றைய நாட்டு அனைத்துலகப் பொறுப்பாளர்களிற்கும் பரிதி அறிவித்து விடுகிறார், உடனடியாகவே இலண்டன் பொறுப்பாளர் தனத்திடம் இருந்தும், சுவிஸ் பொறுப்பாளர் ரகுபதியிடம் இருந்தும் எதிர்ப்பு கிழம்புகின்றது, அதுமட்டுமல்ல அவர்கள் உடனடியாக இரும்பொறை (அரவிந்தன் இவர்தான் நெடியவன் மற்றும் வாகீசன் ஆகியோர் கைதான பின்னர் அனைத்துலகத்தை வழி நடத்தும் முக்கியமானவர்,என கருதப்படுபவர் ) என்பவரை தொர்பு கெண்டு பிரான்சில் பரிதியின் இணைவை எப்படியாவது தடுத்து நிறுத்தும்படியும் அப்படி அங்கு இணைந்தால் அதே முன்னுதாரணமாகி அனைத்து நாடுகளிலும் அனைவரோடும் இணையவேண்டி வரும், பின்னர் கணக்கு வழக்கு எல்லாம் காட்டவேண்டி வரும், ஒன்றிணைவை எப்படியாவது நிறுத்தி விடுமாறு கூறிவிடுகிறார்கள், பரிதியுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு இணையவும் வேண்டாம், அறிக்கையும் விடவேண்டாம் என இரும்பறை குட்டியின் திட்டப்படி செயற்படுமாறு பருதிக்கு தெரிவிக்கிறார்.

ஆனால் தான் இக்கட்டான நிலையில் இருப்பதாக பரிதி தெரிவிக்கிறார், ஒன்றிணைவை எப்படியாவது தடுத்து நிறுத்திவிடவேண்டும் என்கிற நோக்கோடு யேர்மனியில் இருந்த இரும்பொறை பாரிசிற்கு அவசரமாக விரைகிறார், அன்று இரவு பரிதி சுட்டுக்கொல்லப் படுகின்றார்,,

அடுத்தபாகத்துடன் முடிவடையும்…

-சாஸ்த்திரி

Comments Closed

%d bloggers like this: