டென்மார்க் முக்கிய செய்திகள்

டக்கிளஸ் ஊடாக தாயக மக்களுக்கு உதிவி வழங்கும் டென்மார்க் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

Thinakkural_Child_10-9-09டென்மார்க் அரசால் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் வங்கி கணக்குகள் 2008ம் ஆண்டு முடக்கப்பட்டதும் உலகச் சிறுவர் காப்பகம் என்னும் அமைப்பு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் (டென்மார்க் கிளை) உருவாக்கப்பட்டது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கணக்குகள் முடக்கியதற்கான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லாதமையால் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு எதிரான வழக்கு கடந்த ஆண்டு தள்ளுபடிசெய்யப்பட்டது.

உலகச் சிறுவர் காப்பகத்திற்கும் தமிழ்ர் புனர்வாழ்வுக் கழகத்திற்கும் எதுவித தொடர்புகளும் இருக்கவில்லை. மாறாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு போட்டியாகவே இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதாக பலரும் கருதினர்.

உலகச் சிறுவர் காப்பகமானது தமிழர் ஒருங்கிணப்பு குழுவின் மற்றய அமைப்புக்கள் போன்றே வெளிபடைத்தன்மை அல்லாத ஒரு சர்வாதிகார அமைப்பாகவே செயற்பட்டது. இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை வெளிப்படையான எந்த ஒரு பொதுக்கூட்டமும் நடைபெறவில்லை. இந்த அமைப்பின் நிhவாகத்தில் இருப்பவர்கள் யார் என்பது பொதுமக்கள் எவருக்கும் தெரியாது. எமக்கு கிடைத்த ஒரு தகவலின் படி கடந்த வருடம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஒருவர் சில நபந்தனைகளுடன் பொறுப்பை ஏற்றுக்கொணடுள்ளார். ஆனால் தொடர்ந்து உலகச் சிறுவர் காப்பகத்தின் பொறுப்பாளராக இருப்பது தனது தனிப்பட்ட பெயருக்கு களங்கமாக அமையும் எனக்கூறி பின்பு வெளியேறியுள்ளார். உலகச் சிறுவர் காப்பகத்தின் இணையத்தளத்திலும் நிர்வாகம் தொடர்பாக எந்த தகவலும் இல்லை.

உலகச் சிறுவர் காப்பகம் 20008ம் ஆண்டிலிருந்து செயல்படுகின்ற போதும் கணக்காய்வு செய்யப்பட்ட எந்த ஒரு கணக்கறிக்கையும் வெளியிடப்படவில்லை.

இந்த அமைப்பின் இணையத்தளத்தில் உள்ள தகவலின் அடிப்படையில் அல்லலுறும் தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக மட்டும் இந்த அமைப்பு உருவாக்கப்படவும் இல்லை.

2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதும் உலகச் சிறுவர் காப்பகமானது ஈபிடிபியின் கொழும்பு இணைப்பாளர் பாபுசர்மா ஊடாக மகேஸ்வரி அறக்கட்டளைக்கு பணம் அனுப்பியுள்ளனர். இவர்கள் முதல் கட்டமாக அனுப்பிய உதவிகள் ஆயுததாரி டக்ளஸ்தேவானந்தாவால் மக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த விடயம் தினக்குரல்; பத்திரிகையில் வெளியாகியும் இருந்தது. பத்திரிகையில் வந்த செய்தியை பாபுசர்மா பதிவெடுத்து உலகச் சிறுவர் காப்பகத்திற்கும் ஈபிடிபியின் புலம்பெயர் நாடுகளில் உள்ள இணைப்பாளர்களுக்கும் மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருந்தார். விடயம் அம்பலமாகியதும் மேலதிக உதவிகளுக்கான செய்திகள் எதுவும் ஊடகங்களில் வெளியாகவில்லை.

2009ம் ஆண்டு உலகச் சிறுவர்காப்பகம் நடாத்திய ஒரு நிகழ்வில் டென்மார்க் அகதிகள் சபையில் வேலை செய்யும் தமிழ் தேசியத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் ஒருவர் சிறிப்பு அதீதியாக அழைக்கப்பட்டு அகதிகள் சபைக்கு உதவிப்பணம் அவரிடம் மேடையில் வழங்கப்பட்டிருந்தது.

இப்பொழுது தமிழ் நாட்டில் இருந்து கலைஞர்களை அழைத்து நிதி சேகரிப்பை அடிப்படையாக கொண்டு மாபெரும் கலை நிகழ்வு ஒன்று நடாத்தப்படுகின்றது. நிகழ்விற்கான நுளைவுச் சீட்டுக்கள் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் நடாத்தப்படும் மாலதி கலைக்கூடத்தின் பொறுப்பாளர்களினால் வீடு வீடாக விற்பனை செயயப்படுகின்றது.

இதனூடாக பாரிய நிதி சேகரிப்பு ஒன்று தமிழர் ஒருகிணைப்பு குழுவால் மேற் கொள்ளப்படுகின்ற போதும் இந்த நிதியும் மகேஸ்வரி அறக்கட்டளையூடாகவா அனுப்பப்படும் என்பது எவருக்கும் தெரியாது. அத்துடன் இந்த நிதிக்கான கணக்கறிக்கை ஊடகங்களில் வெளியிடப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

கணக்கறிக்கையையோ அல்லது எதற்காக ஈபிடிபி ஒட்டுக்குழு ஊடாக மக்களுக்கு உதிவி செய்ய வேண்டும் என கேள்வி கேட்பவர்கள் வழமைபோன்று தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் துரோகியாக அறிவிக்கக்கூடும் என்பதால் விபரம் தெரிந்த அனைவரும் மௌனம் காக்குகின்றனர்.

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் மாலதி கலைக்கூடத்தினால் விற்பனையாகிய 200குறோண்களுக்கான இந்த நுளைவுச் சீட்டை வாங்கிய ஒருவர் கருத்து கூறுகையில் தான் வரும் கோடைவிடுமுறைக்கு தாயகம் செல்லவிருப்பதாகவும் அப்போது யாழில் ஈபிடிபி யால் பிரச்சனை வராது இருக்கவே இந்த நுளைவுச்சீட்டை வாங்கியதாக கூறினார்.

Thinakkural_Child_10-9-09

epdptcc