முன்னாள் விடுதலைப் புலிகள் குறி பார்த்து சுடுவதற்கு சென்னையில் அனுமதி மறுப்பு!

Home » homepage » முன்னாள் விடுதலைப் புலிகள் குறி பார்த்து சுடுவதற்கு சென்னையில் அனுமதி மறுப்பு!
முன்னாள் விடுதலைப் புலிகள் குறி பார்த்து சுடுவதற்கு சென்னையில் அனுமதி மறுப்பு!

விடுதலைப்புலிகள் முன்னாள் உறுப்பினர்கள் 3 பேர், இலங்கை தேசிய விளையாட்டு அணியில், குறி பார்த்து சுடும் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விரைவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை சார்பில் கலந்து கொள்ள இவர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இலங்கையின் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, இந்த தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “விடுதலை புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களில 12,000 பேர் இறுதி யுத்தத்தின் போது இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்களில் 11,500 பேர் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

விடுதலை புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களில் 180 பேரின் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு சுகததாச விளையாட்டரங்கில் பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சிகளில், தேசிய மட்ட குறி பார்த்து சுடும் போட்டியில் 3 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

இலங்கை தேசிய விளையாட்டு அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 முன்னாள் விடுதலைப் புலிகளின் பெயர்கள், கனகசுந்தரம் ராஜீவன், தயாபரன் தவேந்திரன், செல்லமுத்து சுரேஷ்குமார்.

எதிர்வரும் 26ம் திகதி முதல் 28ம் திகதி வரை 400 முன்னாள் விடுதலைப்புலிகள் இலங்கையின் சிங்கள பகுதிகளுக்கு சுற்றுலா பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர் என்று புனர்வாழ்வு மற்றும் சிறைச் சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சிவலிங்கம் சதீஸ்குமார் தெரிவித்தார்.

கொழும்ர்வின் முக்கிய பகுதிகளுக்கும், காலி, மாத்தறை, தெனியாய, கதிர்காமம் பகுதிகளுக்கும், இவர்கள் விஜயம் செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை தேசிய விளையாட்டு அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 முன்னாள் விடுதலைப் புலிகளும், சென்னையில் வரும் ஜூலை மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த 20th Asian Athletic Championship போட்டிகளில் துப்பாக்கி குறி பார்த்து சுடும் போட்டிகளில் கலந்து கொள்ளவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தப் போட்டியை சென்னையில் நடந்த முதல்வர் ஜெயலலிதா அனுமதி மறுத்துள்ளார். காரணம் போட்டிகளில் இலங்கை அணியினர் கலந்து கொள்கிறார்கள் என்பதால்!

Comments Closed

%d bloggers like this: