புலம்பெயர்

அழகுராணி போட்டிகளை நிறுத்தி வைக்குமாறு அன்புடம் வேண்டப் படுகிறீர்கள்.

601781_462836930457121_9503660_nஅன்பார்ந்த புலம்பெயர் இளைய சமுதாயமே!எமது இனம் தற்பொழுது என்றும் இல்லாதவாறு இக்கட்டான காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறது.இந்த வேளையில் நீங்கள் ஒரு சிலர் புலம்பெயர் மக்கள் மத்தியில் அழகுராணி போட்டி நடாத்துவது எமக்கு வேதனை அளிக்கிறது.

எம்மினம் சிங்களத்தின் கொடூரத்தில் ஒரு சிறு துளி சுதந்திரம் கூட இல்லாமல் அடைபட்டு வேதனையை சுமக்கும் இந்த தருணத்தில் நாம் அழகு ராணி போட்டி நடாத்துவது எம்மை நாமே முட்டாள் ஆக்கும் செயல் ஆகும். ஆகவே எமதுஇனம்கொஞ்சமாவது சரளமான வாழ்க்கை வாழும்வரையாவது எமது இந்த அழகுராணி
போட்டிகளை நிறுத்தி வைக்குமாறு அன்புடம் வேண்டப் படுகிறீர்கள்.இல்லையேல்எம்மை அழிக்கும் சிங்களத்திற்கும் புலம்பெயர் எமக்கும் வித்தியாசம் இல்லாமல்போய்விடும் . இதை நடாத்தும் நண்பர்கள் சிறிது காலம் இடைநிறுத்தி வைக்கும்படிஅன்புடன் வேண்டப் படுகிறீர்கள். இதில் கலந்து கொள்ளும் தமிழ்பெண்களின்பெற்றோரும் இதில் கவனம் செலுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் .

நன்றி
சுவிஸ் தமிழ்ச்சங்கம்