பொதுநலவாய நாடுகளின் மாநாடு, வேறொரு நாட்டுக்கு மாற்றப்படக்கூடிய சாத்தியங்கள்

Home » homepage » பொதுநலவாய நாடுகளின் மாநாடு, வேறொரு நாட்டுக்கு மாற்றப்படக்கூடிய சாத்தியங்கள்
பொதுநலவாய நாடுகளின் மாநாடு, வேறொரு நாட்டுக்கு மாற்றப்படக்கூடிய சாத்தியங்கள்

commonwealthகொழும்பில் நடத்தப்படவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாடு, வேறொரு நாட்டுக்கு மாற்றப்படக்கூடிய சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள பொதுநலவாய அமைச்சு செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இந்த கூட்டத்தின் போது இலங்கை விடயம் தொடர்பில் பேசுவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருக்கவில்லை

எனினும் கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற பொதுநலவாய நீதித்துறை மாநாட்டின் போது இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி இருந்தனர்.

அதில் இலங்கையை பொதுநலவாய அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் எனவும், கொழும்பில் நடத்தவுள்ள மாநாட்டை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன்,

எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள அமைச்சரவை செயற்குழு கூட்டத்தில் இலங்கை விடயம் பேசப்பட வேண்டும்என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை விடயத்தை அமைச்சரவை செயற்குழு விவாதிக்கவுள்ளது.

இதன் போது பொதுநலவாய நாடுகளின் மாநாட்டைஇலங்கையில் நடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் முக்கியதீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments Closed

%d bloggers like this: