இராணுவ புலனாய்வு பிரிவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் இணைந்து சதி முயற்சி!

Home » homepage » இராணுவ புலனாய்வு பிரிவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் இணைந்து சதி முயற்சி!
இராணுவ புலனாய்வு பிரிவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் இணைந்து சதி முயற்சி!

mahinda2020karuna2020pillayan20kuluமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களாக முன்னாள் முதலமைச்சர், தற்போதைய மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் கீழ்தான் எட்டு பிரதேச சபைகளும் இயங்கியது.

மாநகர சபை அரசாங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இயங்கியது. கடந்த மார்ச் 17ம் திகதியுடன் இச்சபைகள் கலைக்கப்பட்டு அதன் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 2012.03.17இல் கலைக்க வேண்டிய சபைகளை ஒரு வருடத்துக்கு அரசாங்கம் நீடித்தது.

அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளுராட்சி சபைகளில் மட்டக்களப்பில் போட்டியிடவில்லை. ஆனால் இம்முறை போட்டியிடவுள்ளதால் அவ்வாறு போட்டியிடும் போது மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து அனைத்து பிரதேச சபைகளையும், மாநகர சபைகளையும் கைப்பற்றும் என்பது யாராலும் அசைக்க முடியாத நிலையாகும்.

இதனால் அரசாங்கம் சதிமுயற்சிகளை பயன்படுத்த தீர்மானித்துள்ளது. இதன்படி முன்பு யுத்த வேளை இராணுவ புலனாய்வு பிரிவுகளால் மாதாந்தம் 20,000.00 பணம் கொடுத்து புலனாய்வு பிரிவுடன் இணைந்து வைத்திருந்த அனைவரையும் நிலமை சீரானதும் அவர்கள் நிதி வழங்குவதை நிறுத்தி விட்டனர். இதில் கருணா குழு, பிளளையான் குழு என்பன முக்கியமாக இருந்தது.

தற்போது மாகாண சபை உறுப்பினராக உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் தலைமையில் தற்போது இராணுவ புலானய்வு பிரிவினர் அனைத்து ஆயுதக்குழுவாக செயற்பட்டவர்களையும் இணைத்துள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவு, கருணாவுடன் முன்பு இயங்கிய ஆயுதக்குழு, புலிகளில் இருந்து விலகி வீடுகளில் இருப்பவர்கள், வன்னி யுத்தத்தின் காரணமாக சிறைச்சாலைகளில் இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு வெளியேறிய முன்னாள் போராளிகள் சிலர் போன்றேரையும் பிள்ளையானின் ஆயுதக்குழுவில் இருப்பவர்களையும் இணைத்து இதற்கு தலைவராக முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவரை நியமித்துள்ளனர்.

இவர்களில் முக்கியமானவர்களுக்கு 20,000.00க்கு மேல் கொடுப்பனவும், ஏனைய அனைவருக்கும் 16,000.00 கொடுப்பனவும் இராணுவ புலனாய்வு பிரிவால் மாதாந்தம் வழங்கப்படுகின்றது.

தற்போது இவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், ஏனைய தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் பிரதிநிதிகளை கடத்துவதற்கும், அவர்களை சுடுவதற்கும் அல்லது தாக்குவதற்கும் திட்டமிட்டுள்ளனர்.

முக்கியமாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சுடுவதற்கான ஏற்பாடுகள் இராணுவ புலனாய்வு பிரிவாலும், பிள்ளையான் தலைமையிலான ஆயுதக்குழுவாலும் ஒழங்கு செய்யப்பட்டுள்ளது. இவர்களை சுடுவதனால் பிரதேச சபை, மாநகர சபை போன்றவற்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட பலர் பயப்பிடுவார்கள் என இராணுவ புலனாய்வு பிரிவும், பிள்ளையானின் ஆயுதக்குழுவும் கருதுகின்றனர்.

அத்தோடு அவர்களது இருப்பிடங்களில் ஆயுதங்களை வைப்பது அல்லது அவர்களை கைது செய்யக்கூடிய அல்லது அவமானப்படுத்தக்கூடிய அல்லது பயமுறுத்தக்கூடிய சட்ட விரோதமான பொருட்களை வைப்பது உட்பட்ட நடவடிக்கைகளை இராணுவ புலனாய்வு பிரிவினர் மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றனர்.

அத்தோடு அவர்களின் உறவுகளையும், அவர்களுக்கு உதவுபவர்களையும் பயமுறுத்தும் நடவடிக்கைகள், கடத்தும் நடவடிக்கைகளையும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான முழு ஆலோசனையும் சி.சந்திரகாந்தன் என்னும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிள்ளையானால் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செல்லும் அனைத்து நிகழ்வுகளுக்கும் இராணுவ புலனாய்வு பிரிவினர் அனுப்பப்படுகின்றனர். அங்கு செல்லும் இராணுவ புலனாய்வு பிரிவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை, மாகாண சபை உறுப்பினர்களை அழைப்பவர்களுக்கு எச்சரிக்கைகள் விடுப்பதுடன், மக்களையும், மக்கள் பிரிதிநிதிகளையும் புகைப்படம் எடுக்கின்றனர். இதனால் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பெரும் உயிர் அச்ச உணர்வுடன் நடமாட வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

முதலில் மட்டக்களப்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கொலை செய்யும் முயற்சியில் தற்போது இராணுவ புலனாய்வு பிரிவும், பிள்ளையான் தலைமையிலான ஆயுதக்குழுவும் இறங்கி உள்ளது. இவர்களின் நடவடிக்கைகளுக்கு மறைமகமாக பொலிஸாரும் துணையாக உள்ளதாக அறியப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களை, பொலிஸாருக்கும், இராணுவ புலனாய்வு பிரிவினர் பிள்ளையான் குழுவினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கண்டும் காணாமல் மாறிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வேளை பாராளுமன்ற உறுப்பினர் வீடு, அலுவலகம் என்பவற்றில் தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இவ்வேளை இராணுவ புலனாய்வு பிரிவினரும், பிள்ளையான் தலைமையிலான ஆயுதக்குழுவினதும் சதி திட்டத்தை அறியாத மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஒவ்வொரு இடங்களிலும் புதுவருட விளையாட்டு, கலை நிகழ்வுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

எனவே இனியாவது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் பிரதிநிதிகள் தங்களை பாதுகாக்கும் வகையில் விளையாட்டு, கலை நிகழ்வுகள், ஏனைய தேவையற்ற நிகழ்வுகளை தவிர்த்து தங்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்குமாறு வேண்டப்படுகின்றனர்.

விரைவில் நடைபெறவுள்ள மாநகர சபை, பிரதேச சபை என்பவற்றில் அரசாங்கத்தை வெற்றி பெற செய்வதில் தீவிர சதி முயற்சியில் அரசாங்க இராணுவம், இராணுவ புலனாய்வு, பிள்ளையானின் ஆயுதக்குழு என்பவற்றை பயன்படுத்த உள்ளதால் இவ்விடயமாக அனைத்து சர்வதேச நாடுகளில், தூதரங்களின் கவனத்துக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்துக்கும் கொண்டு வந்து இவ்விடயமாக இவர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மிக அவசியமாக உள்ளது.

அண்மையில் இராணுவ புலனாய்வு பிரிவும், பிள்ளையானும் அவரது ஆயுதக்குழுவும் ஒன்றுகூடிய ஒன்று கூடலில் பல விடயங்கள் இவ்வியடமாக ஆராயப்பட்டுள்ளது. அத்தோடு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் பிரதேச சபைகளில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கும், மாதாந்தம் இராணுவ புலனாய்வு பிரிவு சம்பளம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. பெறும் 16,000.00 சம்பளத்தில் ஒவ்வொருவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செயற்பாட்டுக்கு மாதாந்தம் 6,000.00 வழங்கவும் பணிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் நாயகம் பூ.பிரசாந்தன் தற்போது தமது ஆயுதக்குழு மூலம் மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். இவர் இவ்வருடமும் பிரதேச சபையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பேரில் தேர்தலில் இறங்க வேண்டும் என பிள்ளையானுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

இவ்வேளை பல பிரச்சனைகளால் அரசாங்கத்தில் கட்டுப்பட்டுள்ள பிள்ளையான் இராணுவ புலனாய்வு பிரிவும், அரசாங்கமும் விடுக்கும் வேண்டுகோளின் படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலேயே தேர்தலில் இறங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

பொதுவாக ஆயுதக்குழுக்களில் அட்டகாசம் மீண்டும் இராணுவத்தினாலும், இராணுவ புலனாய்வு பிரிவாலும் பாதுகாப்பு பிரிவில் உள்ள ஏனைய புலனாய்வு பிரிவாலும் கட்டவிழ்ந்து விடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் பிரிதிநிதிகள் மிகவும் பாதுகாப்புடன் இருப்பது மிக மிக அவசியமாக உள்ளது.

கிழக்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம்
உள்துறைமுகவீதி திருகோணமலை
eptamil45@gmail.com

Comments Closed

%d bloggers like this: