தமிழ் அமைப்புகள் முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு உதவவில்லை! – எனவே தேர்தலில் போட்டியிடுகின்றேன் – தயா மாஸ்டர்

Home » homepage » தமிழ் அமைப்புகள் முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு உதவவில்லை! – எனவே தேர்தலில் போட்டியிடுகின்றேன் – தயா மாஸ்டர்
தமிழ் அமைப்புகள் முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு உதவவில்லை! – எனவே தேர்தலில் போட்டியிடுகின்றேன் – தயா மாஸ்டர்

daya_masterராஜபக்‌ஷவின் இலங்கை சுதந்திர கட்சி சார்பில் தயா மாஸ்டர் போட்டியிடுகிறார். அதற்காக, அக்கட்சி சார்பில் அவருக்கு ‘சீட்’ வழங்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக அவர் கோத்தபய ராஜபக்‌ஷவை யாழ்ப்பாணத்தில் சந்தித்தார். அவருடன் 23 தமிழ் அமைப்பினரும் சென்று இருந்தனர்.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் கவுன்சில் தேர்தல் வருகிற செப்டம்பரில் நடக்கிறது.

ராஜபக்‌ஷவின் ஆளும் கட்சி சார்பில் போட்டியிடுவது ஏன் என தயா மாஸ்டர் விளக்கம் அளிக்கையில்,

‘முன்னாள் விடுதலைப் புலிகள் மறுவாழ்வுக்கும், அவர்களின் சமூக அங்கீகாரத்துக்காக தேர்தலில் போட்டியிடுகிறேன். தமிழ் அமைப்புகள் முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு சரிவர உதவி செய்வதில்லை. எனவே, அவர்களுக்கு உதவிகள் பெற்று தரவும், அவர்கள் மீது அரசுக்கு நல்லெண்ணம் ஏற்படவும் ஆளும் கட்சி சார்பில் போட்டியிட உள்ளேன்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் செய்தி ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் தயா மாஸ்டர். இவரது உண்மையான பெயர் வேலாயுதம் தயாநிதி. கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின் போது இவர் ராணுவத்திடம் சரண் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments Closed

%d bloggers like this: