புலம்பெயர்

தமிழீழம் நோக்கிய ஒன்றுபட்ட பொதுச்செயற்பாட்டுக்கான தளமே தமிழீழ சுதந்திர சாசனம் உருவாக்கம்: பிரான்சில் முழக்கம்

tfc_paris_004ஈழத் தமிழர்களையும் கடந்து இன்று உலகத் தமிழர்களின் பெருவிருப்பாக மாறிவிட்ட தமிழீழத்தினை வென்றடைவதற்கான ஓர் பொதுச்செயற்பாட்டுக்கான தளமாக தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கம் அமைந்துள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் பிரதிநிதிகள் முழக்கமிட்டுள்ளனர்.

ஆறாவது வாரத்தினை கடந்து தமிழர்கள் செறிந்து வாழுகின்ற பகுதிகளெங்கும் தொடர்சியாக இடம்பெற்று வருகின்ற தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான பரப்புரைக் கூட்டங்கள் மற்றும் சந்திப்புக்களில் இம்முழக்கத்தினை நா.தமிழீழ அரசாங்கப் பிரதிநிநிதிகள் முன்வைத்து வருகின்றனர்.

இச்சந்திப்புக்களில் பிரதானமாக தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான கேள்விக் கொத்தினை மையப்படுத்தி அரசியல் விழிப்பு பட்டறைகள் இடம்பெறுகின்றன.

பரிஸ்:

தமிழர்களின் நிகழ்வுகள் தொடர்சியாக இடம்பெறும் பரிசின் 18ம் வட்டார மக்ஸ் டோர்முவா மண்டபத்தில் இடம்பெற்றிருந்த பொதுக்கூட்டத்தில் வர்த்தகர்கள் – கலைஞர்கள் – சமூக ஆர்வலர்கள் – தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் பங்கெடுத்து சிறப்பித்துள்ளனர்.

மக்கள் கலைஞர் மயிலையூர் இந்திரன் அவர்கள் தமிழீழ சுதந்திர சாசனத்தினை கருவாக கொண்டு பாடலொன்றினை அரங்கில் பாடித்திருந்தார்.

சிங்கள பேரினவாத அரசிடம் இழந்த தமிழர்களின் இறைமையின மீளப்பெற்றுக் கொள்வதற்கான ஒர் சனநாயக வழிமுறையாகவும் தமீழம் என்ற தமிழர்களின் நிலைப்பாட்டினை ஓர் ஆவணமாகவும் தமிழீழ சுதந்திர சாசனம் அமையும் என்ற நம்பிக்கையினை தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் பிரான்ஸ் பணிப்பாளர் சுந்தரவேல் கருத்து தெரிவித்தார்.

தமிழீழ சுதந்திர சாசனத்தின் உருவாக்கத்திற்கான பிரான்ஸ் செயற்பாட்டுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஆதரவினைத் திரட்டியிருப்பது நம்பிக்கை தருவதாக அமைந்திருப்பதாக கருத்து தெரிவித்த பிரபல வர்தகர் பாஸ்கரன், அனைவரும் ஓன்றுபடுவதற்கான வாய்பாக தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான செயற்பாடுகள் அமைகின்றதென தெரிவித்தார்.

தமிழீழ சுதந்திர சாசனத்தின் உருவாக்கத்திற்கான செயற்பாடுகளுக்கு தமிழர் நடுவத்தின் முழுஆதரவினை தெரிவித்துக் கொள்வதாக தெமிழர் நடுவம் அமைப்பின் தலைவர் கனி கமலநாதன் அவர்கள் கருத்துரைத்தார்.

மாந் லா ஜொலி:

பரிசின் புறநகர் பகுதியான மாந் லா ஜொலி தமிழர் கலாசார ஒன்றியத்தின் ஆண்டுவிழாவில் தமிழீழ சுதந்திர சாசன அறிமுக நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

அமைச்சர் சுதன்ராஜ் தலைமையில் இடம்பெற்றிருந்த இந்த அறிமுக அரங்கில் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான பிரதிநிதிகளை நா.தமிழீழ அரசாங்கத்தின் முன்னால் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்கள் வெளியிட்டு வைக்க மாந் லா ஜொலி தமிழ்சங்கத்தின் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டிருந்தனர்.

செவ்றோன்:

பரிசின் புறநகர் பகுதியாகவும் தமிழர்கள் செறிந்து வாழுகின்ற இடங்களில் ஒன்றாகவும் உள்ள செவ்றோன் பகுதியிலும் தமிழீழ சுதந்திர சாசனத்திற்கான பரப்புரைக் கூட்டம் இடம்பெற்றிருந்தது.

தொடந்து தமிழர் வர்த்தக தொகுதியான லாச்சபல் பகுதியில் அடுத்து வரும் நாட்களில் பரப்புரைகள்

தீவிரப்படுத்த இருப்தோடு தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நடாத்துகின்ற சலங்கை நிகழ்வில் (28-04-2013) தமிழீழ சுதந்திர சாசனத்திற்கான பரப்புரைகள் பிரதானமாக இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.