இந்தியா

“சிங்களவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு பக்காவாக பலப்படுத்தப்பட்டு உள்ளது” -இந்திய தூதர்

இலங்கையில் தமது பதவிக்காலத்தை முடித்துக் கொண்டு வெளியேறும் இந்திய தூதர் அசோக் கே காந்தா, “இலங்கைக்கு எதிராக நாம் (மத்திய அரசு) எப்போதும் செயல்பட்டதில்லை, செயல்படவும் மாட்டோம்” என்று கொழும்புவில் வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “ஜெனீவாவில் அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது வேறு விஷயம். அதை இலங்கைக்கு எதிராக வாக்களித்ததாக எடுத்துக் கொள்ளக் கூடாது” என்றும் தெரிவித்தார்.

சிங்கள் உல்லாசப்பயணிகள் மீது தமிழகத்தில் தாக்குதல்கள் நடப்பது பற்றி கேட்டபோது, “இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கைகள் இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசும், தமிழகத்தில் உள்ள மாநில அரசும், இலங்கையில் இருந்து வரும் நபர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தயாராக உள்ளன. தமிழகத்தில் இலங்கையருக்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.