இலங்கை

விடுதலை புலிகள் முன்னாள் அரசியல் கட்சியை பதிவு செய்ய முடியாது!

விடுதலைப் புலிகளினால் முன்பு உருவாக்கப்பட்ட அரசியல் கூட்டணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரே கட்சியாக பதிவு செய்யும் முயற்சியை, அதன் தலைவர் இரா.சம்பந்தனும் இலங்கை அரசும், ஒன்றிணைந்து முறியடித்து விடுவார்கள் என்றே கொழும்பு அரசில் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இது தொடர்பாக இரா.சம்பந்தனின் தமிழரசு கட்சிக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஒருவித அன்டர்ஸ்டான்டிங் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பை மற்றையவர்கள் பதிவு செய்ய முயன்றாலும், தேர்தல் ஆணையம் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும் என்றும் கூறுகிறார்கள்.

இரா.சம்பந்தனால் ‘முன்னாள் பயங்கரவாதிகள்’ என வர்ணிக்கப்பட்ட டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பினரே தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரே கட்சியாக பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கட்சியை பதிவு செய்ய இவர்கள் விண்ணப்பம் கொடுத்தால், இரா.சம்பந்தனிடம் இருந்து “எனது அனுமதி இல்லாமல் கட்சியை பதிவு செய்ய முடியாது” என்று ஒரு மனு பெற்றுக் கொள்ளப்படும். அதன்மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்!