speciel புலம்பெயர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் ஒருங்கிணைப்புக் குழுவின் போலியான பெயர்சூட்டும் அறிக்கை!

தமிழீழ விடுதலைக்காய் முள்ளிவாய்க்காலில் விதையாகிப் போன எம் உறவுகளின் விதை நிலத்தின் பெயரால் புலம்பெயர் தேசத்தில் இருந்து குழப்பங்களை விளைவித்துக் கொண்டிருக்கும் தேசவிரோத சக்திகளால் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரால் போலியான பெயர்சூட்டும் உளறல் அறிக்கை ஒன்று சில இணையத் தளங்களின் ஊடக வெளிவந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழீழம் என்ற குறிப்பிட்டு வருகின்ற மற்றுமொரு போலியான அறிக்கை ஒன்று விசமிகளால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பெயர் சூட்டும் உளறல் அறிக்கை முள்ளிவாய்க்கால் அழிவிற்கு துணைபோன சில விசமிகளின் ஊ(த)டங்களிலும் வெளி வந்துள்ளது.

அந்த அறிக்கையில் மே-18 முள்ளிவாய்க்கால் “செந்நெருப்பு நாள்” என தமிழீழ விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்வதாக குறிக்கப்பட்டுள்ளதோடு, அவ்வறிக்கை தமிழீழத்தில் இருந்து எழுதியாக குறிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் எமது போராளிகளும் மக்களும் அழிக்கப்பட்டு இன்று நான்கு வருடங்களை கடந்து நிற்கும் தமிழினத்தில், புலம்பெயர் தேசத்தில் மட்டுமே நிலைகொண்டிருக்கும் இந்த எட்டப்பர்களும், விசமிகளும் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வெரு பெயர் சூட்டி முள்ளிவாய்க்கால் இனவழிப்பிற்கு பெயர் சூட்டும் விழா நடாத்தி வந்துள்ள நிலையில் இந்த வருடம் விடுதலைப் புலிகளின் பெயரால் இந்த பெயர்சூட்டும் அறிக்கை வெளிவந்துள்ளது.

முதலில் இனவழிப்பு என்பதை மறுத்து “போர்க்குற்ற நாள்” என பெயர் சூட்டினார்கள்!

பின்னர் “தமிழினப் படுகொலை நாள்” என்று பெயர் சூட்டினார்கள்!

அடுத்து “தமிழ் இன அழிப்பு நாள்” என பெயர் சூட்டி கொண்டாடினார்கள்!

இப்பொழுது “செந்நெருப்பு நாள்” என பெயர் சூட்டி கூத்தாடுகின்றனர், நாளை ???? பெயர்? இந்தப் பெயர்கள் அனைத்திற்கும் இவர்கள் ஒவ்வெரு விதண்டாவாதக் கதைகளும் வைத்திருக்கின்றனர், அத்தோடு இவற்றை விமர்சித்த பலரை துரோகிகள் எனவும் இந்தக் கும்பல் முத்திரை குத்தியும் உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை!

ஒரு நிலையில், ஒரு கருத்தில், ஒரே இலச்சியத்தில், குறிப்பாக ஒரே கொடியின் கீழ் நிற்க முடியாமல் சுவிஸ் ஒருங்கிணைப்புக் குழு விடுதலைப் புலிகளின் பாவனையில் இல்லாத 2003 ஆம் ஆண்டின் முன்னர் பாவனையில் இருந்த தேசியக் கொடியை இன்றும் பாவிக்கின்றனர், நிகழ்வுகளில் இன்றும் ஏற்றுகின்றனர், இது தொடர்பாக ரகுபதியுடன் பல தடவைகள் எடுத்துக் கூறியும் கேட்பதாக இல்லை அப்படி ஒரு விடையம் தமக்கு தெரியாது எனவும் கூறிவிட்டார், 2003 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தலைவரால் மாற்றம் செய்யப்பட்ட தமிழீழ தேசியக் கொடியை இன்றும் இவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது வெளிப்படையாக இவர்கள் ஒத்துக்கொண்ட உண்மை!

பல்வேறு பெயர்களை தமக்கு ஏற்றவகையில் சூட்டி கூத்தாடும் இவர்களால் வரலாற்றில் பதிவாகப் போவது என்ன? எமது எதிர்கால சந்ததி இந்த இனவழிப்பை எவ்வாறு அழைக்கப் போகிறது, தமிழின வரலாற்றில் எவ்வாறு எந்த அடைமொழியில் இந்தப் பேரழிவு பதிவாகப் போகிறது?

“போர்க்குற்ற நாள்”

“தமிழினப் படுகொலை நாள்”

“தமிழ் இன அழிப்பு நாள்”

“செந்நெருப்பு நாள்” இவற்றில் ஏதாவது ஒன்றா இல்லை நாளை மற்றுமொரு பெயரா?

உண்மையில் இந்த அறிக்கை தமிழீழத்தில் எந்தப் பகுதியில் இருந்தும் எழுதப்படவும் இல்லை அங்கிருந்து அனுப்பி வைக்கப்படவும் இல்லை. இந்த இழிவு செயல் புரிந்தவர்கள் உடனடியாகவே தம்மை அடையாளப்படுத்தியும் உள்ளனர்.

குறிப்பாக இந்த உளறல் அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோக பூர்வமான அறிக்கையின் தன்மைகள் எதுவும் உள்ளடங்கவில்லை என்பதும், அறிக்கைக்கான தொடக்கம் -முடிவுகளில் கூட சாதாரண அறிக்கைகளின் தன்மைகள் உள்ளடங்கவில்லை, அத்தோடு இந்த உளறல் அறிக்கை எந்த வகையிலும் ஒரு சிறு துளி அளவேனும் தமிழீழ விடுதலைப் புலிகளை பிரஸ்தாபிக்கவும் இல்லை.

இந்த அறிக்கையின் மூலப்பிரதி ஒரு வடிவிலும் பதிவு உள்ளிட்ட இணையங்கள் சிலவற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம் என்றும் அறிக்கையின் உள்பகுதியில் மேலும் பதிவு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்கலாம் இந்த உளறல் அறிக்கையை பார்ப்பவர்களுக்கு உடனடியாகவே இந்த இழிவு செயலின் உண்மைத் தன்மை என்ன என்பதும் புரிந்துவிடும். மொத்தத்தில் இது விடுதலைப் புலிகளின் அறிக்கை இல்லை, விடுதலைப் புலிகளுக்கு வால் பிடித்து அவர்களின் பணத்தில் வாழ்க்கை நடத்தும் சில நாதாரிப் பயல்களின் அறிக்கை என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை!

தமிழீழத்தில் இருந்து என வெளிவந்துள்ள சிறுபிள்ளைத் தனமான இந்த போலி அறிக்கை வழமை போல் பதிவு, புதிய சங்கதி, தமிழ்க்கதிர், ஈழமுரசு, சுவிஸ்-தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் தலைமையில் இந்த அழைப்பும் இதற்கான பரப்புரையொட்டிகளும் வெளிவந்து பலவாரங்கள் ஆன நிலையில், தற்போது ஐரோப்பிய இருந்து கொண்டே தமிழீழம் என்று குறிப்பிட்டு, தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரில் போலியான அறிக்கை வெளியிட்டிருப்பதனை எவ்வாறு நோக்க முடியும். அப்படியானால் ஐரோப்பிய நாடுகள் தான் இவர்களுக்கு தமிழீழமா? ஐரோப்பிய தமிழீழத்தின் தலைநகரம் ஜெனிவா வா!

பல்லாயிரம் மாவீரர்களின் அளவிட முடியாத உயர்ந்த தியாகம், தற்கொடை, அர்பணிப்பு, தமிழர்களின் மரபு ரீதியிலான பண்பாடுகளின் ஊடாக தமிழீழ அரசாக கட்டி வளர்க்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரையும், அவர்களின் இலச்சினையையும் பயன்படுத்தி இது போன்ற ஈனச் செயல் புரிபவர்களையும், அவர்களின் செயற்பாடுகளையும் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்றும் மன்னிக்கப் போவதில்லை, இவர்களையும் தமிழீழ நீதிமன்றம் உள்வாங்கிக் கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. இவர்களுக்கு உரிய தண்டனைகளை தமிழீழ நீதிமன்றம் விரைவாக வழங்கும் என்பதையும் நாம் நம்புகிறோம்.

சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பதுபோல், ஒரு உன்னதமான இயக்கத்தின் பெயரால் இவர்கள் செய்யும் சிறுபிள்ளைத் தனமான செயற்பாடுகளும் இவர்கள் விடுகின்ற இவ்வாறான உளறல் அறிக்கைகள் எதுவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விடிவிற்கு வழிகளை ஒருபோதும் வகுக்காது. மாறாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இல்லாது ஒழிக்கவும், விடுதலைப் போராட்டத்தின் பெயரால் புலம்பெயர் தேசத்தில் உள்ள அனைத்து வளங்களையும் சிலர் கையகப்படுத்திக் கொள்ளவுமே இந்த இழிவு செயலை சிலர் செய்கின்றனர் என்பது வெளிப்படையான உண்மை. இவர்கள் குறித்தும் இவர்களின் அறிக்கைகள் குறித்தும் தமிழ் மக்கள் எப்பொழுதும் எச்சரிக்கையுடன் விழிப்பாக இருக்க வேண்டும்.

நீங்கள் தான் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு என பரவலாக பொய் பரப்புரையும் செய்து வருகிறீர்கள், உண்மையில் இந்த ஒருங்கிணைப்புக் குழு என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு குழு அல்ல. 80 களின் காலப்பகுதியில் பாரிஸ் நகரில் செயற்பட்டு வந்த பல்வேறு தமிழ் இயக்கங்களின் உறுப்பினர்களால் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு தான் இந்த ஒருங்கிணைப்புக் குழு. பின்னர் காலப்போக்கில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்ட காலங்களின் மாற்றுக் கருத்துக்களை உடைய மற்று இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அதில் இருந்து ஒதுங்கிக் கொள்ள அது விடுதலைப் புலிகளின் செயற்பாட்டுக் குழுவாக மற்றம் பெற்றது. இந்தக் குழுவே இன்று அதுவே தமிழீழ விடுதலைப் புலிகள் என்று கூறி பொய் பரப்புரைகளில் ஈடுபடுகிறது.

இந்த ஒருங்கிணைப்புக் குழுக்கள் தமிழீழ மக்களின் விடுதலைக்காக, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பின்பற்றுவதாக குறிப்பிடுவது உண்மையானால் உங்கள் குழுவின் பெயரில் விடுதலைப் புலிகளின் அனுமதியுடன் மட்டும் அறிக்கைகளை வெளியிட வேண்டுமே தவிர, விடுதலைப் புலிகளின் பெயரால் அல்ல, விடுதலைப் புலிகள் என்பதற்கு அளவிட முடியாத புனிதம் அடங்கியுள்ளது. ஒருங்கிணைப்புக் குழு என்பதற்குள் அளவிட முடியாத அருவருக்கத் தக்க அசிங்கம் அடங்கியுள்ளது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழீழ தேசத்தின் சூரியப் புதல்வனின் அனல் கதிர்கள் இப்படியான ஈனச் செயல் புரிபவர்களை சுட்டெரிக்கும் வரை இவர்கள் திருந்தப் போவதில்லை… அதுவரை தமிழர்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.

வீர வசனங்களையும், ஆவேச வார்த்தைகளையும் நம்பி நாம் ஏமாந்து விடக் கூடாது, தமிழர்கள் அந்நியரிடம் இழந்த தாய்மண்ணை தமிழீழ விடுதலைப் புலிகளால் மட்டுமே மீட்க முடியும் என்பதை மனதில் ஆழமாக நிறுத்தி முள்ளிவாய்க்காலில் விதைக்கப்பட்ட மாவீரர்களுக்கும், மக்களுக்கும் எமது அஞ்சலிகளைச் செலுத்திக் கொள்வதோடு அவர்கள் மீது உறுதி எடுத்துக் கொள்வோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோக பூர்வ அறிக்கையின் வடிவம்
u1_sivaram-maamanithar-award
தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவந்த ஒருங்கிணைப்புக் குழுவின் போலியான அறிக்கை
u1_mulli
u1_RedMay13Final-a