தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின்ஆய்வு அறிக்கை

Home » homepage » தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின்ஆய்வு அறிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின்ஆய்வு அறிக்கை

fake ltteதமிழீழ விடுதலைக்காக இரத்தம் சிந்தி தம்மையே அர்ப்பணித்துப் போராடிய போராளிகளும்! எட்டப்பர்களும்! (ஒரு சில வார்த்தை பிரயோகங்களுக்கு மன்னிக்கவும்)

இங்கு எழுதபட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் உண்மையானவை. சந்தேகங்களை சரிப்படுத்திக் கொள்ள தொடர்பு கொள்ளுங்கள் மேலதிக தகவல்கள் வழங்கப்படும். நாங்கள் இந்தக் குழுக்கள் போல், அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் சந்திரன்கள், முத்துக்கள், மூர்த்திகள், சேரமான்கள் போல் ஒழிந்து கிடந்தது வாழ்பவர்கள் கிடையாது. மக்களுக்காக என்றும் மக்களுடன் வெளிப்படையாக வாழ்பவர்கள்.

தமிழர் இனவழிப்பு நினைவு நாளும்- செந்நெருப்பு நாளும்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் வெளியிடும் அறிக்கைகளுக்கு எதிராக அனைத்துலக தொடர்பகத்தின் ஊடாக சிறுபிள்ளைத் தனமாக சிலகாலம் வெளிவந்த அறிக்கைகள், திடீரென தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயரிடப்பட்டு வெளிவந்தது. அந்த வகையில் முள்ளிவாய்க்கால் தமிழர் இனவழிப்பு நினைவு நாளினை, “செந்நெருப்பு நாள்” என பெயர்மாற்றம் செய்து விடுதலைப் புலிகள் என்ற தலைப்பிடப்பட்டு வெளிவந்துள்ள அறிக்கை பலத்த சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது.

தமிழீழத்தின் முதலாவது நீதிபதியாக தமிழீழ தேசியத் தலைவரினால் நியமிக்கப்பட்டவரும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைச் செயலகத்தின் இன்றைய இணைப்பாளருமான, திரு.இராமு சுபன் அவர்களின் கை ஒப்பத்துடன் மே 18 – தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2013 நினைவுகளைச் சுமந்து உத்தியோகபூர்வ அறிக்கையொன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ இணையமான விடுதலைப் புலிகளின் ஊடாக வழமை போல் வெளிவந்துள்ள நிலையில், “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற பிரதான தலைப்பில் முகவரி இல்லாமல், கையொப்பம் இல்லாமல் மொட்டையாக வெளிவந்துள்ள போலியான அறிக்கை ,திட்டமிட்ட சதி ஒன்றை அம்பலப்படுத்தி நிற்கின்றது.

விடுதலைப் புலிகள் அமைப்பில் பல கட்டமைப்புக்களும், உப கட்டமைப்புக்களும் உண்டு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவைகள் வேலைத் திட்டங்களுக்கு அமைவாக உருவாக்கப்பட்டன. இதில் அனைத்துலக தொடர்பகம், தமிழீழ அரசியல்த் துறையின் கீழ் செயற்பட்டுவந்த ஒரு கட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்களை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும்.

ஆனால் இந்தக் கட்டமைப்புக்கள் எந்தவொரு தேவைகளுக்காகவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனித் தனியாக ஒரு குறிப்பிட்ட நாட்களுகோ, அல்லது பிற தேவைகளுக்கோ அறிக்கை விட்டது கிடையாது. எந்த அறிக்கைகளாக இருந்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தின் ஊடாக மட்டுமே 2009 முள்ளிவாய்க்கால் ஆயுத அமைதிப்படுத்தல் வரை வெளிவந்ததை அனைவரும் அறிவார்கள்.

தமிழீழ தேசியத் தலைவரின் கையொப்பத்துடன் வெளிவரும் கடிதங்கள் தவிர்ந்த அறிக்கைகள், மற்றும் மதிப்பளிப்பு அறிக்கைகள், போன்ற அனைத்தும் தலைமைச் செயலகத்தின் ஊடாக மட்டுமே எப்பொழுதும் வெளிவந்தது மறுக்க முடியாத உண்மை. அதுபோல் தலைமைச் செயலகத்தின் பொறுப்பாளர் என்று தலைவர் எப்பொழுதும் கையொப்பம் வைத்தது கிடையாது, அதற்கென சுழற்சி முறையில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அதன் அடிப்படையில் 2009 மே17 முள்ளிவாய்க்கால் ஆயுத அமைதிப்படுத்தலின் பின்னர் தமிழீழ தேசியத் தலைவரிடமிருந்து எதுவித தொடர்புகளும் இதுவரை அற்ற நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பில் குழப்பங்களைத் தவிர்த்து, தனிமனித முடிவுகளைத் தவிர்த்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்து கட்டமைப்புக்களையும் ஒருங்கிணைத்து, அந்தந்த கட்டமைப்புக்களில் செயற்பட்டு வந்த மூத்த, இடைநிலை, இளைய, புதிய போராளிகளையும் உள்ளடக்கி பல்வேறு இடையூறுகள், இன்னல்களுக்கு மத்தியில், மிகவும் நேர்த்தியாக, கொண்ட கொள்கையில் இருந்து விலகாமல் ஒரு செயற்குழுவாக செயற்பட்டு வரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைச் செயலகத்தை புறக்கணித்து, அறிக்கை விட வேண்டிய அவசியம் அனைத்துலக தொடர்பகத்தின் கீழ் செயற்பட்டு வந்த ஐரோப்பிய ஒருங்கிணைப்புக் குழுவிற்கு ஏற்பட்டதன் அவசியம் என்ன?
முள்ளிவாய்க்கால்தமிழர் இனவழிப்பு நினைவு நாளில் வெளிவரவேண்டிய அறிக்கை ஒன்று சில நாட்களுக்கு முன்னரே மொட்டைக் கடதாசி போல், தமிழீழ விடுதலைப் புலிகள் என்று குறிப்பிடப்பட்டு தமிழர் இனவழிப்பு நினைவு நாளினை “செந்நெருப்பு நாள்” எனக்க குறிப்பிட்டு வெளியிட வேண்டிய தேவையும் என்ன? 2010 ஆண்டு மாவீரர்நாள் அன்று தளபதி ராம் அவர்களை பகடைக் காயாக வைத்து, சிறிலங்கா அரசு, தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் போலியான மாவீரர் நாள் உரையையும், அறிக்கையையும், வெளியிட்டதும், பின்னர் ஆப்பிழுத்த குரங்கின் நிலை போல் அனைத்தும் சிக்கலில் முடிந்து போனகதையும், தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பதிவாகிப் போனது போன்று ,இந்தக் குழுக்களின் அறிக்கைகளும், செயற்பாடுகளும் துரோக வரலாறில் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மாவீரர் நாள் அன்று தலைவரின் உரை நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் மாவீரர்நாள் கொள்கைப் பிரகடன உரையின் எழுத்து வடிவம், தமிழீழ தேசியத் தலைவரின் வெளிப்பாடு இல்லாத காரணத்தால் 2009,மாவீரர் நாள் அன்று வழமை போல் புலிகளின் குரல் வானொலி ஊடாகவும், விடுதலைப் புலிகள் இணையம் ஊடாகவும் தலைமைச் செயலகம் வெளியிட்டிருந்தது. ஆனால் அனைத்துலக தொடர்பகம் அப்பொழுது தலைமைச் செயலகத்தின் கீழ் வழமை போல் செயற்பட்டு வந்ததன் காரணமாக உத்தியோக பூர்வ அறிக்கை மட்டும் மாவீர நாளில் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் நடந்து முடிந்த மாவீரர் நாள் நிகழ்வின் வரவு செலவு கணக்கு விபரத்தை மக்களுக்கு தெரியப்படுத்துவது தொடர்பில் உரையாடப்பட்ட பொழுதில், கணக்கு காட்ட முடியாது எனக் கூறியதோடு, புலம்பெயர் தேசத்தில் செயற்பட்டுவரும் தமிழர் கட்டமைப்புக்கள் அனைத்தையும், தமது கட்டுப்பாட்டின் கீழ், தமது சொல் கேட்டு செயற்படும் நிலையை உருவாக்கித் தந்தால் மட்டுமே தாம் தலைமைச் செயலகத்தின் கீழ் செயற்பட முன்வருவோம், இல்லையெனில் தாம் தனியாகா செயற்படப் போவதாகவும் இந்த குழுவினர் விதண்டாவாதமாக தெரிவித்திருந்தனர்.

புலம்பெயர் நாட்டின் சூழல்களுக்கும், சட்டதிட்டங்களுக்கும் ஒவ்வாத வகையில்,போராளிகளிடம் அதாவது தலைமைச் செயலகத்திடம் இந்த வேண்டுகோளையும் முன்வைத்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசனைகளின் படி அனைத்துலக தொடர்பகத்தால் உருவாக்கப்பட்ட பேரவைகழுடன் கூட ஒத்த கருத்துடன் இணைந்து செயற்பட, அல்லது கட்டுப்படுத்த முடியாத 22, வருடங்களையும் தாண்டி புலம்பெயர் தேசத்தில் செயற்பட்டு வருவதாக தம்பட்டம் அடிக்கும் ஒருங்கிணைப்புக் குழுக்களால், தலைமைச் செயலகத்துடன் அதாவது போராளிகளுடன் இணைந்து அல்லது அவர்களின் கீழ் செயற்பட எப்படி முன்வருவார்கள்?!

போராளிகளுக்கு சவால் விடும் அளவிற்கு இவர்களுக்கு என்ன தகுதி உள்ளது? போராட்ட கள அனுபவமா? அரசியல் செயற்பாடா? அல்லது  உருப்படியாக செயற்படுத்தும் வேறு ஏதாவதா? யூ டியூபில் சண்டைபாத்து களத்தில் தளபதிகளுக்குப் பக்கத்தில் நின்றவர்கள் போல் மக்களுக்கு கதை அளந்த  விண்ணர்கள் தானே இந்தக் குழு! பணத்தை சுருட்டி வைத்திருப்பதைத் தவிர இவர்களிடம் இருப்பது என்ன?

சர்வதேச நாடுகளில் சட்ட திட்டங்களை மீறி போராளிகளால் உடனடியாக எப்படி அனைத்து அமைப்புக்களையும் ஒன்றிணைக்க முடியும்?

இதன் பின்னணியில் தான் இந்த ஒருங்கிணைப்புக் குழுக்கள் அனைத்துலக தொடர்பகத்தை தனிமைப்படுத்தி, தனியாக செயற்படும் படியும் கட்டளையிட்டனர், அப்படி இல்லை என்றால் தாம் அனைத்தையும் கைவிட்டு தாம்மிடம் உள்ள வளங்களுடன் வெளியேறப் போவதாகவும் சம்மந்தப்பட்டவர்களிடம் வாதிட்டனர்.

அந்த சூழலில் இன்று வரை அனைத்துலக தொடர்பகத்தில் செயற்திறன் மிக்க போராளிகள் இல்லாத காரணத்தால், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தின் கீழ், அவர்களின் ஆலோசனைப்படி செயற்பட மறுத்த இந்தக் குழுக்களின் செயற்பாட்டாளர்கள், போராளிகளின் கைகளில் இருந்த அதிகாரத்தை தமதாக்கிக் கொள்கின்றனர்.

அனைத்துல தொடர்பகத்தின் தற்காலிக பொறுப்பாளரின் விலகல் உண்மை என்ன!?
2009 இற்குப் பின்னர் அனைத்துலக தொடர்பகத்தின் புலம்பெயர் நிர்வாக செயற்பாடுகளை கையாண்டு வந்த பொறுப்பாளருக்கு கட்டுப்பட மறுத்த இந்த குழுக்களின் செயற்பாடுகள் காரணமாக, அதிருப்தி அடைந்த அந்த போராளி தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் இருந்து விலகிக் கொண்டது போன்ற ஒரு தோற்றப்பாட்டை வெளிக்காட்டி, அவரைப் பாதுகாத்துக் கொண்டு அதன் பின்னர் இந்தக் குழுக்களின் சொல் கேட்டு நடக்கக் கூடிய சிலர் அந்த பொறுப்பு நிலைக்கு வந்ததும், அனைத்துலக செயலகம் என்று சில காலம் அறிக்கைகள் வந்ததும், பின்னர் அந்த அறிக்கைகள் நின்று போக, அதே அறிக்கைகள் ஒருங்கிணைப்புக் குழுக்களால தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிக்கை போல் வெளிவிட ஆரம்பித்த போதே இவர்களின் பேராசையும், துரோகத் தனமும் வெளிவர ஆரம்பித்து விட்டது.

அதன் பின்னர், அனைத்துலக தொடர்பகம் என்ற பெயரில் இந்தக் குழு தனியாக செயற்பட முடிவெடுத்து. அனைத்துலக தொடர்பகத்தினுள் ஏற்கனவே ஊடுருவியிருந்த எட்டப்பர்களினால் உண்மைக்குப் புறம்பான வகையில், போராளிகளை துரோகிகள் என்றும், கேபி குழு என்றும், சிங்கள புலனாய்வாளர்கள் என்றும் தமது சுத்துமாத்துக்களுக்கு ஏற்ற வகையில் பெயர்களைச் சூட்டிவிட்டு, தாமே விடுதலைப் புலிகள் ஆகிய கதையை இன்னும் ஒரு கட்டுரையில் விபரமாகப் பார்ப்போம். நிற்க.

2010, 2011, ஆண்டுகளில் அனைத்துலக செயலகம் என்ற பெயரில் தலைவரின் பிறந்த நாள் அன்றும், 2012இல் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் மாவீரர் நாளுக்கு 5 நாட்களின் முன்னரும் அனைத்துல தொடர்பகத்தின், அல்லது ஒருங்கிணைப்புக் குழுவின் குழப்பகரமான அறிக்கைகளை வெளியிடவேண்டியதன் பின்னணியும் என்ன?

இதுக்கும் தலைவரால் உருவாக்கப்பட்ட நாங்கள் எது செய்தாலும் சரி என்ற வாதத்தை முன்வைப்பீர்கள் என்பதும், தலைவர் இருந்த காலத்தில் அவர் உரை நிகழ்த்திய பின்னர் அறிக்கை வருவது சரி, அவர் இல்லாத போது ஏன் அப்படி வரவேண்டும், மாவீர நாளுக்கு முன்னர் வந்தால் என்ன? அதற்குப் பின்னர் வந்தால் என்ன? அறிக்கை அறிக்கை தானே என்று நீங்கள் சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை! இவ்வளவையும் செய்த நீங்கள் இதைச் செய்ய மாட்டீர்களா என்ன?

உண்மைகள் தொடரும்!…..

போராளிகள், செயற்பாட்டாளர்கள் என்ற இன்றும் சிறீலங்கா, ஐந்திய புலனாய்வாளர்களுடன் தொடர்பில் இருந்து புலம்பெயர் தேசத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் நபர்கள் சிலரின் உண்மையின் பின்னணி விரைவில்….

மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்! அவன் போன வழியில் புயலென எழுந்து போரில் வெல்வார் புலிவீர!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

ஈழம்5.இணையம் ,தி.தமிழரசன். தொடர்புகளுக்கு skyp: eelam5.com

Comments Closed

%d bloggers like this: