மாவீரர் கஸ்ரோவை ஏமாற்றிய அனைத்துலக தொடர்பகம்.!!

Home » homepage » மாவீரர் கஸ்ரோவை ஏமாற்றிய அனைத்துலக தொடர்பகம்.!!
மாவீரர் கஸ்ரோவை ஏமாற்றிய அனைத்துலக தொடர்பகம்.!!

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின் ஆய்வுத் தொடர்-05

அனைத்துலகத்  தொடர்பகத்தின் கடற் போக்குவரத்தில் தொடர் தோல்விகளின் காரணத்தை அறிந்துகொண்ட தலைவர் , தளபதி சூசை அவர்கள் ஊடாக கேபியை தொடர்புகொண்டு நிலைமைகள் தெளிவுபடுத்தப்படுகிறது. 2009ம் ஆண்டு தை மாதம் 23 தொடக்கத்தில் கே.பிடம் மீண்டும் சர்வதேச பொறுப்பும், கடற்போக்குவரத்தும் கையளிக்கப்படுகிறது. ( 24.ம் திகதி விடுதலைப் புலிகள் உத்தியோக பூர்வமாக அறிவிக்கின்றனர், அனைத்து ஊடகங்களிலும் அந்தச் செய்தி வெளியாகியிருந்தது.

ஆனால் அனைத்துலக தொடர்பகத்தின் கீழ் செயற்பட்ட குழுக்களின் இணையங்கள் அதனை ஏற்கவில்லை, சில இணையங்கள் தகவலை வெளியிடவும் இல்லை, இந்த நிலையில் தமிழ்நெற் ஜெயா அவர்கள் அறிக்கையை நம்பாது அரசியல்த் துறைப் பொறுப்பாளர் நடேசன் அவர்களைத் தொடர்புகொண்டு கே.பியின் விடையத்தை சந்தேகத்துடன் பார்ப்பதாகவு அதன் முடிவை யார் எடுத்தது எனவும் கேள்வியைத் தொடுக்கிறார். ஆத்திரமடைந்த நடேசன் அவர்கள் தமிழ்நெற் ஜெயாவை அடங்கிச் செயற்படுமாறு கூறியதுடன், இனிமேல் குமரன் பத்மநாதன் சொல்வதைக் கேட்டு நடக்கும் படியும் கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறார்.) இந்தச் செய்தியையும் ஒரு வாரத்தின் பின்னரே தமிழ்நெட் இணையத்திலும் இணைக்கின்றார் ஜெயா.

ஜெய வுக்கு நடேசன் அவர்கள் மீது இருந்த கோபமே பின் நாளில் ஈழமுரசிலும் அதன் சகோதர ஊடகங்களிலும் நடேசன் அவர்கள் எழுதியதாக கூறப்படும் கடிதங்கள், நடேசன் அவர்களின்  ஈ.மெயில் ஐடியை நந்தகோபனிடம் வாங்கி அதில் இருந்த கடிதங்களை விலைபேசி தமது ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக வெளியிட்டு தமிழீழ விடுதலைப் போரின் வரலாற்றில் வடுக்களைப் பதிவு செய்து துரோகம் இழைக்கின்றனர் இந்தக் குழுக்கள்)  

கே.பியிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் தலைவர் எதிர்பார்த்த சில நகர்வுகளை கே.பி நிறைவேற்றுகிறார், இருப்பினும் தலைவரும், தளபதிகளும் எதிர்பார்த்த வகையில் அன்றைய சூழலில் கேபியாலும் எதுவும் செய்யமுடியாமல் போகிறது. வேறு விதமாக சிந்தித்த கே.பி சில இராஜ தந்திர நகர்வுகளை மேற்கொண்டிருந்தார். அந்த நகர்வுகள் கைகூட முன்னரே முள்ளி வாய்க்கால் பேரழிவும் நடந்து முடிகிறது. தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் ஆரம்ப நிலைக்கு தள்ளப்படுகிறது.

தனக்கு கீழ் செயற்பட்ட தனது நம்பிக்கைக்கு உரிய அனைத்துலக தொடர்பகம் தன்னையும், தன்னை நம்பிய தலைவரையும், ஏமாற்றியதை அறிந்து கொண்ட தளபதி கஸ்ரோ அவர்கள், தமிழ்மக்கள், போராளிகள் அனைவரிடமும் மன்னிப்புக் கோரியதோடு, நடந்தவை அனைத்தையும்  தெளிவுபடுத்தி காணொளி வடிவில் பதிவு செய்து தயாரித்து பொட்டம்மான், சூசை, நடேசன்  ஆகியோரின் ஊடாக அதனை மக்களுக்கு தெரியப்படுத்துமாறு  அவருக்குத் துணையாக இருந்த அறிவு,  நந்தகோபன் ஆகியோரிடம்  கொடுத்து விட்டுகிறார்.  அதன் பின்னரான நாட்களில் தற்கொலை அங்கியை வெடிக்கவைத்து வீரச்சாவடைகின்றார் அந்த தளபதி. வீரச்சாவடைந்த அனைத்துலக செயலகத்தின் பொறுப்பாளரின் வீரச்சாவையும் இன்றுவரை இவர்கள் பதிவு செய்யவில்லை. 

தலைவரின் நெருங்கிய நண்பரும், சிறந்த போராளியுமான கஸ்ரோ அவர்களின் நீண்டாகால போராட்ட வாழ்வை அப்படியே குழிதோண்டிப் புதைத்து அவருக்கு நம்பிக்கை துரோகம் இளைத்தனர் அவரால் வளர்க்கப்பட்ட இந்தக் குழுக்கள்.  இந்தக் காணொளியும் பின்னர் அறிவு, நந்தகோபனுடன் சம்மந்தப்பட்டவர்களினால்  அழிக்கப்படுகிறது. இந்த நிலையில் அறிவு இராணுவத்துடன் சரணடைந்து கொள்கிறார், பின்னர் காயப்பட்ட நிலையில் இருந்த  நந்தகோபனையும் அவருக்கு நெருக்கமான சிலரையும் மே 15ம் திகதிக்கு முன்னரே இராணுவக் கட்டுப்பாடுப் பிரதேசத்திற்குள் வந்து இராணுவத்துடன் இணைந்து கொள்கின்றனர்.

அதேவேளை புலம்பெயர் கட்டமைப்புக்களுடனும் தொடர்பில் இருந்தவாறு தமக்குத் தேவையான பணத்தை ஏற்பாடு செய்து பெற்றுக்கொள்கின்றனர். அந்தப்பணத்தை வைத்து சிறிலங்கா அரசபடைகளிடம் தமக்கான பாதுகாப்பையும் வெளிநாட்டு ஒன்றுக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தையும் உறுதி செய்து கொள்கின்றனர். அதைத் தொடர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்த முக்கிய போராளிகள் பலரையும் மே.15ம் திகதிக்குப் பின்னர் காட்டிக் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அறிவு, நந்தகோபன் சிறிலங்கா புலனாய்வாளர்களின் உதவியுடன் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். இன்று அவர் வேறு ஒரு நாட்டில் சொகுசாக வாழ்த்து வருகிறார். இது அவரின் கீழ் செயற்பட்ட வெளிநாட்டுத் தொடர்பாளர்கழுகுத் தெரியாமலே நடக்கிறது.

இவ்வாறு தளபதி கஸ்ரோ அவர்கள் சாவடைந்த செய்தி கூடத் தெரியாமல் இருந்த அவரின் வெளிநாட்டுத் தொடர்பாளர் நெடியவன் மே நடுப்பகுதியில்  திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களைத் ( அன்ரியைத் ) தொடர்பு கொண்டு தனக்கும் தளபதி கஸ்ரோவிற்குமான தொடர்பு  கடந்த பல நாட்களாகத் இல்லை என்ற  தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார். இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்த இந்தக் குழுக்கள் தனிமைப் படுத்தப்பட்டிருந்தாலும் அவர்கள் அதனை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. இன்றுவரை தமக்கும் தலைவருக்குமான தொடர்பு இருப்பதாகவே கதை அளக்கின்றனர்.

இறுதி நாட்களில் தளபதி சூசை அவர்களும், அரசியல்த் துறைப் பொறுப்பாளர் நடேசன் அவர்களும் புலம்பெயர் தேசத்தில் வேறு வேலைகளுக்காக இருந்த போராளிகளுக்கும் செயற்பாட்டாளர்கள் சிலருக்கு தெரிவித்த கருத்துக்களில் தமது தொடர்புகள் முழுமையாக துண்டிக்கப்படும் சந்தர்ப்பத்தில் கேபி அவர்களைத் தொடர்பு கொள்ளும்படி தெரிவித்திருந்ததும் குறிப்பிடத் தக்கது. (கேபி நல்லவரா? கெட்டவரா? துரோகியா? துரோகி இல்லையா என்ற கேள்விக்கு பதில் தர நாம் முனையவில்லை! நடந்த சம்பவத்தை அப்படியே குறிப்பிடுகின்றேன். கே.பி தொடர்பில் இந்தத் தொடரில் பின்னர் முழுமையாகப் பார்க்கலாம்)  

மறு புறத்தே கே.பி.யினுடான தளபதி சூசை மற்றும், தளபதி கஸ்ரோவின் அடுத்த நிலைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் ஆகியோர் தொடர்பாடல்கள், மற்றும் அவசர வேண்டுகோள்களையும் ஓலிவடிவப் பேட்டிகளையும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிற்கு முன்வைக்கின்றனர். இவை எதுவும் இந்தக் குழுக்களால் இன்றுவரை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்கப்படவில்லை.

மறுபுறத்தே சாள்ஸ் அன்ரணியும், துவாரகாவும், களப்பலியாகியிருந்தனர். தலைவரை  வெளியேற்றுவதற்கான கடைசி முயற்சியை பொட்டம்மான் தலைமையிலான கரும்புலிகள் படையணி ஒன்று 17ம் தேதி மேற்கொண்டார்கள்.

முதலாவது பாதுகாப்பு வலயத்தை உடைத்துக் கொண்டு வெளியேறிய கரும்புலிகள் அணி இரண்டாவது பாதுகாப்பு வலயத்தை உடைத்த பொழுதும் தலைவரை அவர்களால் பாதுகாப்பாக வெளியேற்ற முடியவில்லை. இத்தாக்குதலில் பல இடைநிலைத் தளபதிகள் வீரச் சாவடைகின்றனர். தலைவர் மீண்டும் களமிறங்குகிறார். முள்ளிவாய்க்காலின் வட முனையில் தலைவரும், பொட்டு அம்மானும், தென்முனையில் சூசையும், மற்றைய தளபதிகளும் சமரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே தளபதி சூசை மற்றும் வெளியகத் தொடர்பாளர் திலீபன் ஆகியோரிடமிருந்து, skype ஊடான புலம்பெயர்ந்த தமிழர்களிற்கான இறுதி அழைப்பு வந்தது.

இந்த அழைப்பில் பல நாடுகளைச் சேர்ந்த விரல் விட்டு எண்ணக் கூடிய செயற்பாட்டாளர்கள்  பலர் கலந்துகொண்டிருந்தனர்.

அப்போது தளபதி சூசை அவர்கள் தான் தெரிவிக்கும் கருத்துக்களை காணொளி வடிவில் பதிவுசெய்து புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு தெரியப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அது உடனடியாக நடக்கவில்லை அனைத்துலக தொடர்பகத்தின் கிளைக் குழுக்கள் அதனை மூடி மறைத்து துரோகத் தனம் புரிந்தனர். புலம் பெயர் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டிய விடையங்கள் எதுவும் சம காலத்தில் தெரியப்படுத்த வில்லை. இன்று வரையும் அது நடக்கவில்லை1

இந்தக் குழுக்கள் தமது எதிர்காலம் பற்றியே சிந்தித்தார்களே தவிர, தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பில் உருப்படியாக எதனையும் செய்ய முன்வரவில்லை.செய்ய வந்தவர்களையும் தடுத்து நிறுத்தினர். தமது அனுமதி இன்றி எதுவும் நடக்கக் கூடாது என்று கட்டளையிட்டனர். அதன் விளைவுகள் பெருமளவான போராளிகளையும் மக்களையும் நாம் இழந்து தவித்த நேரம் தளபதி சூசை அவர்களின் தொலைபேசி அழைப்பு கேபி யுடன் தொடர்பு கொள்கிறது.

அதில் குறிப்பிட்ட சில வரிகள் இன்று இணைக்கப்படுகிறது “இறுதிக் கணம் நெருங்கிவிட்டதை அறிவித்த தளபதி சூசை அவர்கள் கே.பி.யுடன் நேரடித் தொடர்பிலிருந்த அடுத்த சில மணித்துளிகளில் அந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்கிறார். முள்ளிவாய்க்காலின் வட முனையில் ஏதோ வாயு அடித்து விட்டான் போலிருக்கிறது. ஆட்கள் சுருண்டு விழுகிறார்கள் என சூசை அவர்கள் தெரிவித்ததை அடுத்து.

வடமுனையினால் படைகள் தங்களை நோக்கி வருவதையும் அடுத்த அரை மணித்துளியில் தொடர்பு கொள்ளாவிட்டால், தானும் இல்லையென்று கருதுங்கள் என்று கூறி விட்டு தொலைபேசித் தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறார் தளபதி சூசை.

கே.பி.க்கு அதன் பின்பு தளபதி சூசையிடமிருந்து தொலைபேசித் தொடர்பு வரவேயில்லை. தளபதி சூசை மார்பில் குண்டேந்தியபடி வீரச்சாவடைந்த நிலையில் உள்ள வித்துடல் இலங்கை இராணுவத்தால் பதிவேற்றப்படுகிறது. 37 வருட தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தற்காலிகமாக முற்றுப் பெற்றது. சூசை அவர்களின் வீரச்சாவையும் இந்தக் குழுக்கள் இன்றுவரை மறுக்கின்றனர் அவர் உயிருடன் இருப்பதாகவும் இன்றும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

விடுதலைப் புலிகளிகளின் இன்றைய தலைவர் நெடியவன் அல்ல, தானே தலைவர் என கே.பி. அறிவித்த நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த போராளிகள் சீற்றம் கொள்ளகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு.வே,பிரபாகரன் அவர்கள் மட்டும் தான் வேறு எவரும் தலைவராக முடியாது, ஆகவே ஏற்க்கனவே இயக்கத்தால் அறிவித்தது போன்று சர்வதேச அரசியல் விவகாரங்களுக்கான பொறுப்பாளராகவே செயற்ப்படும் படியும், தலைவரின் தொடர்பு வரும் வரையில் தனிமனித முடிவுகளையும் தலைவர் பதவியையும் தவிர்த்து,அனைத்து கட்டமைப்புக்களையும் உள்ளடக்கி ஒரு செயற்குழுவாக செயபடவேண்டும் என போராளிகள் அனைவராலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கே.பிக்கும், போராளிகளுக்குமான வாக்குவாதம் முற்றிய நிலையில், மலேசியா, சிறீலங்கா புலனாய்வுப் பிரிவால் இதுநாள் வரையும் கைது செய்யப்பட முடியாதவராக இருந்த கேபி கைது செய்யப்படுகிறார். அல்லது ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிறிலங்கா அரசுடன் இணைந்து கொள்கிறார்.

போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்குள் நகரப்போவதாகவும் தாங்கள் இன்னமும் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் நெடியவனே தங்களின் தலைவர் என்றும் இந்தக் குழுக்கள் அறிவிக்கிறார்கள்.

குறிப்பாக 2009 இன் ஆரம்பத்தில் இருந்து கே.பி. அவர்களிடம் சர்வதேச பொறுப்புக்கள் வழங்கப்பட்டதன் பின்னர் கே.பியால் பரிமாறப்படும் முக்கிய தகவல்களை தலைவருக்கு பகிர்வதற்கான தொடர்பாளராக வேல் என்ற இடைநிலைத் தளபதி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார், அந்த தளபதிக்கு, தளபதி கஸ்ரோ அவர்களின் கீழ் செயற்பட்ட பிரிவினரால் கட்டளை ஒன்று வழங்கப்பட்டிருந்தது. அது என்னவெனில்  எந்தத் தகவல்களாக இருந்தாலும் தலைவருக்கு நேரடியாக வழங்காமல் தங்களின் ஊடகவே அதனை வழங்கவேண்டும் என்பதாகும். தளபதி கஸ்ரோ அவர்களின் கீழ் செயற்பட்ட பிரிவின் இந்த செயற்பாடே தலைவரை அதியுச்ச கோபத்திற்கு கொண்டு செல்லக் காரணமாக அமைந்தது.

மே 18ம் திகதி போராட்டம் முடிவிற்கு வந்ததையடுத்து தம்மை சுதாகரித்துக் கொண்ட வெளிநாடுகளிலிருந்த அனைத்துலக தொடர்பகத்தின் கிளைக் குழுக்கள், விடுதலைப் புலிகளின் தலைமை பொறுப்பை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து நோர்வேயிலிருந்த நெடியவனைத் தங்களது தலைவராகப் பிரகடனப்படுத்தி கே.பி.யை புறக்கணித்து ஓரங்கட்டுகிறது.

யார் இந்த நெடியவன் என் நோர்வே வந்தார்.

வெளிநாடுகளிலிருந்து தாயகத்திற்கு சென்றவர்களிற்கு வழித்துணையாக வன்னிக்குள் அழைத்துச் செல்வதே அவரது பணியாக வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு அவர் கூட்டிச் சென்ற ஒரு நோர்வேயில் வதியும் தமிழ் மாணவி இவரோடு காதல் வயப்பட்டதால், தளபதி கஸ்ரோ அவர்களின் அனுமதியோடு அவரை மணம்முடித்து நோர்வேயில் குடியேறி வதியும் ஒரு போராளி.

இவ்வாறு மணம்முடித்து வெளிநாடு சென்றவரை தளபதி கஸ்ரோ அவர்கள் தனது நம்பிக்கைக்குரிய தொடர்பாளாக வைத்திருந்ததால் ஏற்பட்டதே அவர் இன்று புலிகளின் தலைவராக்கப்பட்டதன் பின்னணியும். ஆனால் உண்மை யாதெனில் இன்று வெளிநாடுகளில் தேங்கிக்கிடக்கும் தமிழீழ தேசத்திற்கான சொத்துக்களை தம் வசப்படுத்திக் கொள்ளவும், தமது செயற்பாட்டாளர்களின் மாதாந்த கொடுப்பனவுகள்  தொடர்ச்சியாகச் செல்லவுமே இவரைத் தமது தலையாட்டும் தலைவராக இந்த தொடர்பகமும் அதன் கீழ் வாலாட்டும் குழுக்களும்  அவர்களின் நெருங்கிய ஆதரவாளர்கழும் செயற்படுத்தி வருகின்றனர்.

இவரைப் பாதுகாக்கும் நோக்கில் அனைத்துலக தொடர்பக கட்டமைப்பின் பொறுப்பாளர்கள் அடிக்கடி மாற்றப்படுவதும் இன்று வழக்கமாகிப் போயுள்ளது. இதன் பின்னணியில் இந்தக் கிளைக் கட்டமைப்பின் ஒரு பகுதியினர் கேபியின் மருமகன், லண்டன் உதயன், டென்மார்க் குட்டி ஊடாக மீண்டும் கேபியுடன் இணைந்துள்ளதும் அதன் பின்னணியில் அனைத்துலக கட்டமைப்பின் செயற்பாட்டாளர்கள் பலர் சுதந்திரமாக சிறிலங்க சென்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

உண்மைகள் தொடரும்…

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

ஈழம்5.இணையம் தி.தமிழரசன். தொடர்புகளுக்கு skyp: eelam5.com

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு அறிக்கை -00

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-01

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-02

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-03

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வுத்  தொடர்-04

Comments Closed

%d bloggers like this: