இன உணர்வாளர் மணிவண்ணன் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அஞ்சலி.

Home » homepage » இன உணர்வாளர் மணிவண்ணன் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அஞ்சலி.
இன உணர்வாளர் மணிவண்ணன் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அஞ்சலி.

விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் அறிஞர்களும் அந்நியப்படுவது மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்” என்று கலைஞர்கள் தொடர்பில் தேசியத்தலைவர் குறிப்பிட்டதைப் போன்று தனது இன மக்களுக்கான போராட்டத்தோடு ஒன்றித்து வாழ்ந்த மணிவண்ணன் ஐயாவின் இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் மணிவண்ணன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி தெரிவித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையின் முழுமையான விபரம்  இணைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அந்த அறிக்கையின் இணைப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். த/செ/இ/செ/02/13 16/06/ 201

இன உணர்வாளர் மணிவண்ணன் அவர்களுக்கு எமது அஞ்சலி

தமிழ்நாட்டைச் சேர்ந்த இன உணர்வாளர் இயக்குநர் திரு. மணிவண்ணன் அவர்கள் காலமான செய்தி உலகத் தமிழர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஈழத்தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவாகவும் எம்மினம் எதிர்கொண்டுவரும் இனஅழிப்புக்கு எதிராகவும் திரு. மணிவண்ணன் அவர்களது குரல் ஓயாது ஒலித்து வந்துள்ளது. இவர் வெறும் பேச்சாளராக மட்டும் தன்னை மட்டுப்படுத்தாமல் பல்வேறு தளங்களில் ஈழ விடுதலைக்காகவும் சமூக விடுதலைக்காகவும் உண்மையான இன உணர்வோடு உழைத்த களச்செயற்பாட்டாளர்.

ஈழப் போராட்டத்தோடு திரு மணிவண்ணன் அவர்களின் தொடர்பும் பங்களிப்பும் அளப்பெரியது. எமது தாயகத்துக்கு நேரடியாக வருகை தந்து எமது போராட்டத்தோடும் எமது மக்களோடும் தன்னை ஒன்றித்துக் கொண்டவர். எமது போராட்டம் தொடர்பில் ஆழமான பார்வையைக் கொண்டிருந்த திரு. மணிவண்ணன் அவர்கள் தமிழகத்தில் ஈழப்போராட்டச் செயற்பாடுகள் பலவற்றுக்கு அடிகோலியவர்.

”தேசிய விடுதலைப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயாக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்” என்ற தேசியத் தலைவரின் கூற்றுப்படி மணிவண்ணன் ஐயாவும் மனவுறுதி படைத்த ஒரு செயற்பாட்டாளராகவே திகழ்ந்தார்.

மணிவண்ணன் ஐயா அவர்களின் இழப்பு, இச்சந்தர்ப்பத்தில் ஈழப்போராட்டத்தைப் பொறுத்தவரை பேரழிப்பாகும். ஈழ விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணித்து உழைத்த ஆயிரமாயிரம் செயற்பாட்டாளர்கள் வரிசையில் மணிவண்ணன் ஐயாவும் இணைந்து கொண்டுள்ளார். அவரின் கனவான ஈழவிடுதலையை வென்றெடுப்பதற்காக தொடர்ந்து உழைப்பதே அவருக்கு நாம் செலுத்தும் மரியாதையாக அமையும்.

”விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் அறிஞர்களும் அந்நியப்படுவது மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்” என்று கலைஞர்கள் தொடர்பில் தேசியத்தலைவர் குறிப்பிட்டதைப் போன்று தனது இன மக்களுக்கான போராட்டத்தோடு ஒன்றித்து வாழ்ந்த மணிவண்ணன் ஐயாவின் இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

”புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

இராமு.சுபன், இணைப்பாளர், தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

u1_mani_ltte1

Comments Closed

%d bloggers like this: