புலம்பெயர்

லண்டன் ஓவல் மைதானத்தில் சிறிலங்கா குண்டர்கள் ஈழத்தமிழர்கள் மீது தாக்குதல்

ovelclash-6சிறிலங்காவில் நடக்கவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி, லண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானம் அருகே போராட்டம் நடத்திய ஈழத்தமிழர்களை, சிறிலங்கா அரச ஆதரவுக் குண்டர்கள் தாக்கியுள்ளனர்.

லண்டன் ஓவல் மைதானத்தில், சிறிலங்கா – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் ஐசிசி கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியின் காலிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இதன்போதே சிறிலங்காவைப் புறக்கணிக்க வலியுறுத்தி ஈழத்தமிழர்கள் போராட்டம் ஒன்றை நடத்தினர்.

அதேவேளை, சிறிலங்கா அரசாங்கத்தின் ஏற்பாட்டின் பேரில், சிங்கக்கொடியேந்திய ஆர்ப்பாட்டக்காரர்களும், அப்பகுதியில் போராட்டம் நடத்தினர்.

திடீரென சிங்கக் கொடியேந்திய சிறிலங்கா அரசு ஆதரவுக் குண்டர்கள், ஈழத்தமிழர்கள் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தினர். பெண்கள்,சிறுவர்களும் தாக்கப்பட்டனர்.

பிரித்தானியக் காவல்துறையினர் சிறிலங்கா அரச ஆதரவாளர்களை தடுக்க முயன்றபோது அவர்களுடனும் மோதினர்.

இதையடுத்து வன்முறையில் இறங்கிய சிங்கக்கொடியேந்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பிரித்தானியக் காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.

ovel-clash31

ovel-clash7
ovelclash-6
ovel-clash4