இலங்கை செய்திகள் தமிழ்

பௌத்த பயங்கரவாதத்தை தோலுரிக்கும் டைம் சஞ்சிகை: பௌத்த தேரரின் படம் முகப்பில்.

time_magazine_001உலகளவில் கூடுதலான வாசகர்களைக் கொண்டுள்ள டைம் சஞ்சிகை தனது அட்டைப்படத்தில பௌத்த தேரரின் படத்தைப் பிரசுரித்து, பௌத்த பயங்கரவாதம் தொடர்பில் அம்பலப்படுத்தியுள்ளது.

ஆசிய வலய நாடுகளில் கம்போடியா, தாய்லாந்து, மியன்மார், இலங்கை என்று பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் ஏனைய சிறுபான்மை இன மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.

பௌத்த தேரர்களே அவ்வாறான வன்முறைகளின் பின்னணியில் தலைமைத்துவத்தைக் கொண்டிருப்பது பகிரங்கமான விடயம்.

இந்நிலையில் வரும் ஜுலை மாத டைம் சஞ்சிகை இதழ் தனது அட்டைப்படத்தில் பர்மிய பௌத்த வன்முறைக் கும்பலின் தலைவர் விராது தேரரின் புகைப்படத்தை அட்டையில் பிரசுரித்து, ஆசியா நாடுகளில் பரவி வரும் பௌத்த பயங்கரவாதம் தொடர்பில் கட்டுரையொன்றும் வரைந்துள்ளது.

மேலும் பர்மிய சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களை முன்னெடுத்து வரும் இவரை பர்மிய பின்லாடன் என்றும் அப்பத்திரிகை வர்ணித்துள்ளது.

இலங்கையில் செயற்படும் பொது பல சேனா அமைப்பும் இந்த விராது தேரரின் 969 முன்னணியைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட அமைப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.