வடமாகாண முதல்வருக்கு கொலைமிரட்டல் விட்டவர்களுடன் அனந்தி சசிதரன் டென்மார்க்கில் இரகசிய சந்திப்பு.

Home » homepage » வடமாகாண முதல்வருக்கு கொலைமிரட்டல் விட்டவர்களுடன் அனந்தி சசிதரன் டென்மார்க்கில் இரகசிய சந்திப்பு.
வடமாகாண முதல்வருக்கு கொலைமிரட்டல் விட்டவர்களுடன் அனந்தி சசிதரன் டென்மார்க்கில் இரகசிய சந்திப்பு.

tn3தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு எதிரானவர்களின் ஏற்பாட்டில் தற்பொழுது ஜரோப்பிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நோர்வேயில் இருந்து பிரான்ஸ் செல்லும் பொழுது டென்மார்க்கிலும் தமிழ் தேசியகூட்டமைப்பிற்கு எதிரானவர்களுடன் ஒரு இரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த வடமாகாணசபைத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றும் தேர்தலில் பங்குபற்றிய தமிழ் தேசியக்கூட்டமைப்பை வசைபாடியும் அறிக்கைகள் வெளியிட்ட இந்த குழுவினரின் இணையத்தளத்தில் மட்டுமே முதலவர் விக்கினேஸவரனுக்கு எதிரான கொலைமிரட்டல் வெளியிடப்பட்டிருந்தது.

வடமாகாண சபைத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று முதல்வராக ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ள விக்கினேஸ்வரனுக்கு தமிழீழ மாணவர் படை என்னும் பெயரில் இந்த குழுவினர் விட்ட கொலைமிரட்டலில் விக்கினேஸ்வரனை துரோகி துரையப்பாவுடன் ஒப்பிட்டு எச்சரித்திருந்தனர்.

tn1இந்த குழுவினருடன் நடைபெற்ற சந்திப்பினை ஊடகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டாம் என வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கேட்டுக்கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்றும் டென்மார்க் வந்திருந்த அனந்தி இந்த குழுவினருடன் இணைந்து டென்மார்க் பாராளுமன்ற சபாநாயகரை சந்தித்திருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இணைந்திருந்த இந்த குழுவினரை மறைத்தே தமது இணையத்தளத்தில் தகவலை இந்த குழுவினர்

tn2

வெளியிட்டுள்ளனர்.

சிறிலங்கா அரசின் தமிழனப்படுகொலைக்கு எதிராக முள்ளிவாய்கால் வரை போராடி ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பு புலம்பெயர் நாடுகளுக்கு வந்துள்ள எமது போராளிகளின் தியாகங்களை மதிக்காத இந்த குழுவினருடன் முத்த போராளி ஒருவரின் மனைவி இரகசிய சந்திப்புக்களை மேற்கொள்வதையிட்டு புலம்பெயர் தமிழ் மக்களும் வடமாகாண சபைத் தேர்தலின் போது அனந்தி உட்பட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வெற்றிக்காக செயல்பட்ட தமிழ் ஊடகங்களும் வருத்தம் தெரிவித்துள்ளன.

Comments Closed

%d bloggers like this: