தமிழர்கள் பெருமை மிக்க இனம் நாடுகடந்த அரசில் டெனிஸ் பிரதிநிதி புகழாரம்.

Home » homepage » தமிழர்கள் பெருமை மிக்க இனம் நாடுகடந்த அரசில் டெனிஸ் பிரதிநிதி புகழாரம்.
தமிழர்கள் பெருமை மிக்க இனம் நாடுகடந்த அரசில் டெனிஸ் பிரதிநிதி புகழாரம்.

DSC_3940தமிழ் ஈழ இடைக்கால நிர்வாக அரசின் இரண்டாவது அமர்வுக்கான அங்குராப்பண நிகழ்வுக்கு வருகை தந்துள்ள அங்கத்தவர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

எனது பெயர்; ட்றோல்ஸ் றாவுன் [Troels Ravn] தற்போதைய டென்மார்க் அரசின் சமூக சனசாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினன். கல்வி சார்ந்த விடயங்களுக்குப் பொறுப்பானவன். நானொரு பாடசாலை அதிபருமாவேன்.

1985ல் டென்மார்க்கிற்கு வந்த தமிழ் அகதிகளின் தொடர்பு பள்ளிக்கூடத்தினூடு உருவானது. தமிழர்களின் கல்வி ஆர்வமும் முயர்ச்சியும் அவர்கள் மட்டில் அசாதாரண ஈடுபாட்டை உருவாக்கியது. நீங்கள் உங்கள் கலாச்சார பாரபரியங்களோடு வாழவிரும்புபவர்கள் மட்டுமல்ல ஏனைய கலாச்சாரங்களோடும் இலகுவாகக் கலந்து காலச் சூழ்நிலைகளுக்கேற்ப வாழ்வை அமைத்துக் கொள்பவர்கள். ஒரு பெருமை படைத்த சமூகமும் கூட.

ஒரு இன மக்களாக 2009ம் ஆண்டு யுத்தத்தின் இறுதி நாட்களில் தமிழர்கள் அனுபவித்த துன்ப துயர இழப்புக்களைக் தொலைக்காட்சி ஊடகங்களூடாக எமது மக்கள் கண்டபோது பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள். டென்மார்க் வானோலியில் தாய்மொழியை பயன்பாட்டு மொழியாகக் கொண்டு விரும்பிய மதத்தைத் தழுவி சமாதானத்துடனும் சுயநிர்ணய உரிமையுடனும் வாழ விரும்பும் உங்கள் உரிமைகளைப் பற்றி விரிவாக ஆராயப்பட்டது.

இதே உரிமைகளோடு உலகத்தை வாழவைப்பதற்காகவே 1945ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் தாபனம் உருவானது. நாடு விட்டு நாடு தாண்டி கண்டம் விட்டு கண்டம் பாய்ந்த ஒரு உலக யுத்தத்தின் பின்பே இது உருவானது. இனி ஒருபோதும் சிறுபான்மை என்பதற்காக நசுக்கப்படவோ இன மத காரணங்களுக்காக துன்புறுத்தப்படவோ கூடாது என்பதற்காகவே இவ் அமைப்பு உருவாக்கப்பட்டது.

இவை அன்றைய இலட்சியங்களும் நோக்கங்களுமாக இருந்தபோதும் நாம் இன்று வரை இதற்காக உழைத்து வருகிறோம். இதைத் தொடர்ந்து உருவான ஐக்கிய நாடுகளின் பொருளாதார சமூகக் கலாச்சார அமைப்பானது பாரம்பரியங்களைப் பேணிப் பாதுகாத்து கலாச்சார வேறுபாடுகளைப் பற்றிய புரிந்துணர்வுகளை வளர்க்கும் நோக்கங்களைக் கொண்டிருந்தது.

ஐக்கிய நாடுகளின் தாபனத்தின் கனத்தை கடமைகளை அதிகரிப்பதன் நோக்கமாக மனித உரிமை ஆணைக்குழுவும் உலக மனித உரிமைச் சாசனமும் 1948ல் அறிமுகப்படுத்தப்பட்டன.

குடியேற்ற ஆதிக்கங்கள் நாடுகளின் பழமைகளை சிதைத்து மத கலாச்சார எல்லைகளை அழித்தன. இந் நலமைகள் படிப்படியாக மாறி பெயர் மாற்றப்பட்ட நாடுகளும் புதிய எல்லைகளும் உருவாக்கப்பட்டு சுய நிர்ணய உரிமைகொண்ட மக்களாக விடுதலை பெறுகையில் பழைய எதிரிகள் என்ற நிலைகளும் மத வேறுபாடுகளும் நிலம் ஆட்சி அதிகாரங்களைப்பற்றிய பேராசைகளும் கூடவே கிளர்ந்து எழுவதைக் காண்கின்றோம். ஆசிய ஆபிரிக்க நாடுகளே இதற்கு உதாரணங்களாகும். இலங்கையின் நிலமையும் இதுதான்.

சிங்கள அரசால் புகுத்தப்பட்ட சிங்களம் மட்டும் சட்டமும் சிங்கள மொழித் தேர்ச்சி அற்றவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் மறுக்கப்படுதலும் கூடவே நிலப் பறிப்பும் தமிழர்களின் வாழ்வாதாரங்களை முழுமையாகப் பாதிக்கின்றன. பறிக்கப்பட்ட நிலங்களில் சிங்கள குடியேற்றங்களைத் தோற்றுவித்தல் இனத்தின் இருக்கையையே கேள்விக்குறியாக்குகின்றது. வுட கிழக்கில் குவிக்கப்பட்டுள்ள 300000 வரையான இராணுவத்தினரால் அடக்குமுறைகள் தொடர்ச்சியாக ஏவப்படுகின்றன.

கடத்தப்பட்டு காணாமல் போகும் தகப்பன் மகன் சகோதரர்களும் பெண்களின்மேல் ஏவப்பட்டு வரும் பயங்கரமான பாலியல் தாக்குதல்களும் குழந்தைகள் அனாதைகளாக்கப் படுதலும் மன்னிக்கவோ பொறுத்துக் கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ முடியாத நிகழ்வுகளாகும்.

சித்திரை 2013ல் டென்மார்க் பாராளுமன்றத்தில் ‘மறைக்கப்பட்ட மோதல்’ என்ற தலைப்பில் இலங்கையின் மனித உரிமைகளைப்பற்றிய மகாநாட்டில் நான் அங்கத்துவம் வகிக்கும் சமூக சனநாயகக் கட்சியும் ஏனைய மூன்று கட்சிகளும் சேர்ந்து வேளியிட்ட அறிக்கையில் பின் வரும் கோரிக்கைகள் அடங்கியிருந்தன.

அதாவது

• டென்மார்க் நாடானது யுத்த இறுதி நாட்களில் நடந்த அத்தனை கொலை குற்றங்களையும் பாரபட்சமின்றி சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென கோருகிறது.

• மனித உரிமை மன்றத்தின் ஆணையாளர் தொடர்ச்சியாக இலங்கையின் மனித உரிமை நிலமைகளை கண்காணிக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றது.

• 2009 இறுதி யுத்த நாட்களில் சரணடைந்த அத்தனை போர்க் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும் அன்றேல் நீதி விசாரணைக்கு உட்படுத்தவேண்டுமென கோருகின்றது.

இடைக்கால நிர்வாக அரசாங்கத்தினராகிய உங்கள் முன் இன்றுள்ள பணி உங்கள் நடவடிக்கைகள் மூலமாகவும் பரப்புரைகளூடும் இன்றைய நிலமைகளை விளக்கி கடந்த காலங்களில் நடந்தவைகளையும் சர்வதேசத்தினரின் அறிவுக்கும் உணர்வுகளுக்கும் கொண்டு செல்வதேயாகும்.

இதன் வழி பலபடி முன்சென்றுள்ள உங்கள் முயர்ச்சிகளோடு எமது பங்களிப்பும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகின்றேன்.

அமெரிக்காவைப் பாருங்கள். பல்லாயிரம் மைல்களுக்கப்பால் இருந்து ஆட்சி செய்த குடியேற்ற ஆதிக்கத்தை எதிர்த்துப்போராடி சுயநிர்ணய உரிமைகொண்ட மக்களாக விடுதலை பெற்றார்கள். இதைத் தொடர்ந்து நடைபெற்று வந்த வட தென் மாநிலங்களுக்கிடையிலான யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வந்து ஐக்கிய அமெரிக்க இராட்சியத்தை உருவாக்கினார்கள்.

1960ல் பலமடைந்து நிகழ்ந்துவந்த குடியுரிமை இயக்கப் பேரணிகள் மூலம் சட்ட ரீதியான சம உரிமை எல்லா அமெரிக்கப் பிரசைகளுக்கும் உறுதி செய்யப்பட்டது.

டென்மார்க்கில் வாழும் நாம் அதிஷ்டசாலிகளாயினும் நம் மூதாதையர்களான வைகிங்ஷ் இங்கிலாந்து உட்பட உலகின் ஒரு பகுதியை ஒரு பொழுது ஆண்டவர்கள்.

இரண்டாம் உலக யுத்தத்தின் பொழுது யேர்மனியின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்ததை விட நாம் எப்போதும் சுதந்திரமாகவே வாழ்ந்துள்ளோம்.

இலங்கை அரசானது சர்வதேசம் விதித்த கொள்கை கோட்பாடுகள் நடைமுறைகளை உதாசீனம் செய்து சிறுபான்மையின மக்களை காக்கத் தவறியமையும் சொந்த நாட்டின் கௌரவத்தை பேணத் தவறியமையுமே இப்போது வாக்குப் பெட்டிகளினூடு உங்கள் உரிமைப்போர் முன்னெடுக்கும்படியானது. இதற்குரிய கௌரவத்தை உலகம் உங்களுக்குத் தரவேண்டும்.

இன்று வடமாகாண நிர்வாகம் தேர்தல் மூலம் நிலைநாட்டப்பட்டுள்ளபோதும் அரசியல் சாசனத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள மாகாணங்களுக்கான அதிகாரங்கள் மறுக்கப்படுவதை நாம் அறிவோம்.

மறுக்கப்படும் பத்திரிகைச் சுதந்திரத்தால் உண்மைகளைக் கூற வரும் பத்திரிகையாளர்களின் உயிர்கள் பறிக்கப்படுகின்றன. சனநாயகத்தின் இருப்பிற்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள அபாய நிலமை இதுவாகும்.

டென்மார்க் பாராளுமன்றப் பிரதிநிதி என்ற பொறுப்பிலிருப்பதால் நாமும் உங்கள் பிரதிநிதிகளும் உங்கள் நிலமைகளை டென்மார்க் மக்களுக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.

நாங்கள் யாவரும் ஒரே குரலில் உங்கள் நிலமைகளை விளக்கி உங்கள் கோரிக்கைகளை சர்வதேசத்தின் முன் வைப்போமேயானால் உங்கள் நியாயமான வேண்டுகோள்கள் கேட்கப்படும் நிலமைகள் உருவாகும்.

சனநாயக வழிகளைப் பற்றிக் கொண்டு நாடுகளையும் எல்லைகளையும் தாண்டி ஒரு பொது நோக்கத்திற்காகப் போராட வந்துள்ள நீங்கள் என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளீர்கள். எனது ஆழ்ந்த மரியாதை உங்கள் அனைவருக்குமுண்டு.

எதிர்காலம் தமிழர்களுக்கு சமாதானத்தையும் வழமான வாழ்வையும் கொண்டு வரும். தமிழ் ஈழ இடைக்கால நிருவாக அரசானது இவைகளை அடைய உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்ற நற்செய்தியை இன்று உங்களிடம் விட்டுச் செல்கிறேன்.

நன்றி
வணக்கம்.

தமிழாக்கமும் தகவலும் : தர்மா தர்மகுலசிங்கம்

Comments Closed

%d bloggers like this: