16.01.1993 அன்று வங்கக்கடலில் இந்தியச்சதியால் காவியமான தங்கத்தலைவனின் தம்பிகள் கேணல் கிட்டு மற்றும் ஒன்பது மாவீரர்களின் 21ம் ஆண்டு நினைவு வணக்கம் நோர்வே அன்னைபூபதி தமிழ் கலைக்கூடம் றொம்மன் வளாகத்தில் 18.01.2014 அன்று மாலை 6ம ணிக்கு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் நினைவு கூரப்பட்டது.
இந்நிகழ்வானது சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி அகவணக்க மரியாதைசெய்யப்பட்டதை தொடர்ந்து வீழ்ந்த வீரர்களின் நினைவுரைகள் காணொளியாக வெண்திரையில் விரிந்தது அக்காணொளியில் விடுதலைப்புலிகளின் அனைத்துலக இணைப்பாளர் மதிப்புக்குரிய திரு.கஸ்ரோ மற்றும் விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் மதிப்புக்குரிய திரு.ச.பொட்டு ஆகியோர் தளபதி கேணல் கிட்டு அவர்களின் பன்முக ஆழுமைகள் தொடர்பாக பேசியிருந்தனர்.
குறிப்பாக அவர் தாயகத்தில் கொண்ட காதல் தாயகத்தின் விடுதலை சார்ந்து சிந்திக்கின்ற விடயங்கள் தேசியத்தலைவரின் சிந்தனையை ஒத்து இருந்ததால் அதைக்கண்டு தலைவர் அவர்கள் பிரமித்த விடயங்கள் என கேணல் கிட்டு அவர்களின் விடுதலைப்பயணத்தின் உறுதியான செயல்த்திறனின் பக்கங்கள் நினைவுரையில் பகிரப்பட்டிருந்தது.
அத்தோடு விடுதலைப்பாடல்கள் விடுதலைப்பாடல்களுக்கான எழுச்சி நடனங்கள் கவிதை சிறப்புரை என எழுச்சி நிகழ்வை மேலும் அழகுபடுத்தியிருந்தது.
நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் புதிய இணைப்பாளர் அரன் அவர்கள் சிறப்புரையில் “நாம் ஒன்றுபட்ட சக்தியாக திரண்டு ஒரே திசையில் ஒரே இலட்சியம் என்ற நேர்கோட்டில் கருத்து பேதங்களை கழைந்து நிமிர்ந்து செல்வதோடு மாவீரர்களின் தியாகங்களை மனதில் இருத்தி விடுதலையை வென்றெடுப்போம் என இந்நாளில் உறுதியெடுப்போம்” எனவும் தெரிவித்துள்ளார்.




Du skal logge ind for at skrive en kommentar.