வவுனியாவில் நடந்த புலிப் பாய்ச்சல்!! இனிமேல் புலிகளை வைத்து கூட்டமைப்பு பிழைப்பு நடாத்தக்கூடாது!

Home » homepage » வவுனியாவில் நடந்த புலிப் பாய்ச்சல்!! இனிமேல் புலிகளை வைத்து கூட்டமைப்பு பிழைப்பு நடாத்தக்கூடாது!

ltte_tna_members_meet_failed_02வவுனியாவில் இன்று ஜனநாயகவழிக்குத் திரும்பிய புலிகளின் பிரதிநிதிகளுக்கும் கூட்டமைப்பின் தலைமைப் பீடத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை காரசாரமான முறையி்ல் நடந்து முடிவடைந்துள்ளது. தமிழீழப் போராட்டத்தில் தம்மை இணைத்து ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள் தற்போது ஜனநாயகப் பாதைக்கு திரும்பி மக்களுக்கான பணியை ஆரம்பிப்பதற்காக எதிர்வரும் தேர்தலில் போட்டியிட கூட்டமைப்பிடம் வேட்பாளர் பட்டியலில் இடம் தருமாறு கோரியிருந்தனர்.

தங்களாலேயே கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் கூட்டமைப்பில் உள்ளவர்கள் தற்போதும் தங்களை வைத்தே பிழைப்பு நடாத்திக் கொண்டிருப்பதையும் கண்ணுற்ற ஜனநாயகவழிக்கு வந்த புலிகள் தாங்களும் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதற்காக கூட்டமைப்பிடம் நேரடியாகச் சென்று தமக்கு உரித்தானதை கேட்ட போது கூட்டமைப்புத் தலைமைகள் அதனைப் புறக்கணித்துள்ளனர்.

அங்கு சென்ற விடுதலைப்புலி உறுப்பினர்களை இராணுவப் புலனாய்வாளர்கள் என சம்மந்தன் நேரடியாகவே அவர்களுக்கு கூறி அவர்களைப் பெரும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளார். இதற்குப் பதிலளித்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் நாங்கள் சிறையில் இருந்த போது எங்களை சிறைகளில் வந்து பார்த்த கூட்டமைப்பு உறுப்பினர்கள் உங்களின் முன்னாலேயே இருக்கின்றார்கள். நாங்கள் புலனாய்வாளர்கள் என்றால் எப்படி நாங்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்போம் என ஆவேசமாகத் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் தற்போது இராணுவப் புலனாய்வாளர்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லையா?? இராணுவம் ரணில் விக்கிரமசிங்காவினதும் ஜனாதிபதியினதும் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த ரணில் விக்கிரமசிங்கவுடனும் ஜனாதிபதி மைத்திரியுடனும் நீங்கள் அளவளாவிக் கொண்டு இருக்கின்றீர்கள். தேசிய அரசில் அங்கம் வகித்து அமைச்சர்கள் பதவிகள் தருமாறு கேட்டுள்ளீர்கள். அப்படி இருக்கும் போது குறித்த தலைமைக்கு கீழ் கட்டுப்பட்டு நடக்கும் இராணுவத்தினரின் புலனாய்வுப் பிரிவு என்று எம்மைக் கூறுவதற்கு உங்களுக்கு வெக்கமாக இருக்கவில்லையா?? என போராளிகள் தரப்பில் இருந்து குமுறல்கள் அங்கே வெளிப்பட்டன. உன்மையில் கூட்டமைப்பினரே பாரிய இராணுவப் புலனாய்வுக் கட்டமைப்பாகத் தொழிற்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் எனவும் முன்னாள் விடுதலைப் புலிகள் தமது மனக்குமுறல்களை அங்கு தெரிவித்திருந்தனர்.

அத்துடன் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு காணாது எனவும் சம்மந்தன் அங்கு தெரிவி்த்து போராளிகள் அரசியலில் இறங்கினால் அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என நான் ரணிலிடம் கேட்கப் போகின்றேன் எனவும் அங்கு வைத்து அவர்களை அச்சுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து அங்கு வைத்து முன்னாள் போராளிகளால் கூட்டமைப்புக்கு முக்கிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலம் விடுதலைப் புலிகளின் தியாகத்தையும் விடுதலைப் புலிகளால் உயிரிலும் மேலாகப் போற்றப்பட்ட தமிழ்த் தேசியத்தையும் வைத்து நீங்கள் பிழைக்க கூடாது. இனி விடுதலைப் புலிகளைப் பற்றி உசுப் பேற்றும் பேச்சுகள் பேசி தேர்தலில் வாக்குச் சேகரிக்கக் கூடாது எனவும் முன்னாள் போராளிகள் கூட்டமைப்பிற்கு தமது பதிலடியைக் கொடுத்திருந்தனர்.

Comments Closed

%d bloggers like this: