இலங்கை தமிழ்

வேட்பாளர் பட்டியலில் தன்னை சேர்த்துக் கொள்ளுமாறு அலைந்து திரியும் அனந்தி.

அனந்தி சசிதரன் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியலில் தன்னுடைய பெயரையும் சேர்த்துக் கொள்ளுமாறு அலைந்து வருகிறார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரின் கொடும்பாவியை எரித்து புகழ் பெற்ற அனந்தி தமிழரசுக்கட்சியிடம் தன்னை வேட்பாளர் பட்டியலில் சேர்க்குமாறு வேண்டிய போதிலும் அது நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடாக வேட்பாளர் பட்டியலில் இடம்பெற முயற்சித்த போதிலும் அது முடியாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. அனந்தியை தனது கட்சியின் சார்பில் வேட்பாளர் பட்டியலில் சேர்க்குமாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் கோரிய போதிலும் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.

அனந்தியை ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்துவதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் முயற்சி செய்ததற்கு பல காரணங்கள் உண்டு.

அனந்தி சசிதரன் தன்னை புலி இயக்க பெண் என சமூகத்தில் அறிமுகப்படுத்தி கொண்டாலும் அவர் தீவிர ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்க குடும்பத்தை சேர்ந்தவராகும். அனந்தியின் சகோதரன் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்;தில் இருந்து யாழ்ப்பாணத்தில் கொலை கொள்ளை பாலியல் பலாத்காரம் என பல சமூகவிரோத செயல்களை செய்தவர். இதனால் இவருக்கு விடுதலைப்புலிகள் மரணதண்டனை வழங்கினர். இதன் பின்னர் எழிலலை திருமணம் முடிந்தபின்னரே அவர் தன்னை புலி பெண்ணாக மாற்றிக்கொண்டார். எனினும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் தொடர்பை துண்டித்து கொள்ளவில்லை. தன்னுடைய இயக்கத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தால் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்துவதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரனும், தனது முன்னையை இயக்கத்தின் சார்பில் போட்டியிடுவதற்கு அனந்தியும் விரும்பி இருந்தனர்.

அனந்தியை தனது இயக்கத்தின் ஊடாக வேட்பாளர் பட்டியலில் இணைத்து கொண்டால் அனந்திக்கு வாக்களிப்பவர்கள் தனது இலக்கத்திற்கும் வாக்களிப்பார்கள் இதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பில் வெற்றி பெறுபவர்களில் அதிக விருப்பு வாக்கு தனக்கு கிடைக்கும் என சுரேஷ் நம்பினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் தனக்கு இடம் கிடைக்காது என அறிந்து கொண்ட அனந்தி தற்போது கஜேந்திரகுமாரின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்காக அவர்களை நாடியுள்ளார். அவர்கள் அனந்தியை சேர்த்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே எதிர்வரும் தேர்தல் பிரசாரங்கள் கொடும்பாவி எரிப்பாகவும் பொய் புரட்டுக்கள் நிறைந்ததாகவும் மாறும் என நம்பபடுகிறது.

தனிநாடு கோரமாட்டோம், பிரிவினைக்கு ஆதரவாக செயல்படமாட்டோம், ஒற்றைஆட்சியின் கீழ் சிறிலங்கா ஜனநாயக குடியரசிற்கு விசுவாசமாக செயல்படுவோம் என சத்தியப்பிரமாணம் செய்து கொண்டு இவர்கள் எதனை தமிழ் மக்களுக்கு பெற்றுத்தரப் போகிறார்கள்?