இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்

பாராளுமன்ற ஆசனங்களை மீட்பதற்கான சமர் களத்தில் திரண்டுள்ள புலிகள்.

ex_ltte_01பாராளுமன்ற ஆசனங்களை மீட்பதற்கான சமர்க் களத்தில் இறங்கியுள்ள முன்னாள் போராளிகள் தற்போது மக்களின் ஆதரவுக்காக வியுகம் அமைத்து ஒவ்வொரு பகுதிகளுக்குள்ளும் நுளைந்து முன்னேறி வருகின்றனர். அவர்களுக்கான பின்னுாட்ட ஆதரவை மக்கள் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தி வருவதும் முன்னாள் போராளிகளுக்கு தெம்பாக இருந்துவருகின்றது. புலிகளின் தேசியத் தலைவர் பிறந்த வல்வெட்டித்துறையில் நேற்று மாலை முன்னாள் புலிப் போராளிகளுக்கு அப்பகுதி மக்கள் பெரும் ஆதரவைக் கொடுத்துள்ளனர். அவர்களின் பிரச்சார நடவடிக்கைக்காக இரு வீடுகளை அவர்களுக்கு ஒதுக்கிக் கொடுத்துள்ளதாக ஜனநாயகப் போராளிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.