இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்

புளொட் அiமைப்பினற்கு வாக்கு கோரும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி,! ஆதவாளர்கள் போர்க்கொடி!!

ananthi sitharthanஇறுதியுத்த கணம் வரையினில்; விடுதலைப்புலிகளை அழிப்பதிலும் அதே போன்று அவர்களை வேட்டையாடி காட்டிக்கொடுப்பதிலும் முன்னின்ற புளொட் அiமைப்பின் தலைவர் சித்தார்த்தனிற்கு வாக்கு கோரும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் நடவடிக்கை அவரது எஞ்சிய ஆதவாளர்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறுதி யுத்த நடவடிக்கைகளினில் தப்பித்து வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாம்களுள் பதுங்கியிருந்த பல முன்னாள் போராளிகளை வேட்டையாடுவதினில் புளொட் அமைப்பின் உறுப்பினர்கள் முன்னின்று செயற்பட்டிருந்தனர். அவர்களால் கடத்தப்பட்ட மற்றும் அரச படைகளிடம் காட்டிக்கொடுக்கப்பட்ட பல போராளிகள், ஆதவாளர்களென பலர் பற்றி தகவல்களில்லாதுள்ளது.

இந்நிலையினில் காணாமல் போனவர்களிற்காக குரல் எழுப்புவதாக கூறிக்கொள்ளும் அனந்தி இதனை செய்த சித்தார்த்தனிற்கும் அவரது ஆட்களிற்கும் குரல் கொடுப்பதே ஆதரவாளர்களை சீற்றங்கொள்ள வைத்துள்ளது.
ஏற்கனவே அனந்தியினது நடவடிக்கைகள் காரணமாக அவரது ஆதரவாளர்கள் பலரும் விட்டுவிலகியுள்ளனர்.இந்நிலையினில் தற்போது எஞ்சிய ஆதரவாளர்களும் விட்டு விலக முடிவு செய்துள்ளனர்.

இதனிடையே அனந்தியை தற்போது இயக்கிவரும் தென்னிலங்கை தரப்புக்கள் குறித்த முக்கிய புகைப்படங்களை வெளியிட ஆதரவாளர்கள் முடிவு செய்திருப்பதாக தெரியவருகின்றது.

இச்சம்பவங்களின் தொடர்ச்சியாகவே ஜனநாயகப் போராளிகள் கட்சியினில் இணைய அனந்தி விருப்பம் கொண்டிருந்த போதும் அவர்கள் பின்னடித்ததாக தொடர்புடைய தரப்புக்கள் தெரிவிக்கின்றன.