வடமாகாண அமைச்சரவையினை மாற்றியமைக்க தயாராகின்றது தமிழரசுக்கட்சி ?

Home » homepage » வடமாகாண அமைச்சரவையினை மாற்றியமைக்க தயாராகின்றது தமிழரசுக்கட்சி ?

1549537_198225150384809_765951259_n-620x413வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையினை மாற்றியமைக்கும் முயற்சியினில் தமிழரசுக்கட்சி தரப்புக்கள் முயற்சிகளை ஆரம்பித்துள்ளன.

அவ்வகையினில் அமைச்சரவையினை மாற்றியமைக்கவும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவேண்டுமெனவும் சபையின் பிரதி அவைத் தலைவர் ம.அன்ரனி ஜெகநாதன் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

வடக்கு மாகாண சபை அமைக்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகின்றன. சபையின் அமைச்சரவையை முழுமையாக மாற்றியமைக்கவேண்டும். இது வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பலரின் வேண்டுகோளாக இருக்கின்றது. இதனை ஒவ்வொரு உறுப்பினர்களிடமும் நேரடியாகக் கேட்டு அறிந்து கொள்ளலாமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்களைக் குறிப்பிட்டு, பிரதி அவைத்தலைவர் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு முகவரியிடப்பட்டு இது தொடர்பான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தேர்தலின் போது பிரச்சார நடவடிக்கைகளினில் ஈடுபடாமை தொடர்பினில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பொ.ஜங்கரநேசன் தமிழரசு தரப்புக்கள் சீற்றங்கொண்டுள்ளமை தெரிந்ததே.

Comments Closed

%d bloggers like this: