அனந்தி ராஜினாமா.?

Home » homepage » அனந்தி ராஜினாமா.?

Anandiஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்காவிட்டால், வட மாகாணசபை உறுப்பினர் பதவியையும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையையும் ராஜினாமா செய்ய நேரிடும் என வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார் .

அனந்தியுடன், மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கமும் இணைந்து யுத்தக்குற்றங்கள் தொடர்பில் வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது, எனினும், இலங்கை தமிழரசுக்கட்சி இம்முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கத் தவறினால் பதவிகளை துறக்கப் போவதாக அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, கட்சியின் சார்பில் எந்தவொரு பிரதிநிதியும் ஜெனீவா விஜயம் செய்யப் போவதில்லை எனவும் கட்சியன்றி தனிமையில் ஜெனீவா செல்லமுடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments Closed

%d bloggers like this: