டென்மார்க்

ஐ.எஸ்.தீவிரவாதிகளின் வீடியோவை பார்த்து காதலனுடன் தாயாரை கொலை செய்த சிறுமி

lisa-borch3டென்மார்க் நாட்டை சேர்ந்தவர் லிசா போர்ச் (வயது 15) இவர் அப்துல்லா என்ற வாலிபரை காதலித்து வந்தார். அப்துல்லா ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர். இவரது காதலுக்கு தாயார் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். ‘உன்னை விட வயது அதிகம் உள்ள நபருடன் பழகாதே’ என கண்டித்து உள்ளார். இந்த நிலையில் ஐ.எஸ் தீவிரவாதிகளிள் பிணையக்கைதிகளை தலையை வெட்டி கொல்லும் வீடியோக்களை யூடியூப் வழியாக லிசா பார்த்து உள்ளார் இந்தை தொடர்ந்து ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர தீர்மானித்துள்ளார்.

பின்னர் காதலனை வீட்டுக்கு அழைத்த லிசா காதலனுடன் சேர்ந்து தனது திட்டங்களுக்கு இடையூறாக இருந்த தாயாரை கொலை செய்து உள்ளார். தனது தாயாரை சுமார் 20 முறை குத்தி கொலை செய்து உள்ளார். பின்னர் தனது தாயாரை மர்ம நபர் ஒருவர் கொன்றுவிட்டு தப்பிவிட்டார் போலீசாரிடம் நாடகமாடி உள்ளார். ஆனால், வீட்டிற்கு வந்த போலீசார் அங்குள்ள காதலர்கள் இருவரின் கைரேகைகளை கண்டுபிடித்து இந்த கொலைக்கு லிசாவும் அவரது காதலனும் தான் காரணம் கண்டறிந்தனர்.

இருவரின் மீதான வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, லிசாவிற்கு 9 வருடங்களும் அவருடைய காதலனுக்கு 13 வருடங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்