இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்

யாழ் சங்கிலியன் சிலையைக் கேவலப்படுத்திய கயவர்கள்.

choat-01நல்லூர் முத்திரைச் சந்தியில் உள்ள சங்கிலியன் சிலையில் கொக்கோ-கோலா சோடாவுக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளமை தமிழ் மக்களை பெரும் விசனமடையச் செய்துள்ளது. தமிழ் மக்களின் வீரத்தை வெளிப்படுத்திய சங்கிலி மன்னன் கையில் ஏந்தியிருக்கின்ற வாளில் கொக்கோ-கோலாவின் இந்த விளம்பரச் சின்னம் மாட்டப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய மகோற்சவத்திற்கு வருகின்ற மக்களுக்கு தமது குளிர்பானம் தொடர்பில் விளம்பரம் செய்வதற்காக கொக்கோ-கோலா நிறுவனத்தின் பணியாளர்கள் இந்த விளம்பர சின்னத்தை மாட்டியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. தமிழ் மன்னனைக் கொச்சைப்படுத்திய இந்தக் கம்பனியின் செயற்பாடு மிகவும் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ள மக்கள் இந்த விளம்பர சின்னத்தை அகற்றுவதற்கு யாழ்.மாநகர சபை உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

choat-01

choat-02