கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுங்கள்; ஜனாதிபதியிடம் ஜெனீபன் கோரிக்கை

Home » homepage » கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுங்கள்; ஜனாதிபதியிடம் ஜெனீபன் கோரிக்கை
கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுங்கள்; ஜனாதிபதியிடம் ஜெனீபன் கோரிக்கை

my-3-janifan-720x480அண்மையில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ள ஜெனீபனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் சந்தித்துள்ளார்.

முல்லைத்தீவு பகுதியில் ஆடைத் தொழிற்சாலையொன்றின் அங்குரார்ப்பண நிகழ்விற்கு ஜனாதிபதி சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தன்னை விடுதலை செய்தமைக்கு இதன்போது ஜெனீபன் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்ததாகவும், சிறைவாசம் அனுபவித்துவரும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிபனின் பெற்றோரும் ஜனாதிபதியை சந்திப்பதற்காக அங்கு சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments Closed

%d bloggers like this: