இந்தியா

இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் கருணாநிதி… மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் தேறி வருகிறார். இன்னும் 2 நாட்களில் அவர் வீடு திரும்புவார் என அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொண்டை மற்றும் நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளதால் சென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவர் எளிதாக மூச்சு விடும் வகையில் டிரக்கியோஸ்டோமி சிகச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் மருத்துவமனை சென்று கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு நேரில் வாழ்ந்து தெரிவித்த பின் செய்தியாளர்களுடன் பேசிய ஸ்டாலின் கருணாநிதி உடல்நலம் தேறி வருகிறார் என தெரிவித்தார். மேலும், பிரதமரை இன்று சந்திக்கும் முதலமைச்சர் பன்னீர்செல்வம், புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேவையான உரிய நிதியை மத்திய அரசிடம் கேட்டு பெற வேண்டும் என கூறினார்.