துருக்கி, பெர்லின் சம்பவங்களுக்கு இலங்கை கண்டனம்.

Home » homepage » துருக்கி, பெர்லின் சம்பவங்களுக்கு இலங்கை கண்டனம்.
துருக்கி, பெர்லின் சம்பவங்களுக்கு இலங்கை கண்டனம்.

துருக்கியிலுள்ள ரஷ்ய நாட்டு தூதுவர் அண்ட்ரிவ் கொலோவ் பொலிஸார் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, இலங்கை கண்டனம்  வெளியிட்டுள்ளது.

துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்ற சமகால கலை தொடர்பான கண்காட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, ரஷ்ய தூதுவர் நேற்று சென்றிருந்தார்.

அப்போது நிகழ்ச்சியின் நடுவே திடீரென வந்த நபர், அங்கு மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்த ரஷ்ய தூதுவருக்கு பின்னாலிருந்த அந்த நபர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டார். இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தின் போது, மேலும் 3 பேர் படுகாயமடைந்ததாகவும், ரஷ்ய தூதுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்பின்னர், ரஷ்ய தூதுவரை சுட்டுக்கொன்ற நபரை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், அந்த நபரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பெர்லின் கிறிஸ்மஸ் சந்தைக்குள், வேகமாக வந்த ட்ரக் ரக வாகனமொன்று, அங்கு கூட்டமாக நின்றுக்கொண்டிருந்த பொதுமக்கள் மீது ஏறியதில், 14 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு, இலங்கை கண்டனம் வெளியிட்டுள்ளது.

ஜெர்மனியின் பெர்லின் நகரில் கிறிஸ்மஸ் பண்டிகைக்காக சந்தைப்போடப்பட்டிருந்த இடத்துக்குள், மிக வேகமாக வந்த அந்த வாகனத்தால் 14 பேர் பலியாகியுள்ளனர். இது திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று, அந்நாட்டு பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளர்.

Comments Closed

%d bloggers like this: