புலம்பெயர்

விடுதலைப்புலிகளின் தடையை நீக்குமாறு ஒபாமாவிடம் கோரிக்கை

அமெரிக்காவில் விடுதலைப்புலிகளின் தடையை நீக்கவேண்டும் என்று ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது
விடுதலைப்புலிகள் தடைக்கு உட்பட்டுள்ளமையால், தமிழர்கள் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

விடுதலைப்புலிகளின் தடை காரணமாக, அமரிக்காவில் உள்ள தமிழர்கள், வெளிநாடுகளுக்கு சென்று நாடு திரும்பும் போது அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர். பல மணிநேரம் விசாரணைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் கிறிஸ்மஸ் தினங்களில் தமிழர்களுக்கு சிறிய நிவாரணமாக ஒபாமா, விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்கவேண்டும் என்று ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கேட்டுள்ளது.
வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளின் எவ்வித நடவடிக்கைகள் குறித்தும் கடந்த ஏழு வருடங்களாக தகவல்கள் இல்லை.

முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபில்யூ புஸ்ஸின் நிர்வாகத்தினால், மேற்கொள்ளப்பட்ட பிழையான நடவடிக்கை காரணமாக, இறுதிப்போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
தமிழர்களை பொறுத்தவரை அதனை தமது கர்மவினையாகவே கருதுகின்றனர்.

இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நிலை நீதிமன்றம் ஒன்று, 2016 செப்டம்பரில் விடுதலைப்புலிகளின் தடையை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளமையை ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.