“தன் கணவரின் அஸ்தியை காக்க சிறையிலிருந்து வெளிவந்து மீண்டும் சிறைசென்ற அடேல் பாலசிங்கம்” – கழுகுவிழியன்.

Home » homepage » “தன் கணவரின் அஸ்தியை காக்க சிறையிலிருந்து வெளிவந்து மீண்டும் சிறைசென்ற அடேல் பாலசிங்கம்” – கழுகுவிழியன்.
“தன் கணவரின் அஸ்தியை காக்க சிறையிலிருந்து வெளிவந்து மீண்டும் சிறைசென்ற அடேல் பாலசிங்கம்” – கழுகுவிழியன்.

சிந்தியுங்கள் தமிழீழ மக்களே..! – பிரித்தானியாவில் அடேல் பாலசிங்கம் அவர்கள் உயிரோடுதான் இருக்கிறாரா என்ற தமிழீழ மக்களாகிய உங்களின் சந்தேகத்திற்கு இன்று
20-12-2016 முடிவு கிடைக்கப்பெற்றுள்ளது.

உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத மௌனிப்பிற்கு பின்னர் அதாவது 17-05-2009ற்கு பின்னராகிய சுமார் ஏழு வருடகால இடைவெளிக்குள் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் இன்றுதான் தமிழீழ மக்களுக்கு தனது கணவரான தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் அஸ்தி தொடர்பாக பெரிய அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

இந்த அறிக்கைகூட அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் எவரும் தனக்கு இடஞ்சலை ஏற்படுத்தக்கூடாதென்ற தொனிப்பட இவ் அறிக்கையில் விபரிப்பதாகவே எம்மை எண்ணத்தோன்றுகிறது. உண்மையில் இறுதிப்போரில் ஆயிரக்கணக்கான போராளிகளும் மக்களும் தமது இன்னுயிர்களை தமது தேசத்திற்காக அர்ப்பணித்து மண்ணோடு மண்ணாய் உறைந்தபோதும், இன்றுவரை அம்மாவீரர்களுக்காகவோ அன்றி மாண்டுபோன எமது பொதுமக்களுக்காகவோ திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் தன்சார்பாக ஒரு இரங்கல் செய்தியைக்கூட வெளியிடவில்லை என்பதனை மிகுந்த மனவேதனைகளுடன் இங்கே பதிவுசெய்ய விரும்புகின்றேன்.

உண்மையில் எமது தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் எமது மக்கள்மீது தான்கொண்டிருந்த அளவுகடந்த அன்பிற்கும், அக்கறைக்கும் குறைச்சலே இருந்தது கிடையாது. அப்பேற்பட்ட அந்த வெள்ளைப் போராளிக்கு 2009ம் ஆண்டிற்கு பின்னர் என்ன நடந்ததென்ற சந்தேகமே நம் எல்லோரையும் இன்று அங்கலாய்க்க வைக்கின்றது.

உண்மையில் எமது இந்த அங்கலாய்பிற்கு திரைமறைவில் அவரை யாரோ இயங்கவிடாமல் முடக்கி கட்டுப்படுத்திவருவதே உண்மைக் காரணம். ஏனென்றால் இயல்பாக இருந்த ஒருவர் எப்படி திடீரென்று இயல்புநிலை அற்றுப்போகமுடியும்? பொதுவான கணிப்பீட்டின்படி அவர் 2009ற்கு பின்னர் அவரை பராமரித்துவந்த அனைத்துலகத் தொடர்பகம், அனைத்துலகச் செயலகம் என்று தம்மை பெருமைப்படுத்தி இப் புலம்பெயர் மக்களை ஆண்டுகொண்டிருந்த ஒரு பிரிவுதான் அவருக்கான கடிவாளமாக தற்போதுவரை இருந்துவருகின்றது.

அந்தப் பிரிவின் தேவைகளுக்கேற்பவே திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் செயற்பட்டுவருவதாகவும் நோக்கப்படுகின்றது. இதைவிட தாயகத்திலிருந்து புலம்நோக்கிவந்த எந்தவொரு போராளிகளுடனும் அவரை தொடர்புகொள்ள முடியாதபடிக்கு மேற்குறிப்பிட்ட குழுவினர் அவருக்கு சில பொய்யான தகவல்களைக்கூறி அதாவது வந்த போராளிகள் அனைவரும் “இலங்கை புலனாய்வாளர்கள்” என்று அவருக்கு கூறப்பட்டுள்ளதாகவும் இதன்காரணமாகத்தான் அவர் அங்கிருந்துவந்த எந்தவொரு போராளிகளையும் இதுவரை சந்திக்கவில்லை எனவும் “வந்தபோராளிகள்” ஊடாக நம்பகரமாக அறியமுடிகின்றது.

மேலும் ஒரு மிகமுக்கியமான செய்தியொன்றை இங்கே பதிவுசெய்ய விரும்புகின்றேன். அதாவது திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் அவருக்குத் தெரியாமலேயே அவரை இலங்கை புலனாய்வாளர்கள்தான் முடக்கிவைத்துள்ளார்கள் என்பதே உண்மை நிலைவரம்’ இது எப்படியென்றால் ஏற்கனவே புலத்தில் அவரை பராமரித்துவந்த அணியான “அனைத்துலகத் தொடர்பகம் அல்லது அனைத்துலகச் செயலகம்” என்ற இந்த கட்டமைப்பை KP எனப்படும் பத்மநாதனின் உதவியுடன் இலங்கை புலனாய்வாளர்கள் திரைமறைவில் கைதுசெய்து எச்சரித்தபிற்பாடுதான் தற்போதுவரை இந்த அணிகள் புலத்தில் சுமுகமாக இயங்கிவருகின்றன.அனைத்துலகச் செயலகத்தின் பொறுப்பாளர் நந்தகோபன் சிறிலங்காவில் அதன் புலனாய்வுத்துறையுடன் இணைந்து அனைத்துலகச் செயலகத்தை தற்போதுவரை இயக்கிவருகிறார்.அவரது மனைவி பிள்ளைகள் லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு கமல் மற்றும் அருட்குமார் ஆகியோரின் தொடர்புடன் வரவழைக்கப்பட்டு வசதிகளுடன் வாழ்ந்துவருகின்றனர்.இது இவ்வாறிருக்க

திருமதி அடேல் பாலசிங்கத்திற்கு தெரியாமலேயே அவர் வீட்டுக்காவலில் இவ் அணிகளால் முடக்கிவைக்கப்பட்டுள்ளார் என்பதே பட்டவர்த்தனமான உண்மை நிலைவரம்.

எனவே எம் தாய்த்தேச உறவுகளே…….. திருமதி அடேல் பாலசிங்கத்தின் வீட்டுக்காவலுக்கு காவல்காறர்களாகவே மேற்குறிப்பிட்ட கட்டமைப்பு தொடர்ந்தும் புலத்தில் செயற்பட்டுவருகின்றதென்ற உண்மை நிலையினை உணர்ந்து, தனது கணவனின் அஸ்திக்காக மட்டும் தன்னை உங்கள்முன் தோன்றவைக்கும் அல்லது அறிக்கையெழுதவைக்கும் TCCயின் பிதாமகர்களான மேற்குறிப்பிட்ட அமைப்பினை “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்று நீங்கள் கருதாது திருமதி அடேல் பாலசிங்கத்தின் வீட்டுக்காவலாளிகளை தெளிவாக இனங்கண்டு செயற்படவேண்டும் என்பதே நம் எல்லோரதும் விருப்பமாகும்.
நன்றி
கழுகுவிழியன்.

Comments Closed

%d bloggers like this: