தமிழர் வரலாற்று மையத்திடம் தற்போது இருப்பது BBQ சாம்பலா ? அல்லது பாலாண்ணையின் அஸ்தியா?

Home » homepage » தமிழர் வரலாற்று மையத்திடம் தற்போது இருப்பது BBQ சாம்பலா ? அல்லது பாலாண்ணையின் அஸ்தியா?
தமிழர் வரலாற்று மையத்திடம் தற்போது இருப்பது BBQ சாம்பலா ? அல்லது பாலாண்ணையின் அஸ்தியா?

உலகத்தமிழர் வரலாற்று மையம் நேற்று தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அண்ணையின் புனித அஸ்தியின் ஒருபகுதி தம்மிடம் வந்திருப்பதாகவும், தாம் உரிய தருணம் வரும்வரை தாம் பாதுகாப்பதாகவும் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து அடேல் பாலசிங்கம் அன்ரியின் கையெழுத்துடனான கண்டன அறிக்கையும் கூடவே வந்திருந்து. இதைத்தொடர்ந்து பல முகநூல் போராளிகள் களமிறங்கி தங்களுக்குத் தெரிந்த தாக்குதல்களை நடாத்திக்கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் என்ன இது என்று பார்த்தால் 2006 டிசம்பர் 14 பாலா அண்ணை சாவடைந்ததனால் அவர் ஏற்கனவே கேட்டுக் கொண்டதன்படி அதாவது தான் இறந்தபின் தன்னுடலை எரிக்கவேண்டும் எண்டும், தன்னுடைய உடலுக்கு ஒரு போராளிதான் தீயிடவேண்டும் என்ற வேண்டுகோளை விடுதலைப்புலிகள் இயக்கம் நிறைவேற்ற சகல ஏற்பாடுகளையும் வன்னியிலிருந்து கட்டளை வழங்கி செய்தது.

அந்தவகையில் அவரின் உடலை எரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தவர்கள் அவரின் உடலுக்கு தீயிட லண்டனில் அப்போது போராளியைத் தேடினர் அனைத்துலக தொடர்பகத்தில் அது கானல்நீராக தலைவரின் பணிப்பின் பெயரில் தமிழர் புணர்வாழ்வுக்கழகத்தின் பணிப்பாளர் ரெஜி அவர்களை பாலாண்ணையின் உடலுக்கு தீயிடுமாறு அப்போதைய அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் கேட்டுக்கொண்டார்.

அந்தவகையில் பாலாண்ணையின் உடலுக்கு TRO ரெஜி அவர்களே தீயிட்டார் அடேல் அன்ரியல்ல. எனவே தீயிட்டவரிடம் அவரின் அஸ்தியும் கொடுக்கப்பட்டது. அப்போது தமிழ்ச்செல்வன் அண்ணையால் ரெஜி அண்ணையிடம் பாலாண்ணையின் குடும்ப மரபின் படி இறுதிக்கிரியைகளை செய்வதற்கு அஸ்தியின் ஒருபகுதியை கொடுத்து விட்டு ஒருபகுதியை பாதுகாப்பாக வன்னிக்கு அனுப்புமாறும் பணிக்கப்பட்டது. அந்தடிப்படையில் அடேல் அன்ரியிடம் கையளிக்கப்பட்ட அஸ்தி உரிய மரியாதையுடனும் இறுதிக்கிரியைகளுடனும் நீரில் கலக்கப்பட்டது.

மீதமுள்ள ஒருதொகுதி அஸ்தி விடுதலைப்புலிகளின் மரபுக்கு ஏற்ப வன்னிக்கு எடுத்துச்செல்லப்பட்டு விதைகுழியில் விதைக்கப்பட்டு கல்லறையாக அமைய இருந்தது. இந்த விடயத்தில் விடுதலைப்புலிகள் பாலாண்ணைக்கு வன்னியில நினைவுக்கல் நாட்டவில்லையே என்று சில மேதாவிகள் எழுதியுள்ளனர். ஒரு மாவீரனின் அஸ்தியோ, உடலோ வேறொரு நாட்டில் இருந்தால் தமிழீழத்தில் நினைவுக்கல் நாட்டமாட்டார்கள் என்பது சிறுபிள்ளைக்கும் புரியும். அத்துடன் 2007 மாவீரர் நாளில் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் பிரத்தியேகமாக பாலாண்ணைக்கு நினைவுத்தீபம் ஏற்றப்பட்டதும், அப்போது ஊடகங்களில் வந்திருந்தன.

இனி அஸ்தி பற்றிய விடயத்திற்கு வருவோம். வன்னிக்கு அனுப்ப வேண்டிய அஸ்தி 2007 அனுப்ப முயன்று முடியாமல் போக அது அப்போதைய பொறுப்பாளராக இருந்த சாந்தன் அவர்களின் பாதுகாப்பில் இருந்தது அவரும் கைது செய்யப்பட அவை பாதுகாப்பாக இவ்வளவு காலமும் பராமரிக்கப்பட்டு தற்போது வரலாற்று மையத்திடம் கையளிக்கப்பட அவர்களும் அறிக்கையாக அச்செய்தியை வெளியிடவே பிரச்சனை ஆரம்பமாகியது.

இங்கு அறிக்கை வெளியிட்ட அடேல் அன்ரிக்கு பாலாண்ணையின் அஸ்தி பத்திரமாக பாதுகாக்கப்பட்ட விடயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஏனெனில் அவரின் அஸ்தியை வன்னிக்கு எடுத்துச் சென்று கல்லறை கட்டுவது இயக்க விடயம் அதை அவர்கள் நிச்சயமாக அடேல் அன்ரிக்கு சொல்லியிருக்க மாட்டார்கள்.

அத்துடன் அடேல் அன்ரியை கையாண்டவர்களுக்கும் அனைத்துலக தொடர்பகத்தைச் சேர்ந்த கமல் முதலானவர்களுக்கும் இவ்விடயம் பற்றி அறிவிக்கப்படவில்லை ஏனெனில் இது வன்னி சம்பந்தப்பட்ட விடயம் என்பதனால் எனவே இச்செய்தி பலரைக் குழப்பியிருக்கிறது. இதனால் அதிர்ந்து போனவர்கள் அவசர அவசரமாக அறிக்கையை தயாரித்து அடேல் அன்ரியிடம் கையெழுத்தை வாங்கி உண்மையை ஆராயாமல் ஊடகங்களுக்கும், இணையப் போராளிகளுக்கும் அனுப்ப அவர்களுக்கு இது சோழன் பெரியானது.

உண்மையை ஆராயாது அடேல் அன்ரியின் கையெழுத்துடன் வெளிவந்த அறிக்கையானது அவரைக் களங்கப்படுத்தியுள்ளது. ஏற்கனவே தேனிசை செல்லப்பா லண்டன் வந்து இசைநிகழ்ச்சி நடாத்தியபோதும் அடேல் அன்ரியை அறிக்கை வெளியிட வைத்தவர்களல்லவா இவர்கள்.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்காக, கைதுசெய்யப்பட்டு கொல்லப்பட்ட போராளிகளுக்காக அல்லது நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் போராளிகளுக்காக அதேபோல் விச ஊசி ஏற்றப்பட்டு தொடர்ச்சியாக கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் போராளிகளுக்காக அல்லது கைது செய்யப்பட்டு காணாமல் போகடிக்கப்பட்ட போராளிகளுக்காக அல்லது அங்கவீனமுற்று ஒருவேளை உணவுக்காக அல்லல்படும் போராளிகளுக்காகவும், மக்களுக்காகவும் அடேல் அன்ரி ஒரு அறிக்கை தானும் விட்டிருந்தால் அது வரவேற்கத் தக்கதாக தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டிருக்கும்.

மக்கள் இவரை உயர்ந்த இடத்தில் நிறுத்தியிருப்பர் அதை விடுத்து மக்கள் கட்டமைப்புக்களுக்கு எதிராக சில தனி நபர்களுடைய தனி நலன்களுக்காக அறிக்கை விடுவது இவருடைய பெருமைக்கும் நன் மதிப்புக்கும இழுக்கு. இது தமிழ் மக்களின் மத்தியில் அடேல் அன்ரி தவறாக வழிநடத்தப்படுகிறாரா அல்லது சதி நடவடிக்கை வலைக்குள் சிக்குண்டுள்ளாரா என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

போற்றிப் பாதுகாக்க வேண்டிய அடேல் பாலசிங்கம் அன்ரியை தங்களின் பிழைப்பு அரசியலுக்கு துருப்புச் சீட்டாக அடேல் அன்ரியை அவர்கள் பயன்படுத்தியதன் மூலம் அடேல் அன்ரி தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியடைந்து தூக்கி வீசப்படும் துர்ப்பாக்கிய நிலை தோன்றுவதற்கான ஏதுநிலைகள் தென்படுகிறது இது வேதனைக்குரியது.

இவ்வறிக்கையை தயாரித்து வெளியிடப்பட்ட சின்ன ரஞ்சித் கமல் போன்றவர்கள் எப்போதுதான் உணர்ந்து கொள்வார்களோ!!!!!!!!!!!!!!!

அடேல் பாலசிங்கம் அன்ரியின் கையெழுத்துடனான கண்டன அறிக்கைComments Closed

%d bloggers like this: