இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய நடைமுறைகள்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை விஸ்தரிக்கப்படுவதால், அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு விமான நிலைய செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் விமான நிலைய செயற்பாடுகளின் காரணமாக பணி நேரங்களில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
விமான பயணத்திற்காக வரும் பயணிகள் குறைந்த பட்சம் 5 மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்தில் வருமாறு பயணிகளிடம் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
விமான நிலையம் மூடப்படும் காலப்பகுதியினுள் நாள் ஒன்று 20 பயணங்கள் இரத்து செய்யப்படவுள்ளன.
விமான நிலைய ஓடுபாதை புனரமைப்பிற்காக ஜனவரி மாதம் 6ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரை, காலை 8.30 மணி முதல் 4.30 மணிவரை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடான விமான பயணங்கள் மேற்கொள்ளப்படாது.
எப்படியிருப்பினும் மாலை 4.30க்கு பின்னர் பொதுவான வகையில் விமான பயணங்கள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
விமான நிலைய சேவை மட்டுப்படுத்தல் தொடர்பில் அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.