புலம்பெயர்

உயிரோடு இருப்பவருக்கு அஞ்சலி செலுத்திய பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர்

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் மாசி மாதம் வீரச்சாவடைந்த மாவீரர் நினைவு கூறும் நிகழ்வில் உயிரோடு இருப்பவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
26.02.2017 அன்று பிரான்சு தமிழர் ஒருகிணைப்பு குழுவின் அலுவலகத்தில்நடைபெற்ற நிகழ்வில் தமிழீழப்பாடகர் சாந்தன் அவர்களுக்கு பதிலாக தாயகப்பாடகர் திருமாறன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி நிகழ்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரெஞ்சுக்கிளை என்று தங்களை சொல்லிக்கொள்ளும் இவ் குழுவினர் தமிழீழப்பாடகர்கள் யார் என்பதை அறியாதவர்கள் இவ் கட்டமைப்பில் பணி செய்வதோடு இதை கேட்டால் வன்முறையான பதில்களையும் தருகின்றார்கள்

சங்கதி பதிவு போன்ற இணையத்தளங்களை நடத்துபவர்கள் கூட இப்படங்களை பிரசுரித்து உயிரோடு உள்ள அறிவிப்பாளர் – பாடகர் திருமாறன் அவர்களின் படம் தான் இது என்பதை புரியாமல் இதை செய்தமையுடாக இவர்களின் ஊடக கவனம் எந்த வகையில் உள்ளது என்பதை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்
பிரான்சில் தாங்கள் தான் விடுதலைபுலிகள் என்று சொல்லி திரியும் இந்த சிறு கூட்டத்துக்கு யார் சாவடைந்தார்கள் என்பதை கூட அறிந்து கொள்ள முடியாத இவ் நிலையில் இவர்கள் எம்மை வழி நடத்துகின்றார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உயிருடன் உள்ள தாயகப்பாடகர் திருமாறன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி நிகழ்வுகள் செய்யப்பட்டதை ஆதாரத்துடன் மக்களுக்கு தெரியப்படுத்திய பின்பு விழிப்படைந்த தேசிய ஊடகம் என்ற பெயரில் இயங்கும் பதிவு,சங்கதி இணையத்தளங்கள் தங்கள் தவறுகளை மக்களிடம் தெரியப்படுத்தாமல் தங்கள் ஊடகத்தில் இருந்து திருமாறன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய படத்தினை மட்டும் நீக்கியமை என்பதன் ஊடாக இவர்களின் செயற்பாட்டின் உண்மை தன்மையினை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே போல பிரான்சில் உள்ள தங்களை தாங்களே தமிழர் ஒருகிணைப்பு குழு என்று சொல்லி கொள்ளும் நபர்களை தொடர்பு கொண்ட போது இதற்கான பதில்களை அவர்கள் தர மறுத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரான்சின் பொறுப்பாளர் என்ற பெயரில் உள்ள மகேஸ் என்பவரை தொடர்பு கொண்டு கேட்டபோது தான் வைத்த படம் சாந்தனின் படம் தான் என்றும் தங்களுக்கு அனைத்தும் தெரியும் என்றும்,அனால் தான் மேற்கொண்டு விசாரித்து பார்த்துவிட்டு தொடர்புகொள்ளுவதாக கூறினார் அனால் வழமை போல மக்களை ஏமாற்றும் செயலை செய்பவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல.

ரிரிசி என்ற அமைப்புக்குள் (மாவீரர் பணிமனையோ அல்லது மற்றயவர்களுக்கு) உள்ளவர்களுக்கு உண்மையில் சாந்தன் யார் திருமாறன் யார் என்று அறியும் ஆளுமை அற்றவர்களால் தான் இந்த நிர்வாகம் செயற்படுத்தபடுகின்றது என்பதை இச் செயல் மீண்டும் மக்களுக்கு உணர்த்தியுள்ளது.

செய்யும் தவறுக்கு குறைந்த பட்சம் ஒரு மன்னிப்பை கேட்கும் முறையினை இவர்கள் உணர்தால் அதுவே உயிருடன் உள்ள திருமாறனுக்கு இவர்கள் செய்யும் நன்றிக்கடன்.