மகிந்தவில் தொங்கி நிற்கும் கருணாவின் கட்சி குண்டர்கள்!

Home » homepage » மகிந்தவில் தொங்கி நிற்கும் கருணாவின் கட்சி குண்டர்கள்!
மகிந்தவில் தொங்கி நிற்கும் கருணாவின் கட்சி குண்டர்கள்!

மட்டக்களப்பில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைவராகவும், இராணுவ புலனாய்வு செயல்பாட்டாளர் கமலதாஸ் என்பவரை செயலாளராகவும் கொண்டு மட்டக்களப்பில் மட்டும் ஏற்படுத்திய புதிய அரசியல் கட்சியான “தமிழர் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பு” குண்டர்கள் மன்னிக்கவும் தொண்டர்கள் நேற்று 24/05/2017ல் முன்னாள் ஐனாதிபதி மகிந்தராஷபக்‌ஷவை கொழும்பில் சந்தித்து எதிர்கால கிழக்குமாகாணசபை மற்றும் உள்ளூராட்சிசபை தேர்தலில் எப்படி குழுபறிக்கலாம் என்ற ஆலோசனையை மகிந்தராஐபக்‌ஷவிடம் இருந்து பெற்றனர்.
இதன்போது கருத்துதெரிவித்த கருணா தனக்கும் சிலவேளை உள்ளேதள்ள சிலர் முனைவதாகவும் அப்படி தேர்தலுக்குமுன்
உள்ளே போனால் கமலதாஷ் அண்ணர் எல்லாம் செய்வார் எனக்கூறினார்.
இதற்கு பதில்கூறிய மகிந்த அரசாங்கம் விரைவில் கலையும் முடிந்தால் உள்ளூராட்சி தேர்தலை நடத்தட்டும் நான்யார் என நல்லாட்சியாளர்களுக்கு காட்டுவேன் நீங்கள் கிழக்கு மாகாணத்தில் மக்களை உள்வாங்கி உங்கள்கட்சியை பலப்படுத்தப்பாருங்கள் நான் தேவையான நிதிகளை தருவேன் என உறுதியளித்ததாகவும் அறியமுடிகிறது. பிள்ளையானைப் பற்றியும் மகிந்த விசாரித்து கவலைகொண்டதாகவும் அதற்கு கருணா இப்போதைக்கு பிள்ளையான் வெளிவரவாய்பு இல்லை இன்னுமொருவன் இப்போ மாட்டியுள்ளான் அவன் என்ன சொல்கிறானோ தெரியாது என முகம்சுழித்து கூறியதாகவும் அறியமுடிகிறது.
இதேவேளை கருணாவுடன் சென்ற குண்டர்கள் மகிந்தவுடன் நின்று படம் எடுக்க ஆசைப்படுகிறார்கள் என கருணா கூறுய போது மகிந்த சிரித்துக்கொண்டை”கமக்நே” என சிங்களத்தால் கூறியதும் அங்குசென்றவர்கள் மணவறையில் படம் எடுப்பது போன்று மகிந்தராஐபக்சவுடன் நின்றுபடம் எடுத்துக் கொண்ட தாகவும் அறியமுடிகிறது,

Comments Closed

%d bloggers like this: