இந்தியா

ரஜினி புது கட்சி: அண்ணன் விளக்கம்!

நடிகர் ரஜினிகாந்த் ஜூலை மாதத்தில் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவலை அவரது சகோதரர் சத்யநாராயணா மறுத்துள்ளார்.

ரசிகர்களுடன், 2-ம், 3-ம் கட்ட சந்திப்புகள் முடிந்த பிறகே ரஜினிகாந்த் இறுதி முடிவு எடுப்பார் என்று கூறினார். மேலும், அடுத்தடுத்து திரைப்பட வேலைகள் இருப்பதால், உடனடியாகk கட்சி குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

விரிவான யோசனைக்குப் பிறகே, அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிட வாய்ப்பிருப்பதாக ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா விளக்கம் அளித்துள்ளார்.