தமிழ் புலம்பெயர்

லண்டனில் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தமிழருக்கு சிறை!

லண்டனில் பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தமிழர் ஒருவரை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
32 வயதான சிந்துஜான் யோகநாதன் என்ற தமிழரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தனக்கு சொந்தமான Audi காரில் வைத்து இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு லண்டன் பகுதியில் Perivale,Northolt மற்றும் Harrow பகுதிகளில் வைத்து ஆறு பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிந்துஜான் யோகநாதனிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையின் மூலம் சில விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகநபரின் வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது, ஸ்கொட்லாந்து கால்பந்தாட்ட சிரூடை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த சிரூடைய அணிந்திருந்த வேளையில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் சாட்சியம் தெரிவித்துள்ளார்.
சிந்துஜானால் பாதிக்கப்பட்ட ஏனைய பெண்களும் அவரை அடையாளம் காட்டியுள்ளனர்.
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெற்றதாக விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான வழக்கு Isleworth Crown நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சிந்துஜான் தனக்கு எதிரான குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபரை அடுத்த மாதம் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.