மகேஸ்வரி நிதியம் தொடர்பில் ’டக்ளஸிடம் கேளுங்கள்’ – சந்திரகுமார்

Home » homepage » மகேஸ்வரி நிதியம் தொடர்பில் ’டக்ளஸிடம் கேளுங்கள்’ – சந்திரகுமார்
மகேஸ்வரி நிதியம் தொடர்பில் ’டக்ளஸிடம் கேளுங்கள்’ – சந்திரகுமார்

“மகேஸ்வரி நிதியத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை. அதனை ஈ.பி.டி.பியிடம் தான் கேட்க வேண்டும்” என, சமூக நீதிக்கும் சமத்துவத்துக்குமான அமைப்பின் தலைவரும் முன்னாள் ஈபிடிபி உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் கட்டுப்பாட்டு விலைக்கு மக்களுக்கு மணல் வழங்குமாறு கோரி, சமூக நீதிக்கும் சமத்துவத்துக்குமான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில், கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று, கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் கலந்து கொண்ட சந்திரகுமாரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியபோது, “கடந்த காலங்களில் திட்டமிட்டு மக்கள குறைந்த செலவில் மணல் வழங்கப்பட்டன, சட்டவிரோத மணல் அகழ்வுகளை முன்னர் நான் கட்டுப்படுத்தியிருந்தேன்” என்றார்.
மகேஸ்வரி நிதியம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போது, அவ்விடத்திலிருந்து விலகிய சந்திரகுமார், “மகேஸ்வரி நிதியம் தொடர்பில் என்னிடமல்ல. டக்ளஸ் தேவானந்தாவிடம் கேளுங்கள்,நான் தற்போது ஈபிடிபியில் இல்லை” என செல்லிக்கொண்டு நகர்ந்தார்.

Comments Closed

%d bloggers like this: