ரிசிசி வன்முறைக்குழுவின் நிதிசேகரிப்பில் கஜேந்திரகுமார் குழுவினருக்கும் பங்கு.

Home » homepage » ரிசிசி வன்முறைக்குழுவின் நிதிசேகரிப்பில் கஜேந்திரகுமார் குழுவினருக்கும் பங்கு.
ரிசிசி வன்முறைக்குழுவின் நிதிசேகரிப்பில் கஜேந்திரகுமார் குழுவினருக்கும் பங்கு.

தமிழ்தேசிய சொத்துக்களை களபரம் செய்துள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் புலம்பெயர்நாடுகளில் மீண்டும் நிதிசேகரிப்பில் ஈடுபட்டுள்ளமையை ஏற்கனவே வெளியிட்டுருந்தோம். ரிசிசி வன்முறைக்குழுவினர் டென்மார்க் சட்டங்களையும் மீறி வீடு வீடாக சென்று நிதிசெகரிப்பில் இப்பொழுது ஈடுபட்டுள்ளமை ஆதாரங்களுடன் எமக்கு கிடைக்கப்பட்டுள்ளது.
தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பினாமி அமைப்புக்களின் ஒன்றியமாக செயல்படும் டென்மார்க் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தின் Spar Nord வங்கியில் உள்ள கணக்கிலகத்திற்கு மாதம் மாதம் பணம் செலுத்தும் ஒப்பந்தத்தில் மக்களை கையெழுத்து ஈடுமாறு வேண்டியே இந்த நிதிசேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். குறைந்தது மாதாந்தம் 50 குரோண்கள் தம்மால் அறவிடப்படும் எனகூறிவரும் ரிசிசியினர் தமது முன்னால் நிதி சேகரிப்பு தொடர்பாகவோ தமிழ்தேசிய சொத்துக்கள் தொடர்பாகவோ கேள்விகள் எதுவும் வினாவக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர.
தமது நிதி சேகரிப்பு டென்மார்க் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்திற்கான அங்கத்துவம் பணம் இல்லை எனவும் பொதுக்கூட்டம் நடாத்தக்கூறியோ கணக்கறிக்கை கேட்டோ தம்மை தொடபுகொள்ளக்கூடாது எனவும் நிதிசேகரிப்பில் ஈடுபட்டுள்ள குட்டி (விடுதலை, மயூரன்) நேசன் மற்றும் இவர்களால் நியமிக்கப்பட்டுள்ள நகர பொறுப்பாளரும் கூறியுள்ளனர்.
தம்மால் சேகரிக்கப்படும் நிதி தாயகத்தில் கஜேந்திரகுமார் குழுவினரின் அரசியல் செயல்பாட்டிற்கும் தமது செயல்பாட்டிற்கும் எனகூறியுள்ளனர்.
தமிழ்மக்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள்.
தமது செயல்பாட்டாளர்கள் தொடர்பாக பிழையாக கதைத்தால் ஜெனிவா பாரிசில் வைத்து அடிப்பது மட்டுமல்ல கதைப்பவர்களின் குடும்பத்திற்கும் செய்யமுடியும் என அண்மையில் தமிழ் மகன் ஒருவர் குட்டியால் மிரட்டப்பட்டுள்ளார். டென்மார்கில் நடைபெற்ற கடந்த முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் முன்னால் போராளிகளுக்கு உதவுவதற்காக நடைபெறவிருந்த நிகழ்வு ஒன்றின் நுளைவுசீட்டை விற்பனை செய்த மனிதநேய செயல்பாட்டாளர் ஒருவரை தாக்கவும் ரிசிசி குழுவினர் முயற்சித்திருந்தனர்.
அண்மையில் டென்மார்க்கில் ரிசிசி குழுவால் துரோகி என அழைக்கப்பட்ட தமிழ்மகன் ஒருவர் தமது ஆதங்கத்தை குறுஞ்செய்தியாக தமது நணபர்களுக்கு அனுப்பியதற்காக குட்டியால் மிரட்டப்பட்டதுடன் மறுப்பறிக்கை விடவேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டார்.
அதே போன்று பல்வேறு நாடுகளில் வன்முறைகுழுவாக தண்டிக்கப்பட்டுள்ள ரிசிசி குழுவினர் தமது செயல்பாட்டாளர்களை பிழையாக கதைத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

Comments Closed

%d bloggers like this: