நீதியரசர் கொலை முயற்சியுடன் போராளிகளை தொடர்புபடுத்தியமைக்கு முன்னாள் போராளிகள் கண்டனம்!!

Home » homepage » நீதியரசர் கொலை முயற்சியுடன் போராளிகளை தொடர்புபடுத்தியமைக்கு முன்னாள் போராளிகள் கண்டனம்!!
நீதியரசர் கொலை முயற்சியுடன் போராளிகளை தொடர்புபடுத்தியமைக்கு முன்னாள் போராளிகள் கண்டனம்!!

நல்லூரில் நடைபெற்ற நீதியரசர் இளஞ்செளியன் மீதான கொலைமுயற்சியில் ஈடுபட்டவர் முன்னாள் போராளி என பொய்யான செய்தி வெளியிட்ட ஊடகங்களை முன்னாள் போராளிகள் கண்டித்துள்ளதுடன் தமது ஊடக எழுச்சிக்காக தாமே ஊகித்து தயாரிக்கும் பொய்யான செய்திகளை எமது மக்கள்மத்தியில் பரப்பிவரும் இணைய மற்றும் அச்சு ஊடகங்களை தாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனவும்;

“எமது புனிதமான அமைப்பின் பெயரை கொச்சைப்படுத்தமுனையும் நாசகாரிகள் மத்தியில் எமது மக்கள் தாம் விழிப்புடன் இருந்து அவர்களை இனங்கண்டு செயற்படவேண்டும்”

எனவும் முன்னாள் போராளிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
முன்னாள் போராளிகளின் கண்டன முழுமையான அறிக்கை>>>>>>>

முன்னாள் போராளிகள் எச்சரிக்கை!

கொலை குற்றவாளிகளுடனும், காவாலிகளுடனும் எமது போராளிகளை தொடர்புபடுத்தி சில இணையங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டுவருவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்!

யாழ் நீதியரசரை கொலை செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை குறிவைத்து தாக்குதல் நடத்தியவர் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரென குறிப்பிட்டு புலம்பெயர் தேசத்திலிருந்து இயங்கிவரும் பிரதான இணையமான தமிழ்வின் இணையம் தமது இணையப் புரட்சிக்காக உருவாக்கிய ஆதாரமற்ற அப்பட்டமான பொய் செய்தியினை போராளிகளாகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

மேலும் அப்பாவி மக்களின் உயிர்களை காப்பதற்காக போராடிய எமது அமைப்பும் அதன் போரளிகளும், ஒரு மிகப்பெரும் அநீதியை செய்தவர்களுக்காக தாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் விலைபோகமாட்டார்கள் என்பதை சுட்டிக்காட்டியதுடன்,எமது போராளிகளை குறிவைத்து திட்டமிட்டவகையில் சிலர் தமது அரசியல் ஆதாயத்திற்காக இப்படியான பொய்யான செய்திகளை எமது மக்கள்மத்தியில் பரப்பி எமது முன்னாள் போராளிகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முனைவதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மேலும் எமது புனிதமான அமைப்பின் பெயரை கொச்சைப்படுத்தமுனையும் நாசகாரிகள் மத்தியில் எமது மக்கள் தாம் விழிப்புடன் இருந்து அவர்களை இனங்கண்டு செயற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

இன்று எமது தாயகத்திலும்சரி,புலம்பெயர் தேசத்திலும்சரி இயங்கிவருகின்ற குறிப்பிட்டசில பிரதான ஊடகங்கள் தற்போதைய சுயலாபம் தேடும் நோக்கோடு செயற்பட்டுவருகின்ற அரசியல் தனிநபர்களின் கைகளுக்குள் தாம் அகப்பட்டு தமக்கான ஊடக தர்மத்தை மீறி அவரவர் தமக்கு ஆதரவான அரிசியல் அடிவருடிகளுடன் தாம் கைகோர்த்து செயற்பட்டுவருவதையே நாம் பொதுவாக அவதானிக்க முடிகின்றது.

மேலும் எமது தேசியத்தையும், எமது போராட்டத்தையும் தாம் ஆதரிப்பதாக எமக்கு போக்குக்காட்டிவிட்டு, மறுமுனையில் அதை தாமே அழிப்பதற்கு திரைமறைவில் கங்கணம்கட்டி செயற்பட்டுவருவதையும் நாம் அவதானித்துக்கொண்டே வருகின்றோம்.

ஆகவே தமது ஊடக எழுச்சிக்காக தாமே ஊகித்து தயாரிக்கும் பொய்யான செய்திகளை எமது மக்கள்மத்தியில் பரப்பிவரும் இணைய மற்றும் அச்சு ஊடகங்களை போராளிகளாகிய நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
நன்றி
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Comments Closed

%d bloggers like this: