இலங்கை தமிழ் புலம்பெயர்

இறுதிக் களத்தில் நடந்த உண்மைச் சம்பவங்கள்!

சுயநலவாத முட்டாள்களுக்காக நாம் ஆயுதம் ஏந்தி போராடவில்லை!

தமிழராக வாழாத முட்டாள்களுக்கு இது சமர்ப்பணம்!

முள்ளிவாய்க்காலில் போராளிகளாக எதிரிகளிடம் அகப்பட்ட போராளிகளில் சிலபத்துப் போராளிகளே காயங்கள் அற்றநிலையில் அகப்பட்டார்கள்.2006-2009mayவரைக்கும் படுகாயமடைந்த அதாவது போர்முனைக்கு போகமுடியாத போராளிகள் மட்டும் சுமார் 7000ம் பேர்வரை முள்ளிவாய்க்காலின் தறப்பாள் மருத்துவ நிலையங்களில் கடுமையான மருத்துவ நெருக்கடிகளுக்கு மத்தியில் உயிரோடு தினமும் போராடிக்கொண்டிருந்தார்கள். இவற்றைவிட ஒருசில வாரங்கள் இயக்கத்தில் இணைக்கப்பட்ட சில ஆயிரம் போராளிகளும் போராளிகள் என்ற தகுதிநிலையை முழுமையாக பெற்றிராத புதிய போராளிகளும் உள்ளடக்கம். மொத்தத்தில் எதிரியுடன் களமாடக்கூடிய நிலையில் இருந்த சிலநூறு போராளிகள் மட்டுமே முள்ளிவாய்க்காலின் சுற்றளவான இராணுவ அரண்களை எதிர்த்து போரிட்டபடிக்கொண்டிருந்தார்கள். அவர்களால் பின்னுதவியற்ற போரினை ஒரு சில நாட்கள் மட்டுமே நடத்தக்கூடியதாக இருந்தது.ஏனென்றால் சண்டையில் நின்ற போராளிகளுக்கு சாப்பாடென்பது தண்ணியாகக்கூட இருக்கவில்லை. ஆதலால் போராளிகள் களமுனையில் உண்ணாவிரதமிருந்தே போரிட்டுவந்தார்கள்.இத்தனைக்கும் நாளாந்தம் களமுனையில் கைகால்களை இழந்து காயப்பட்டவர்கள் அங்கேயே குப்பிகடித்து மடிந்தார்கள்.பின்தளம் என்பது அறவே செயலற்றதன் விளைவே இந்த அனியாயமான வீரமரணங்களுக்கு உண்மை காரணம். அதைவிட இறுதிப்போரில் போராளிகளின் கழுத்தில் பலருக்கு குப்பிகள்கூட இருக்கவில்லை’ஏனென்றால் ஒரு போராளி ஒரு களத்தில் காயப்பட்டால் அவரது குப்பிகள் அவரைவிட்டு அகற்றப்படும்’இது இயல்பான ஒரு நிகழ்வு.பின்னர் அவர் குப்பி அணியவேண்டுமானால் தலைமை செயலகத்தின் ஊடாகவே அனுப்பப்படுவது இயல்பு.ஆனால் முள்ளிவாய்க்காலின் முடிவுவரை ஒவ்வொரு போராளிகளும் பலதடவைகள் காயப்பட்டதனால் அவர்களுக்கான குப்பிகள் திருப்பி இயக்கத்தால் கொடுக்கப்படவில்லை’இதுதான் கள ஜதார்த்தம்.இவற்றை மனிதத்தன்மையோடு ஒப்புநோக்காத மிருகத்தனமான பிறவிகளே எமது போராளிகளை குப்பிகடிக்காமல் தப்பினார்கள் என்று கூறித்திரிகிறார்கள். 12000ம் என்பது போராளிகளாக தற்போது இருந்தாலும்,அவர்களில் அனேகமானவர்கள் காயப்பட்டு இயங்குநிலையற்று முள்ளிவாய்க்காலில் விழுந்திருந்தார்கள் என்பதே உண்மை. இந்த கள ஜதார்த்தத்தை புரிந்தவர்கள் எவரும் எமது போராளிகளை ஒருபோதும் விரல்மடிக்க முடியாது. களத்தில் காயப்பட்டு நினைவிழந்த பல போராளிகள் தாம் நினைவுதிரும்பி கண்விழித்தபோது திருகோணமலை,அனுராதபுரம் வைத்தியசாலைகளிலும், இராணுவ மருத்துவமனைகளிலும் தாம் இருந்த சம்பவங்களும் நிறைய நடந்துள்ளது.மேலும் சில முட்டாள்களின் தரவுகளின்படி 12000ம் போராளிகளும் உண்மையில் உயிரோட்டமான இயங்குநிலையில் இருந்திருந்தால் நிச்சயமாக அவர்கள் எதிரிகளிடம் அகப்படக்கூடிய களச்சூழலை ஒருபோதும் தாம் எதிர்கொண்டிருக்கமாட்டார்கள் என்பதே உண்மை.எமது ஒவ்வொரு தளபதிகளும் குறைந்தபட்சம் ஒவ்வொருவரும் முன்பு ஆயிரம் வரையான போராளிகளுக்கு தம்மை தளபதிகளாக நின்று பல மைல்கள் தொலைவான எதிரிகளின் காவலரண்களை தாம் கட்டுப்படுத்தி கண்காணித்தபோதும்,இறுதியில் அவர்கள் ஒவ்வொருவரும் தாமே போராளிகளாக மாறி முள்ளிவாய்க்கால் காவலரண்களில் சிலபத்து போராளிகளுடன்,சில பத்து மீற்றர் தூரங்களுக்கே அவர்கள் தளபதியாக நின்றார்கள்’தழிழீழத் தேசியத் தலைவரே மூன்றுமயில் சுற்றளவுக்குள் வந்துவிட்டாரென்றால்,இதைவிட அவரே தான் எதிரிகளை சுடக்கூடிய நேரடி களமுனைக்குள் வந்துவிட்டாரென்றால்,எமது சகல தளபதிகளும் தலைவருக்கு போராளிகளாகவே செயற்பட்டார்கள் இதுவே உண்மை. ஆகவே முள்ளிவாய்க்காலின் முடிவென்பது இயங்குநிலையற்ற போராளிகளின் ஒன்றுதிரட்சியின்மைதான் காரணமேயன்றி,அவர்கள் எவரும் ஒரு தரமான இயங்குநிலையில் நின்று போரிடக்கூடிய பின்தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கவில்லை என்பதே களத்தில் இறுதிவரை தமிழனாக வாழ்ந்த எனது நேரடி அனுபவமான கணிப்பீடாகும்.அந்நேரம் மூவாயிரம் போராளிகளை ஒருங்கிணைத்து அழிக்கப்பட்ட முல்லைத்தீவு இராணுவ முகாமை ஏன் நாம் முள்ளிவாய்க்காலில் பன்னீராயிரமாக இருந்தபோது அழிக்கமுடியாமல் போனதென்பதற்கான உண்மை காரணம் எமது போராளிகள் சண்டைபிடிக்கக்கூடிய இயங்குநிலையில் ஒருமித்து இருக்கவில்லை என்பதே உண்மை.இறுதிச் சண்டையின் சில கள நிலவரங்களின் உதாரணங்கள், அதாவது இரட்டை வாய்க்காலில் நூறு போராளிகள்வரை நின்று அப்பகுதியை தக்கவைத்துக்கொண்டிருந்தபொழுது,மறுமுனையில் வட்டுவாகலிலும் நூறு போராளிகள்வரை அப்பகுதி இராணுவத்தை தக்கவைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் கடுமையான விமானத் தாக்குதல்களாலும்,எறிகணை தாக்குதல்களாலும் அந்த களமுனைகளில் போரிட்டுக்கொண்டிருந்த போராளிகள் எதிரிகளால் அழிக்கப்படுகிறார்கள்.இதனால் எதிரிகள் வேகமாக முள்ளிவாய்க்காலுக்குள் உள்நுழைகிறார்கள். ஆங்காங்கே முள்ளிவாய்க்காலின் மத்திய பகுதிகளுக்குள் இருந்த எமது போராளிகள் அவரவர் நிலமை கைமீறிவிட்டதை உணர்ந்து தம்மை நெருங்கும் இராணுவத்தினரை அழித்து இறுதியில் தம்மையும் அழித்து மடிகிறார்கள்.இதற்குள் காயப்பட்ட போராளிகளிடம் குப்பியுமல்ல,ஆயுதமும் அல்ல.அவர்கள் செய்வதறியாது எதிரியிடம் அகப்படுகிறார்கள்.முற்றுமுழுதான மக்களுக்குள் கடுமையான போர் நடைபெறுகின்றது.இராணுவமும் போராளிகளும் பத்து பதினைந்து மீற்றர்,ஐம்பது மீற்றர் எனும் இடைவெளியில் அடிபடுவதை மக்களே நேரடியாக பார்க்கிறார்கள்.இறுதியில் பல போராளிகள் தமது ரவைகள் முடியும்வரை சண்டை நடக்கிறது.ரவைகள் முடிந்த நிலையில் தம்மை தாமே அழிக்கக்கூட ரவைகளற்ற நிலையில் பல போராளிகள் எதிரிகளுக்கே அந்த சந்தர்ப்பத்தை கொடுத்தார்கள்.எதிரிகளாலே அவர்கள் கொல்லப்பட்டார்கள்.இதுவே முள்ளிவாய்க்காலில் நாம் இறுதிவரை கண்ட கண்ணீர் வரலாறுகள்.இதை தற்காலத்தில் கொச்சைப்படுத்தமுனையும் தமிழ் முட்டாள்களை நாம் எப்படி இதற்குமேல் அவர்களுக்கு விபரித்து சொல்வதென்பது எமக்கு புரியவேயில்லை. உண்மையில் முட்டாள்தனமாக தம்மை அறிமுகப்படுத்தி இணையத்தில் எமது போராளிகளின் தியாகங்களை கொச்சைப்படுத்திவரும் போலியான தமிழர்களுக்காக நாம் எம்மை அர்ப்பணித்து ஒருபோதும் போராடவில்லை என்பதனை தினமும் முட்டாள்தனமாக சிந்திக்கும் ஈவிரக்கமற்ற பிறவிகளே இதை விளங்கிக்கொள்ளுங்கள்.
நன்றி
“எல்லாளன்”