இலங்கை தமிழ்

முன்னாள் போராளிகளை சிறையில் அடைக்க சதி.

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட போராளிகளை இலக்கு வைத்து பல்வேறு சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என ஜனநாயக போராளிகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே குறித்த கட்சியினர் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சமகால அரசியல் தொடர்பிலும் பல்வேறு கருத்துக்கள் வெளியிட்ட ஜனநாயக போராளிகள் கட்சியினர், யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்தியுள்ளமை குறித்தும் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்றையதினம் புனர்வாழ்வளிக்கப்பட்ட நுண்கலைக் கல்லூரியில், இசைத்துறையில் கடமையாற்றிய கண்ணதாசன் மீது பயங்கரவாதப்பிரிவு தாக்கல் செய்த வழக்கின் பிரகாரம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டமை தொடர்பிலும் ஜனநாயக போராளிகள் கட்சியினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.