எமது முன்னாள் போராளிகளை மீண்டும் கைதுசெய்ய முற்படும் இலங்கை அரசை கண்டிக்க ஜனநாயகப் போராளிகளின் தலைமையில் மக்களே தயாராகுங்கள்!

Home » homepage » எமது முன்னாள் போராளிகளை மீண்டும் கைதுசெய்ய முற்படும் இலங்கை அரசை கண்டிக்க ஜனநாயகப் போராளிகளின் தலைமையில் மக்களே தயாராகுங்கள்!
எமது முன்னாள் போராளிகளை மீண்டும் கைதுசெய்ய முற்படும் இலங்கை அரசை கண்டிக்க ஜனநாயகப் போராளிகளின் தலைமையில் மக்களே தயாராகுங்கள்!

எமது இனத்தின் விடுதலைக்காக போராடிய எம்மை தமது இனத்துக்கெதிராக போராடிய குற்றத்திற்காக அவர்கள் எம்மை நீதியின்முன் நிறுத்தி தண்டிக்க முடியுடென்றால்,எமது இனத்துக்கெதிராக போராடிய குற்றத்திற்காக அவர்களின் இராணுவத்தினரையும்,ஒட்டுப்படைகளையும் நீதியின்முன் நிறுத்தி இலங்கை நீதிமன்றம் தமது சிறைகளில் தள்ளுமாயின் நாமும் சிறைசெல்ல எவ்வேளையும் தயார்.

இலங்கை அரசானது தனது நீதித்துறையை காலா காலமாக எமது இனத்திற்கெதிராக பயன்படுத்திவருவதை தமிழர்களாகிய நாம் தொடர்ந்தும் இதை அனுமதிக்க முடியாது.

இலங்கையில் வாழ்கின்ற சிங்களவர்களும், தமிழர்களும் ஒரே நாடு ஒரே தேசம் என்றுதான் வாழவிரும்புவதாக இந்த உலகத்தை தொடர்ந்து ஏமாற்றிவரும் சிங்கள ஆட்சியாளர்கள்,தாம் சொல்வதொன்று செய்வதொன்று என்ற பொய்மையையும், பிரிவினைப் போக்கினையுமே தாம் தொடர்ந்தும் தமிழர்களிடத்தில் நிஜத்தினில் காண்பித்துவருகிறார்கள்.

ஆகவே சிங்கள ஆட்சியாளர்களின் இந்த பிரித்தாளும் நயவஞ்சக போக்கினை தமிழர்களாகிய நாம் தற்காலத்தில் தட்டிக்கேட்காது அடங்கி ஒடுங்கி சிங்களவர்களோடு அடிமைகளாய் சேர்ந்துவாழ முற்படுவோமேயானால், சிங்களவர்களின் நீதிமன்றையும் அவர்களின் சிறைச்சாலைகளையும் தமிழர்களாகிய நாம்தான் அடிக்கடி சென்று துப்பரவாக்கவேண்டிய துற்பாக்கிய நிலை ஏற்படும் என்பதனையும் இங்கே நினைவூட்ட விரும்புகின்றோம்.

மேலும் ஒரு முக்கியமான விடையம் என்னவெனில், எமது ஆயுதப்போராட்டம் நிகழ்ந்த காலத்தில் இலங்கை அரசுக்கு துணைபோன எந்தவொரு ஒட்டுப்படைகளுக்கும் இதுவரை இலங்கை அரசோ அன்றி அதன் நீதித்துறையோ இல்லையேல் எமது மக்களோதன்னும் இந்த ஒட்டுப்படைகள் செய்த ஆட்கடத்தல் மற்றும் கொலைகள் தொடர்பாக எந்தவித முறைப்பாடுகளையும் அவர்களுக்கெதிராக தாம் பதிவுசெய்யாது, மிகப்பெரிய கொலைபாதகர்களை தம்முடன் அரவணைத்துப்போகும் எமது இனத்தவர்களின் மனப்பாங்கிற்கு ஓர் அளவேயில்லையா?

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளாக நாம் ஆயுதம் தரித்திருந்த காலத்தில் இந்த ஒட்டுப்படைகளுக்கெதிராக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் எமது மக்களாகிய உங்களின் சுதந்திரமான உயிர்வாழ்விற்காகவேயன்றி,அவர்களை வேறெதற்காகவும் நாம் தண்டிக்கவில்லை.

எனவே இதுவரை எவராலும் தண்டிக்கப்படாதிருக்கும் இவ் ஒட்டுப்ப்களைச் சேர்ந்த கொலைபாதகர்களுக்கெதிராகவும் நாம் சட்டரீதியாக போராட முன்வரவேண்டும் என்பதுடன்,இலங்கை அரசின் எமது போராளிகள்மீதான திட்டமிட்ட மறு கைது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கான சர்வதேச அழுத்தங்களை எமக்காகப் போராடிய எமது போராளிகளுடன் நாமும் ஒருமித்து கைகோர்த்து இலங்கை அரசுக்கெதிராக ஒரு பாரிய கண்டன பேரணியை தமிழர் தாயகத்தில் நிகழ்த்தி உலக நாடுகளின் ஒவ்வொரு தூதுவராலையங்களுக்கும் மகஜர்களை அனுப்பி இலங்கை அரசின் திட்டமிட்ட இனக்குரோத கைது நடவடிக்கைகளை காட்டமாக கண்டிக்க எம் தாய்த்தேச உறவுகள் அனைவரும் தயாராகவேண்டும்.

Comments Closed

%d bloggers like this: