டென்மார்க்கில் வயில நகரில் நடைபெற்ற மாவீரர்நாள் 2008

Home » homepage » டென்மார்க்கில் வயில நகரில் நடைபெற்ற மாவீரர்நாள் 2008

டென்மார்க்கில் மாவீரர்நாள் 2008 27 ஆம் திகதி கார்த்திகைதிங்களான இன்று வயில நகரில் மதியம் 12 மணியளவில் மிகவூம் எழுச்சிபூர்வமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதில் சுயநல இன்பங்களை துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து இந்தச் சத்திய இலட்சியத்திற்காகாகச் சாவை தழுவிய ஏறத்தாழ 65 உத்தமர்களிற்காக மிகவூம் எழுச்சி பூர்வமான அழகான முறையில் நினைவூத்தூபிகளும் கல்லறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மாவீரர்களின் பெற்றௌர்களும் சகோதரர்களும் கௌரவிக்கப்பட்டு சபையில் முதல் வரிசையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த தேசியநிகழ்வூகளின் வரிசையில் கொடியேற்றம் பொதுச்சுடரேற்றம்இ அகவணக்கம செலுத்தப்பட்டதைத் அடுத்து எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகின்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மாவீரர் உரை அகன்ற பிரமாண்டமான திரையில் காண்பிக்கப்படவிருக்கின்றது. துயிலும் இல்லப்பாடல் ஈகைச்சுடரேற்றம் போன்ற முக்கியமான நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தமிழகத்தில் இருந்து வருகைதந்துள்ள தமிழகமாநில அமைப்பாளரும் மற்றும் நம்வேர்களின் சிறப்பாசிரியருமான அருள்திரு அரிமாவளவன் அவர்கள் சிறப்புரை ஆழ்த்தவூள்ளார்.

தற்போது எமது வன்னிமக்களின் அவலம் கண்டு தமிழகத்திலும் புலம்பெர் நாடுகளிலும் எழுந்துள்ள ஆதரவூ அலைகள் எமது மக்களின் மனதில் இந்த நிகழ்வில் எப்படியாவது கலந்துகொள்ள வேண்டுமென்ற மனநிலையை உருவாக்கியிருப்பதை இங்கு வருகைதந்துள்ள பெரு மக்களின்தொகை காட்டுகின்றது.


%d bloggers like this: