ஜனநாயகப் போராளிகள் எவரும் ஒழுக்க பழக்கவழக்கங்களை மீறமுடியாது!- எல்லாளன்

Home » homepage » ஜனநாயகப் போராளிகள் எவரும் ஒழுக்க பழக்கவழக்கங்களை மீறமுடியாது!- எல்லாளன்
ஜனநாயகப் போராளிகள் எவரும் ஒழுக்க பழக்கவழக்கங்களை மீறமுடியாது!- எல்லாளன்

எமது போராட்டத்தின் வடிவங்கள் மாறினாலும் அதன் இலக்கும், பழக்கவழக்கமும் எமது உறுதியான போராளிகளிடம் என்றுமே மாறாது!

ஒரு மனிதன் எனப்படுபவன் தான் ஒரு முழு மனிதானக இருப்பதற்கு அவன் தன்னை சுற்றியிருக்கும் அபாயகரமான போதைப் பொருட்களை தான் உபயோகப்படுத்தாமல் தவிர்த்தால் மட்டுமே அவனால் இயல்பான மனிதனாக எப்போதும் இருக்கமுடியும்.

அந்தவகையில் இந்த போதை உலகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளாக தொடர்ந்தும் தம்மை நிலைநிறுத்தி வாழ்பவர்கள் எவரும் கடந்த 2009ம் ஆண்டின் பின்னரும் தமக்கு தாமே கட்டுப்பாடுகளை விதித்து எமது தேசியத் தலைவரின் ஒழுக்கமான போராளிகளாக தொடர்ந்தும் இருந்துவருகிறார்கள்.

இங்கே தமது போராட்ட வடிவத்தை மாற்றி இன்று ஜனநாயகப் போராளிகளாக வீற்றிருக்கும் எமது போராளிகள்கூட இதற்கு தகுந்த சான்றே.

இவர்கள் தாம் அன்று வரியுடை தரித்து புலியாக இருக்கும்போது எப்படியான பழக்கவழக்கங்களை பின்பற்றிவந்தார்களோ, அதே பழக்கவழக்கங்களையே இன்றும் தாம் பின்பற்றி இந்த போதை உலகத்தில் நிதானமாகவும் ஒழுக்கமாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.

உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளாக எமது போராளிகள் இன்று தாம் ஆயுதம் தரித்திருக்காவிட்டாலும்,அவர்கள் தம்மை ஜனநாயகப் போராளிகளாக மாற்றி தொடர்ந்தும் தமக்கான கட்டுப்பாடுகளை தாமே போட்டு ஒழுக்கமாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

கடந்த 2009ம் ஆண்டின் போர்முடிவின் பின்னர் எமது இயக்கம் தமது ஆயுதங்களை மௌனித்து ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தபோதும்,அது அரசியல் வழிகளில் தொடர்ந்தும் போராடும் என்பதற்கு முதன்மையான சான்றாக தற்போதைய ஜனநாயகப் போராளிகளின் உருவாக்கமே ஓர் எடுத்துக்காட்டாகும்.

மேலும் பிழை செய்பவர்களால் ஒருபோதும் பிழை செய்பவரை தட்டிக்கேட்க முடியாதென்பதை உணர்ந்தே எமது தேசியத் தலைவர் அவர்கள் தன்னையும் தனது அமைப்பின் போராளிகளையும் அவர்கள் பிழைவிடுவதற்கு உடந்தையாக இருந்த போதைப் பொருட்கள் அனைத்தையும் கட்டாயமாக எமது போராளிகள் பாவிக்கமுடியாதென தான் தடைகளை விதித்து தனது போராளிகளை தூய்மைப்படுத்தினார்.

அதனால்தான் எமது போராளிகளை சாதாரண மனிதர்களிலும் வித்தியாசமானவர்கள் என்று இந்த உலகமே எமது போராளிகளை வியந்துபார்த்ததென்பது வரலாறு.

ஆகவே தற்காலத்தில் எமது போராளிகள் தாம் அரசியல் போராளிகளாக மாறியுள்ளார்களேயன்றி, தமது அமைப்பின் பழக்கவழக்கங்களை உறுதியான போராளிகள் எவரும் இதுவரை தாம் மாற்றவில்லை என்பதே உண்மை.

குறிப்பு:தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகியவர்கள் அல்லது விலக்கப்பட்டவர்கள் எவருக்கும் இந்த கட்டுப்பாடுகள் எவையும் பொருந்தாது. ஆனாலும் விலகிய பல முன்னாள் போராளிகள் இன்றும் தம்மை ஒழுக்கமுள்ளவர்களாகவே நிலைநிறுத்தி சமூகத்தில் வாழ்ந்துவருவதையும் யாரும் மறுக்கமுடியாது.
நன்றி

Comments Closed

%d bloggers like this: